மிகவும் விலை குறைவான ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நாளை அறிமுகம்? வாடிக்கையாளர்கள் மத்தியில் எகிறும் எதிர்பார்ப்பு

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம், நாளை (பிப்ரவரி 9) புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளது. இதில், ஓலா எஸ்1 ஏர் (Ola S1 Air) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விட குறைவான விலையில் (Price) புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் தொடர்பான அறிவிப்பும் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தயாரிப்புகளில் எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்தான் மிகவும் விலை குறைவானது. ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை வெறும் 85 ஆயிரம் ரூபாய் மட்டுமே. மற்ற 2 தயாரிப்புகளான ஓலா எஸ்1 (Ola S1) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1.10 லட்ச ரூபாய் ஆகவும், ஓலா எஸ்1 ப்ரோ (Ola S1 Pro) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1.28 லட்ச ரூபாய் ஆகவும் இருக்கிறது.

மிகவும் விலை குறைவான ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நாளை அறிமுகம்? வாடிக்கையாளர்கள் மத்தியில் எகிறும் எதிர்பார்ப்பு

எகிறும் எதிர்பார்ப்பு!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தயாரிப்புகளில் எஸ்1 ப்ரோ மற்றும் எஸ்1 ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு கீழாக எஸ்1 ஏர் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதை காட்டிலும் குறைவான விலையில் புதிய ஸ்கூட்டர் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்வது தொடர்பான அறிவிப்பை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் நாளை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுவதால், குறைவான விலையில் தரமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வருகைக்காக காத்து கொண்டிருப்பவர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது. இதனுடன் மேலும் ஒரு சில முக்கியமான அறிவிப்புகளையும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் நாளை வெளியிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விலைக்கு இவ்ளோ சிறப்பம்சங்களா!

ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்தவரையில், 2.47 kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 100 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4.5 kW மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 85 கிலோ மீட்டர்கள் ஆகும்.

மிகவும் விலை குறைவான ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நாளை அறிமுகம்? வாடிக்கையாளர்கள் மத்தியில் எகிறும் எதிர்பார்ப்பு

வெயிட் ரொம்ப கம்மி!

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெறும் 4.3 வினாடிகளில் எட்டி விடும். ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் எடை மிகவும் குறைவுதான். இதன் எடை 99 கிலோ மட்டுமே என்பதால், கையாள்வது மிகவும் எளிமையாக இருக்கும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் 2 சக்கரங்களிலும் ட்ரம் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் முன் பகுதியில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின் பகுதியில் ட்வின் ஷாக் அப்சார்பர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

வசதிகளை பொறுத்தவரையில் ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள அதே 7 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே, ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர ரிவர்ஸ் பட்டன் மற்றும் ஹில் ஹோல்டு என ஏராளமான வசதிகளும் ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ளன. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் வாய்ந்த ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விட, விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரும் என எதிர்பார்க்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் நாளை நமக்கு கிடைத்து விடும்.

இந்த விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் முக்கியமான போட்டி நிறுவனங்களான ஏத்தர் (Ather), டிவிஎஸ் (TVS) மற்றும் பஜாஜ் (Bajaj) ஆகியவற்றுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்த ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனங்கள் இந்திய சந்தையில் முறையே 450எக்ஸ் (450X), (iQube) மற்றும் சேத்தக் (Chetak) ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்தியாவில் தற்போதைய நிலையிலேயே ஓலா எஸ்1 வரிசை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை மிகவும் சிறப்பாகதான் உள்ளது. ஆரம்பத்தில் ஒரு சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை தற்போது போட்டி நிறுவனங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இந்த சூழலில் மேலும் விலை குறைவான ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தால், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 8, 2023, 23:19 [IST]
English summary
Affordable ola electric scooter india launch tomorrow reports
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+