7 வருசம் கழிச்சு பெட்ரோல்/டீசல் வாகனம் ஓட்டுபவர்களை எல்லாம் பூமர் அங்கிள்னு கூப்டுவாங்க! இப்பவே உஷாராகிடுங்க

எலெக்ட்ரிக் வாகன விற்பனை அதிகமாகி வரும் நிலையில் 2030ம் ஆண்டு எவ்வளவு எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகும் என ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே வருகிறது ஒவ்வொரு பிரிவு வாகனங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இதின் விற்பனை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனச் சந்தை எப்படி இருக்கிறது என்பது குறித்த ஆய்வு ஒன்றை ரெட்சீர் நிறுவனம் நடத்தியுள்ளது.

7 வருசம் கழிச்சு பெட்ரோல்/டீசல் வாகனம் ஓட்டுபவர்களை எல்லாம் பூமர் அங்கிள்னு கூப்டுவாங்க! இப்பவே உஷாராகிடுங்க

அதன் படி இந்த உலகத்தில் 2030ம் ஆண்டு எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கான 22 மில்லியனாக வளரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த விலை பயணம், மாசு கட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகரத் துவங்கியுள்ள நிலையில் இது மிகப்பெரிய சந்தையாக மாற்றம் பெறவுள்ளது.

இந்தியாவில் கடந்த 2022ம் ஆண்டு ஆட்டோமொபைல் துறையில் நடந்த விற்பனையின் அடிப்படையில் ஒட்டு மொத்த வாகன விற்பனையில் 3 சதவீதம் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது எலெக்ட்ரிக் டூவீலர் விற்பனையும் சேர்த்ததாகும். விரைவில் இது மிகப்பெரிய அளவில் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வளர்ந்த நாடுகள் மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கான சந்தையான சீனா மற்றும் அமெரிக்காவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை பல மடங்கு அதிகமாகிவிட்டது. முறையே 56 மற்றும் 63 சதவீதமாக இருக்கிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை தற்போது ஆரம்பக் கட்டத்தில் தான் இருந்தாலும் எதிர்காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

இந்திய வாடிக்கையாளர்கள் பலர் வாகனத்தை வாங்குவதற்கான விலையை மட்டுமல்லாமல் அதற்கான எரிபொருள் செலவுகளை எல்லாம் கணக்கிட்டு ஒப்பீட்டால் எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆரம்பத்தில் அதிகப் பணம் செலவு செய்ய வேண்டியதாக இருந்தாலும் ஒட்டு மொத்த செலவில் லாபகரமாக இருப்பதால் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும் இந்தியாவில் பல நம்பகமான பிராண்டுகள் எல்லாம் எலெக்ட்ரிக் வாகன விற்பனையைத் துவங்கிவிட்ட நிலையில் மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான நம்பத் தன்மை அதிகமாகிவிட்டது. இது போக அரசும் எலெக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்குவிப்பதால் மக்கள் இதை விரும்பி வாங்கி வருகின்றனர். வாகன தயாரிப்பாளர்களும் தயக்கமின்றி தயாரிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்தியாவில் இதற்கான மார்கெட் பெரியதாகப் பெரிதாக இதன் மீதான கட்டுப்பாடுகள் அதிகமாகிக்கொண்டே செல்லும், மேலும் இந்த செக்மெண்டில் தொடர்ந்து போட்டியாளர்கள் அதிகமாகி வருவதால் பல புதுமையாகத் தயாரிப்புகள் வரத் துவங்கிவிட்டனர். மேலும் மக்களுக்கு சார்ஜிங் இன்ஃப்ராஸ்டெக்ஷர், ரேஞ்ச் குறித்து மக்கள் அதிகம் கவலைப்படுவதும் குறைந்துவிட்டது.

எந்த பயன்பாட்டிற்காக வாகனத்தை வாங்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கின்றனர். இருந்தாலும் லோயர் மிடில் கிளாஸ் மக்களுக்கு ரோஞ்ச் மிகப்பெரிய பிரச்சனையாகத் தெரிகிறது. இவர்கள் மட்டுமே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க லேசான தயக்கத்தைக் காட்டி வருகின்றனர்.

மத்திய மாநில அரசுகள் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியங்களை வழங்கி வருகின்றனர். இதை மேலும் சில ஆண்டுகளுக்குத் தொடர்ந்தால் மட்டுமே எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கும். எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளும் பக்குவம், தெளிவு, வாய்ப்பு மற்றும் பொருளாதார வசதிகள் இருக்க வேண்டும். இவை எல்லாம் சரியாக இருந்தால் 2030ம் ஆண்டு 80 சதவீதம் எலெக்ட்ரிக் வாகனங்கள் தான் விற்பனையாகும் என இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
A study on electric two wheeler says massive growth in 2030 know details
Story first published: Thursday, February 2, 2023, 12:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X