நடிகர் அஜித் செஞ்ச இந்த விஷயம் யாருக்குமே தெரியாது! அவரது நண்பர் சொன்னதைக் கேட்டதும் எல்லோருக்குமே ஆச்சரியம்

தனக்கு உதவி செய்த நண்பருக்கு நடிகர் அஜித்குமார் ரூ12.5 லட்சத்திற்கு பைக் வாங்கி பரிசளித்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. இந்த விஷயத்தில் அவரது நண்பரே தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இது தற்போது வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

நடிகர் அஜித்குமாருக்கு அறிமுகமே தேவையில்லை. இவர் தமிழ் சினிமாவின் உச்சபட்ச ஹீரோக்களில் ஒருவர் இவரைத் தெரியாதவர்களே தமிழ்நாட்டில் இருக்க முடியாது. இவரை எந்த அளவிற்கு மக்களுக்குத் தெரியுமோ அதே அளவிற்கு இவரது பைக் ஓட்டும் ஆசையும் மக்களுக்குத் தெரியும். இவர் சமீபத்தில் இந்தியா முழுவதும் ட்ரிப் சென்று வந்துள்ளார்.

ajith kumar gifted bmw bike

இந்நிலையில் இந்தியா, நேபாளம், பூட்டான் ஆகிய பகுதிகளில் பைக் ரைடு செல்ல திட்டமிட்டிருந்தார். இந்த ரைடிற்கு அவருடன் பயணித்த சுகட் சத்பாதி என்பவர் உதவினார். பைக்குக்களை ரைடு செய்யும் பகுதிக்குக் கொண்டு செல்வது,அங்கிருந்து அவர்கள் ரைடு செல்லுமிடங்களுக்கு பைக்கில் இவர்களுக்குப் பாதுகாப்பாகவும் உதவியாகவும் செல்வது வழி காட்டுவது உள்ளிட்ட பணிகளை அவர் செய்துள்ளார்.

இந்நிலையில் தனது இந்திய பைக் பயணத்தை முடித்த நடிகர் அஜித் இந்த ரைடிற்கு பெரும் உதவியாக இரந்த சுகட்டிற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என நினைத்துள்ளார். சுகட் தன்னுடன் பைக் ரைடிங்கில் வரும் போது கேடிஎம் 390 பைக்கில் வந்ததை நடிகர் அஜித் கவனித்துள்ளார். இந்த ரைடிற்கு பிறகு சுகட்டிற்கு ரூ12.5 லட்சம் மதிப்பிலா நடிகர் அஜித் பிஎம்டபிள்யூ எஃப்850 ஜிஎஸ் பைக்கை வாங்கி பரிசளித்துள்ளார்.

ajith kumar gifted bmw bike

இதை சுகட்டே தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் அவர் : "எனக்கு கடந்த 2022ம் ஆண்டு இறுதி பகுதியில் லக்கியாக அமைந்தத.தமிழ் சினிமாவின் சூப்பர் ஹீரோ அஜித்குமார் என்னுடன் தொடர்பு கொண்டார். அவருக்காக வடகிழக்கு பகுதியில் பைக் டூரை நான் ஒருங்கிணைப்பு செய்துகொடுத்தேன். அவருடன் நானும் எனது டியூக் 390 பைக்கில் ரைடு செய்தேன்.

அதன் பிறகு அவர் என்னுடனே நேபாளம் மற்றும் பூட்டான் பகுதிகளில் பைக் டூரிங் செய்வதாக உறுதியளித்தார். இந்த விஷயமும் கடந்த மே 6ம் தேதி முடிந்தது. இந்த பயணத்தில் நாங்கள் பல மறக்க முடியாத நினைவுகளைப் பெற்றோம். நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குத் தூரம் பயணம் செய்தோம். பல அழகான சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் பார்த்தோம்.

ajith kumar gifted bmw bike

தற்போது இதற்காக அஜித்குமார் எனக்கு பிஎம்டபிள்யூ எஃப்850ஜிஎஸ் பைக்கை பரிசாக அளித்துள்ளார். இதை அவரின் அன்பின் வெளிப்படாக நான் ஏற்றுக்கொண்டேன்.அவர் ஒரு முறை முடிவு செய்துவிட்டால் அடுத்து அதை பற்றி யோசிக்கமாட்டார். அப்படி தான் எனக்கு இந்த பிஎம்டபிள்யூ எஃப்850ஜிஎஸ் பைக்கை வழங்கியுள்ளார்.இதன் மூலம் இந்த உலகையே சுற்றி பார்க்க முடியும்.

எனக்கு இந்த பைக்கை அவர் ஒரு அண்ணான இருந்து வழங்கியுள்ளார். ஒரு தம்பியாக எனக்கு எது சிறந்தது என்பதை உணர்ந்து செய்க்கூடியவர். இதற்கு பலனாக அவர் என்னிடம் எதுவும் எதிர்பார்க்கவில்லை. இவர் தான் எனது சிறந்த அண்ணன்" என இதில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த பிஎம்டபிள்யூ எஃப்850 ஜிஎஸ் பைக்கை பொருத்தவரை 853 சிசி இன்ஜின் திறன் கொண்டது. இந்த இன்ஜின் 95 எச்பி பவரையும், 92என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக் 15 லிட்டர் ஃப்யூயல் டேங்க் கொள்ளளவை கொண்டது. இந்த பைக் 100 கி.மீ பயணிக்க 4.2 லிட்டர் பெட்ரோலை எரிபொருளாக எடுத்துக்கொள்ளும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பைக் டூரிங் என்பது வெகு சிலரே செய்து வருகின்றனர். நடிகர் அஜித்குமார் போன்ற பெரிய பிரபலங்கள் இதை செய்வது பலரை இதற்குள் கொண்டு வரும் தடம் மாறிப்போகும் இளைஞர்களை இந்த பைக் டூரிங் காப்பாற்றும். இது பலரது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த முயற்சிக்கு நடிகர் அஜித் குமாருக்கு ஒரு சல்யூட்!

More from DriveSpark

Article Published On: Thursday, May 25, 2023, 12:40 [IST]
English summary
Actor ajithkumar gifted 12 5 lakh worth bmw f850 gs bike to his fellow rider
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X