அமேசான் கிரேட் இந்தியன் சேலில் ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு பெரும் தள்ளுபடி! இந்த கார்டு உங்க கிட்ட இருக்கா!
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் ஹீரோ நிறுவனத்தின் விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் ஒன்றாகும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தன்னுடைய ஷோரூம் வாயிலாக மட்டுமின்றி ஆன்-லைன் வாயிலாகவும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
குறிப்பாக, தன்னுடைய அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் மட்டுமின்ற வேறு சில இ-காமர்ஸ் தளங்கள் வாயிலாகவும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், ஹீரோ விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும் ஆன்லைன் வர்த்தக தளங்களில் அமேசானும் ஒன்றாகும்.

இப்போது அமேசானில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விழாக்கால சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சில முக்கியமான பொருட்களுக்கு பெரும் தள்ளுபடிகளை அமேசான் தன்னுடைய பார்ட்னர்கள் வாயிலாக வழங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், இந்தியாவின் பிரபலமான மின்சார இருசக்கர வாகனமான ஹீரோ விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் இந்த தளத்தில் பெரும் தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.
வழக்கமாக ரூ. 1.45 லட்சத்திற்கே விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கப்படுகின்றது. ஆனால், குறிப்பிட்ட சில வங்கியின் கார்டை பயன்படுத்தி இந்த ஸ்கூட்டரை தற்போதைய அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விழாக்கால தள்ளுபடி விலையின்கீழ் வாங்கும்பட்சத்தில் இதே எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெறும் ரூ. 1,04,150-க்கே வாங்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த மாபெரும் தொகை தள்ளுபடியை எஸ்பிஐ வங்கி அதன் கிரெடிட் கார்டு பயன்பாட்டாளர்களுக்கு மட்டுமே அறிவித்து இருக்கின்றது. அதாவது, எஸ்பிஐ வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் ஹீரோ விடா வி1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ. 41,750 தள்ளுபடி விலையில் வாங்கிக் கொள்ள முடியும்.
எப்போதும் கிடைக்காத மாபெரும் விலை தள்ளுபடி இது ஆகும். ஆகையால், ஒட்டுமொத்த வாகன உலகமும் தற்போது அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றது. இதுதவிர இன்னும் சில வங்கிகளும் அதன் கிரெடிட் பயன்பாட்டாளர்களுக்கு தள்ளுபடியை அறிவித்து இருக்கின்றது. ரூ. 30 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

ஆகையால், எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்பாட்டாளர்கள் அல்லாத பிற நபர்களால் ஹீரோ விடா வி1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ. 30 ஆயிரம் குறைவான விலையில் வாங்கிக் கொள்ள முடியும். இதுதவிர, கட்டணமில்லா இஎம்ஐ (EMI) திட்டங்களையும் வங்கிகள் அறிவித்து இருக்கின்றன.
இது புதிதாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும் பிளானில் இருப்பவர்களுக்கு சாதமாக அமைந்து இருக்கின்றது என்றே கூறலாம். இந்தியாவின் மிக சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் ஹீரோ விடா வி1-ம் ஒன்று என கூறலாம். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் இருவிதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
வி1 ப்ளஸ் மற்றும் வி1 ப்ரோ ஆகியவையே அவை ஆகும். ஓர் முழு சார்ஜில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 143 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இது விடா வி1 ப்ளஸ் தேர்வின் ரேஞ்ஜ் திறன் ஆகும். இந்த ரேஞ்ஜ் திறனுக்காக 3.44 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு இருக்கின்றது.
இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிமீ ஆகும். பிஎம்எஸ்எம் மோட்டாரே இந்த ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டாரால் வெறும் 3.4 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தையும் எட்ட முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. 6 kW பவர் மற்றும் 25 என்எம் டார்க்கை இந்த மோட்டார் வெளியேற்றும்.
இதே திறன் கொண்ட மோட்டாரே விடா வி1 ப்ரோவிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஆனால் பேட்டரி பேக் விஷயத்தில் மட்டும் இவை இரண்டிற்கும் இடையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டு இருக்கும். 3.94 kWh பேட்டரி பேக்கே வி1 ப்ரோவில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 165 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிமீ ஆகும். ஆனால், பிக்-அப் வேகம் சற்று அதிகம் ஆகும். 0-40 கிமீ வேகத்தை 3.2 செகண்டுகளிலேயே எட்டிவிடும். இத்தகைய சூப்பரான திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அமேசான் தளத்தில் ஆஃபர் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.
இந்த இரு தேர்வுகளிலும் ஈகோ, ரைடு மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் கூடுதலாக கஸ்டம் மோட் ஒன்றையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், அது விடா வி1 ப்ரோவில் மட்டுமே கிடைக்கும்.
தொழில்நுட்ப வசதிகளாக 7அங்குல ஓடிஏ எனேபில்ட் டிஎஃப்டி திரை, திருட்டைத் தவிர்க்க உதவும் ஆன்டி தெஃப்ட் அலாரம், ஜியோ ஃபென்ஸ், ரிமோட், க்ரூஸ் கன்ட்ரோல், டூ-வே த்ரோட்டில், செல்போனுக்கு வரும் அழைப்பை அலர்ட் செய்யும் வசதி, நேவிகேஷன், வாகனத்தை டிராக் செய்யும் வசதி, 4ஜி மற்றும் ஒய்ஃபை உள்ளிட்ட அம்சங்களே வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்று இன்னும் பல அம்சங்களை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக சிறப்பம்சங்கள் அடங்கிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றாக விடா வி1 இருக்கின்றது. இந்த ஸ்கூட்டருக்கு மாபெரும் சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டு இருப்பது இந்தியர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த சிறப்பு சலுகை வாயிலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை விகிதம் கணிசமாக அதிகரிக்கும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









