பேட்டரியில் ஓடும் ஸ்கூட்டராக மாறிய பெட்ரோல் ஆக்டிவா... இவ்ளோதான் ஒட்டுமொத்த செலவேவா!!

பேட்டரியில் ஓடும் ஸ்கூட்டராக பெட்ரோல் ஆக்டிவா மாற்றப்பட்டு இருக்கின்றது. இதற்கான மாற்றத்திற்கு ஆகிய செலவு?, ஒரு ஃபுல் சார்ஜில் அது பயணிக்கும் தூரம் மற்றும் இன்னும் பல முக்கிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியர்களின் பிரியமான இருசக்கர வாகன மாடலே ஹோண்டா ஆக்டிவா. இதன் பெட்ரோல் வெர்ஷனையே இந்தியர் ஒருவர் மின்சாரத்தால் இயங்கும் வாகனமாக மாற்றி இருக்கின்றார். எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றப்பட்டிருக்கும் இந்த ஆக்டிவா ஓர் முழுமையான சார்ஜில் 120 கிமீ தூரம் வரை பயணிக்கும் என அதை மின்சார வாகனமாக மாற்றியிருப்பவர் கூறி இருக்கின்றார். இந்த தகவல் அத்தனை எலெக்ட்ரிக் வாகன பிரியர்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.

ஆக்டிவா

உச்சகட்ட வியப்பில் ஆக்டிவா பயன்பாட்டாளர்கள்

குறிப்பாக, ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் பயன்பாட்டாளர்களை இந்த தகவல் உச்சகட்ட வியப்பில் ஆழ்த்தி இருக்கின்றது. இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹோண்டா, இப்போதே மின்சார வாகனங்களை உருவாக்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. நிறுவனம் வெகு விரைவில் மின்சார வெர்ஷனிலான ஆக்டிவாவை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வர உள்ளது. இதற்கான பணியில் நிறுவனம் தீவிரமாக ஈடபட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே தனியார் வாகன மாடிஃபிகேஷன் நிறுவனம் ஒன்று வழக்கமான பெட்ரோல் ஆக்டிவாவை எலெக்ட்ரிக் ஆட்டோவாக மாற்றி இருக்கின்றது.

அடுத்த வருஷம் ஹோண்டாவே விற்பனைக்கு கொண்டு வருது

அடுத்த ஆண்டே ஹோண்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஆக்டிவாவின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே யாரும் எதிர்பார்த்திராத மாடிஃபிகேஷன் செயலை தனியார் நிறுவனம் செய்திருக்கின்றது. இதன் வாயிலாக ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் பயன்பாட்டாளர்கள் இப்போதே, தங்களுடைய பெட்ரோல் வாகனத்தை மின்சார வாகனமாக மாற்றிக் கொள்ள முடியும் என்பதும் தெரிய வந்திருக்கின்றது.

ஆக்டிவா

நெல்லூர் நிறுவனம்

ஹோண்டா நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் ஆக்டிவாவை விற்பனைக்குக் கொண்டு வரும் வரை காத்திருக்கவும் தேவை இல்லை. ஆந்திரா மாநிலம், நெல்லூரைச் சேர்ந்த நபரே தனது பெட்ரோல் ஆக்டிவாவை எலெக்ட்ரிக் ஆக்டிவாவாக மாற்றியிருக்கின்றார். இதுகுறித்த வீடியோவை டிஐஒய் டெக்.இன் தெலுங்கு எனும் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தை மின்சார வாகனமாக மாற்ற வேண்டும் என்பதற்காக பல்வேறு பாகங்கள் அகற்றப்பட்டு இருக்கின்றன.

பிரிஸ்மேட்டிக் செல் பயன்படுத்தி இருக்காங்க

பழைய பெட்ரோல் மோட்டார் அகற்றப்பட்டு புதிதாக மின்சார மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, மின்சார மோட்டாரில் இயங்கக் கூடிய வகையில் பின் பக்க வீலில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. 2 kW முதல் 2.5 kW வரையில் திறனை வெளியேற்றக் கூடிய மின்சார மோட்டாரே ஆக்டிவாவில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதனுடன் 72V 40A பிரிஸ்மேட்டிக் செல்கள் இருசக்கர வாகனத்தின் மின்சார திறனுக்காக பொருத்தப்பட்டு இருக்கின்றது.

120 கிமீ போலாம்

இந்த பேட்டரி பேக் 2.88 kWh கெபாசிட்டிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் 120 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மேலும், மணிக்கு 55 கிமீ வேகத்தில் இந்த இருசக்கர வாகனத்தில் பயணிக்கவும் முடியும். இதுவே இதன் டாப் ஸ்பீடு ஆகும். இவற்றுடன் சேர்த்து பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம் போன்ற நவீன கால அம்சங்களும் இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டு உள்ளது.

இந்த நவீன கால அம்சத்தின் வாயிலாக செல்போனை இருசக்கர வாகனத்துடன் இணைத்துக் கொள்ள முடியும். அவ்வாறு இணைக்கும்போது பல்வேறு தகவல்களை செல்போன் வாயிலாகவே இருசக்கர வாகனம் குறித்து அறிந்துகொள்ள முடியும். இதுதவிர வேகத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் விதமாக மூன்று விதமான ஸ்பீடு மோடுகளும் மின்சார அவதாரம் எடுத்திருக்கும் எலெக்ட்ரிக் ஆக்டிவாவில் வழங்கப்பட்டு உள்ளது. இந்த அனைத்து மாற்றங்களுக்கும் சேர்த்து ஒரு லட்சம் ரூபாய் செலவாகி இருப்பதாக கூறப்படுகின்றது.

பட்ஜெட் விலையில் வர இருக்கு

ஹோண்டா நிறுவனம் தயாரித்து வரும் ஆக்டிவா இவி ஒரு முழு சார்ஜில் 100 கிமீ ரேஞ்ஜ் தரக் கூடியதாக இருக்கும் என கூறப்படுகின்றது. மேலும், இதில் கொடுக்கப்படும் பேட்டரி பேக் கழட்டி மாட்டும் வசதியுடன் இருக்கும் எனவும் கூறப்படுகின்றது. குறிப்பாக, இந்த டூ-வீலரை நிறுவனம் அனைவரும் வாங்கக் கூடியதாக உருவாக்கி வருவதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் விளைவாகவே எலெக்ட்ரிக் ஆக்டிவா நடுத்தர ரேஞ்ஜ் மற்றும் வேக திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

English summary
Activa petrol converted into electric activa
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X