இவ்ளோ கம்மி விலையானு ஊரே வாயை பிளக்குது! லேப்-டாப் தயாரித்து வந்த நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்த இ-ஸ்கூட்டர்

தாய்வானைச் சேர்ந்த பிரபல மின்சாதன உற்பத்தி நிறுவனமான ஏசர் (Acer) இந்தியாவின் மின்சார இருசக்கர வாகன சந்தையில் தன்னுடைய கால் தடத்தை பதித்து இருக்கின்றது. உலகின் முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் கால் தடம் பதித்து வரும் நிலையில், இந்த மின்சாதன உலகின் ஜாம்பவான் நிறுவனமும் நாட்டில் கால் தடம் பதித்து இருப்பது இந்தியர்களை மேலும் பெருமிதம் அடையச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது என்றே கூறலாம்.

தன்னுடைய வருகையை பதிவு செய்யும் விதமாக அந்நிறுவனம் முவி 125 4ஜி (Muvi 125 4G) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை வெளியீடு செய்திருக்கின்றது. இதுவே நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலும்கூட. நகர பயன்பாட்டை கருத்தில் கொண்டே இந்த வாகனத்தை ஏசர் நிறுவனம் வடிவமைத்து இருக்கின்றது.

Acer muvi 125 4g

ஆகையால், மிக சிறந்த பயன்பாட்டு வசதியை இந்த வாகனம் நகர பயன்பாட்டின்போது வழங்கும் என தெரிகின்றது. இதன் வெளியீட்டைத் தொடர்ந்து விலைகளும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. ரூ. 99,999 இந்த விலையே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இந்த வாகனத்தை அந்நிறுவனம் ஸ்டார்ட் அப் நிறுவனமான திங்க் இ-பைக்-கோ வாயிலாக வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு பணிகள் ஆகியவற்றை மேற்கொண்டிருக்கின்றது. இது ஓர் மும்பையை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஆகும். ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த நிறுவனமே ஏசர் பிராண்டுக்கான மின்சார வாகனங்களை உற்பத்தியும் செய்ய இருக்கின்றது.

Acer muvi 125 4g side view

இரண்டு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி மூன்று சக்கர வாகனங்களும் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. இந்த நிலையிலேயே முவி 125 4ஜி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் மிகக் குறைவான விலையில் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த வாகனத்தை தேவைக்கேற்ப கஸ்டமைஸ் செய்தும் விற்பனைக்கு வழங்க இருப்பதாக ஏசர் தெரிவித்து உள்ளது.

பிசினஸ்-டூ-பிசினஸ் (B2B) பயன்பாட்டிற்கு உதவும் விதமாக இந்த ஆப்ஷனை அது அறிவித்து இருக்கின்றது. ஆகையால், டெலிவரி சேவை நிறுவனங்கள் மற்றும் பிற வணிக ரீதியான பயன்பாட்டிற்கு இந்த வாகனம் பெரும் உதவியாக இருக்கும். இந்த வாகனத்திற்கு அரசின் மானிய திட்டமும் பொருந்தும்.

பல்வேறு சிறப்பு வசதிகளைத் தாங்கிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இது காட்சியளிக்கின்றது. குறிப்பாக, எளிதில் சார்ஜ் செய்துக் கொள்ள ஏதுவாகவும், தடையில்லா பயணத்தை உறுதி செய்வதற்காகவும் ஸ்வாப்பபிள் பேட்டரி பேக் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. அதாவது பேட்டரி பேக்கை தனியாக கழட்டி வெளியில் எடுத்துக் கொள்ளும் வசதிக் கொண்ட பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

ஆகையால், இந்த பேட்டரியை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று சார்ஜ் செய்துவிட்டு பின்னர் மீண்டும் வாகனத்தில் பொருத்தி பயன்படுத்திக் கொள்ள முடியும். இதுதவிர, ஸ்வாப்பபிள் பேட்டரி மையங்களில் கட்டணத்தைச் செலுத்தி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரி பேக்கை பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.

இதுதவிர, இன்னும் ஏராளமான வசதிகளையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஏசர் வழங்கி இருக்கின்றது. இதன் சேஸிஸ்கூட மிகவும் இலகுவானது என கூறப்படுகின்றது. அத்துடன், 16 அங்குல வீல்கள் அழகிய தோற்றத்தில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இவையே எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு தனித்துவமான மற்றும் அழகிய தோற்றத்தை வழங்கி இருக்கின்றன.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 75 கிமீ ஆகும். இதுதவிர, ஓர் முழு சார்ஜில் 80 கிமீ ரேஞ்ஜை தரும் பேட்டரி பேக்கே இதில் வழங்கப்பட இருக்கின்றது. இந்த வருகை ஓலா எலெக்ட்ரிக், ஏத்தர் எனெர்ஜி உள்ளிட்ட நிறுவனங்களின் வருகைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு ஏற்பவே குறைவான விலையை அது தற்போது நிர்ணயித்து இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. இதனாலேயே உலக நிறுவனங்கள் தங்களுடைய கால் தடத்தை நாட்டில் பதித்த வண்ணம் இருக்கின்றனர். இந்த நிலையிலேயே தன்னுடைய வருகையை ஏசர் தற்போது பதிவு செய்திருக்கின்றது. இந்த நிறுவனம் இந்தியாவில் சக்சஸ்ஃபுல் நிறுவனமாக மாறுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, October 16, 2023, 11:35 [IST]
English summary
Acer enters india s electric scooter market its unveiled muvi 125 4g
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+