பஜாஜ் சேத்தக்கை இனி யாரும் வாங்க போறது இல்ல!! ஏத்தரின் கம்மி விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாராகுது!

ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனத்தில் இருந்து புதியதாக விற்பனைக்குவர உள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பொது சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த புதிய ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சோதனை ஓட்டம் தொடர்பான ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் செயல்திறன்மிக்க எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் நிறுவனமாக ஏத்தர் எனர்ஜி விளங்குகிறது. பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தில் இருந்து 450எக்ஸ் என்ற ஆற்றல்மிக்க எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையில், புதியதொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை உற்பத்தி செய்யும் பணிகளில் ஏத்தர் ஈடுப்பட்டு வருகிறது.

affordable ather electric scooter spied

இந்த நிலையில், புதிய ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மறைப்புகளுடன் பொது சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூரில் பரபரப்பான சாலையில் நடத்தப்பட்ட இந்த சோதனை ஓட்டம் தொடர்பான ஸ்பை படங்கள் பைக்வாலே செய்தித்தளம் மூலமாக வெளியாகி உள்ளன. இந்த படங்களில் ஸ்கூட்டரின் தோற்றம் மறைப்புகளால் மறைக்கப்பட்டு இருப்பினும், ஓரளவிற்கு அதன் தோற்றத்தை காண முடிகிறது.

ஸ்பை படங்களில் ஸ்கூட்டரின் தோற்றத்தை வைத்து பார்க்கும்போது, இந்த புதிய ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் பஜாஜ் சேத்தக் இவி-க்கு விற்பனையில் போட்டியாக விளங்கும். அத்துடன், ஏத்தர் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை போன்று, இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரும் கூர்மையான லைன்களுடன், ஸ்போர்டியாக வடிவமைக்கப்பட்டு இருப்பதை படங்களில் மறைப்பை தாண்டி காண முடிகிறது.

affordable ather electric scooter spied

இதனால், இந்த புதிய ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பார்ப்பதற்கும் வழக்கமான ஏத்தர் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை போன்றே உள்ளது. சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள இந்த ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்பகுதி ஆனது ரைடரின் கால்களுக்கு நன்கு இடவசதியை வழங்கும் விதமாக வளைத்து வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஃப்ளோர்போர்டு நன்கு அகலமாக உள்ளது.

இருக்கைக்கு கீழே, சைடு பேனல்கள் செங்குத்தாக வழங்கப்பட்டுள்ளதை காணலாம். இதன் காரணமாக, ஸ்கூட்டரின் அகலம் குறைவாக இருக்கும். இதன் விளைவாக, இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டிராஃபிக்குகளில் புகுந்து, புகுந்து செல்வதற்கு ஏற்றதாக இருக்கும். இருக்கை சிங்கிள்-பீஸாக உள்ளது. அதேபோல், பின் இருக்கை பயணி பிடித்துக் கொள்வதற்கான கிராப்-ரெயிலும் சிங்கிள்-பீஸாக உள்ளது.

affordable ather electric scooter spied

மற்ற ஸ்கூட்டர்களை போன்று, இந்த புதிய ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் பின் இருக்கை பயணி கால் வைத்துக் கொள்வதற்கான ஃபுட்ரெஸ்ட் மடித்து வைத்துக் கொள்ளக்கூடியதாக உள்ளது. முன்பக்க ஹெட்லைட் எல்இடி தரத்தில் இருப்பதை காண முடிகிறது. ஸ்கூட்டரின் பெல்ட் டிரைவ் சிஸ்டம் வெளியே இருந்து பார்த்தால் தெரியாத அளவிற்கு மறைவாக வழங்கப்பட்டுள்ளது.

450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை போன்று, இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் பகுதியை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த சோதனை ஸ்கூட்டரில் 12 இன்ச்சில் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது. இதில் முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த புதிய ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் 100கிமீ-இல் 150கிமீ ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

affordable ather electric scooter spied

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 450எக்ஸ் மூலமாக தன்னை ஓர் செயல்திறன்மிக்க எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனமாக காட்டிக் கொண்டுள்ள ஏத்தர் எனர்ஜி நிறுவனம், விரைவில் விலை குறைவான ஓர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் எல்லாருக்குமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனமாக தன்னை முன்னிறுத்த உள்ளது. இதற்கு, அந்த நிறுவனம் பயன்படுத்தவுள்ள ஆயுதமே இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும்.

Source: Bikewale

More from DriveSpark

Article Published On: Saturday, November 18, 2023, 23:33 [IST]
English summary
Affordable ather electric scooter spied in bengaluru check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X