Dulquer Salmaan டெலிவரி எடுத்த Ultraviolette F77 Limited Edition பைக்கில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
மலையாள திரையுலகம் மட்டுமல்லாமல் பல மொழிகளில் திரைப்படங்களை நடித்த பிரபல நடிகர் துல்கர் சல்மான் அல்ட்ராவைலட் எஃப்77 லிமிடெட் எடிசன் எலெட்க்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்கை டெலிவரி எடுத்தார். இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவின் எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான அல்ட்ராவைலட் நிறுவனம் தனது முதல் பைக்கான எஃப் 77 பைக்கில் லிமிடெட்ட எடிசனைக் கடந்தாண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்தின் ஒரு முதலீட்டாளராக இருப்பவர் தான் நடிகர் துல்கர் சல்மான்.

இவர் பெங்களூருவில் உள்ள அல்ட்ராவைலட் நிறுவனம் புதிய எக்ஸ்பிரியன்ஸ் சென்டரான UVH-01 என்ற மையத்தில் முதல் அல்ட்ராவைலட் எஃப் 77 எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்கை டெலிவரி எடுத்தார். இது தான் இந்நிறுவனம் தயாரித்த முதல் லிமிடெட்ட எடிசன் எலெக்ட்ரிக் பைக்காகும்.
இந்த அல்ட்ராவைலட் எஃப் 77 பைக்கின் விலையைப் பொருத்தவரை ரூ3.8 லட்சத்தில் துவங்கி டாப் வேரியன்டான ரேகான் வெர்ஷன் ரூ4.5 லட்சத்தில் விற்பனையாகி வருகிறது. இந்த எஃப் 77 பைக்கின் லிமிடெட் எடிசன் பைக்கின் விலை விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. டாப் வேரியன்டை விடச் சற்று பிரியமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

இந்த அல்ட்ராவைலட் எஃப்77 லிமடெட் எடிசன் பைக் சாதாரண பைக்கை விட அதிக பவர் மற்றும் டார்க்கை கொண்டிருக்கிறது. இந்த பைக் லிமிடெட் எடிசன் என்பதால் மொத்தமே 77 பைக்குகள் தான் தயாரிக்கப்படவுள்ளன. இப்பொழுது இதில் ஒன்றைக் கூட யாரும் வாங்க முடியாது.
இந்த பைக்கை முதன் முறையாகக் காட்சிப்படுத்திய போதே அல்ட்ராவைலட் நிறுவனம் இந்த பைக்கிற்கான புக்கிங் துவங்கிய 2 மணிநேரத்தில் ஒட்டு மொத்த 77 பைக்குகளும் புக்கிங் ஆகிவிட்டதாக அறிவித்தது. இதனால் இந்த பைக்கை இப்பொழுது வாங்க நினைத்தாலும் வாங்க முடியாது.

இந்த லிமிடெட்ட எடிசன் பைக்கை பொருத்தவரை ஒவ்வொரு பைக்கும் ஒவ்வொரு விதமான நம்பரிங் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ஸ்பெஷல் பெயிண்ட் ஸ்கீம் வேறு இருக்கிறது. மீட்டியோர் கிரே மற்றும் ஆஃப்டர்பர்னர் யெல்லோ என்ற நிறங்களில் இது வழங்கப்படுகிறது.
இந்த லிமிடெட் எடிசன் பைக்கின் பெர்ஃபாமென்ஸை பொருத்தவரை பிஎம்எஸ் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 40.2 பிஎச்பி பவரையும் 100 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் அம்சம் கொண்டது.
அந்த பைக் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 7.8 நொடியில் எட்டி பிடிக்கும் திறன் கொண்டது. அதிகபட்சமாக 152 கி.மீ வேகத்தில் இந்த பைக் சீறிப் பாயும். இந்த பைக்கில் பேட்டரி பேக்காக 10.3 கிலோ வாட் ஹவர் லித்தியம் அயான் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது.
எலெக்ட்ரிக் டூவீலர்களிலேயே இவ்வளவு திறன் கொண்ட பேட்டரி எதிலும் கிடையாது. இது தான் அதிகமான பேட்டரி திறன் கொண்டது. அதன் வெளிப்பாடாக இந்த பைக்கை ஒரு முறை சார்ஜ் செய்தால் 307 கி.மீ வரை பயணிக்கலாம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது போக இந்த பைக்கில் 5 இன்ச் டிஎஃப்டி ஸ்கிரீன், 41 மிமீ யூஎஸ்டி முன்பக்க ஃபோர்க்,பின்பக்கம் மோனோ ஷாக் ஆகிய சன்பென்கள் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கை பொருத்தவரை முன்பக்கம் 320 மிமீ, மற்றும் பின்பக்கம் 230 மிமீ டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.
இது போக இந்த பைக்கில் போஷ் டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் மொத்தம் 3 விதமான ரைடு மோடுகள் உள்ளன. கிளைடு, காம்பேட் மற்றும் பேலிஸ்டிக் ஆகிய ரைடு மோடுகள் உள்ளனர். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பெர்ஃபாமென்ஸை வழங்கும்.
இந்த பைக் முழுமையாக சார்ஜ் ஏற 7-8 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. இது ஏசி சார்ஜர் மூலம் சார்ஜ் ஏறும் நேரம் தான். வேகமாக சார்ஜ் ஏற்ற டிசி சார்ஜர் ஆப்ஷனும் உள்ளது. இதை எல்லாம் விட முக்கியம். இந்த பைக்கின் கனெக்டிவிட்டிக்காக இந்த பைக்கிலேயே இ-சிம் பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அல்ட்ராவைலட் எஃப்77 பைக் பல பைக் பிரியர்களைக் கவர்ந்துள்ளது. எலெக்ட்ரிக் பைக்கில் ஒரு ஸ்போர்ட்ஸ் பைக் என்பதால் பலர் இதை விரும்பி வருகின்றனர். துல்கர் சல்மான் போன்ற பிரபலங்கள் இந்த பைக்கை வாங்குவது இந்த பைக்கிற்கு மேலும் பெரிய விளம்பரத்தைச் சேர்க்கும்.


Click it and Unblock the Notifications









