சரக்கு போட்டா மட்டும்தான் இந்த வண்டி ஓடும்.. அமெரிக்க முதியவர் தயாரித்த தரமான மோட்டார்சைக்கிள்...

உலக நாடுகள் அனைத்தும் சரக்கு போட்டிருந்தால் வண்டியை தொடக்கூட கூடாது என வலியுறுத்தி வரும்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஓர் முதியவர் சரக்கு போட்டால் மட்டுமே ஓடக் கூடிய ஓர் மோட்டார்சைக்கிளை உருவாக்கி இருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் மட்டுமில்லைங்க உலக நாடுகள் பலவற்றில் சரக்கு போட்டு வாகனத்தை ஓட்டக் கூடாது என்பது மிக முக்கியமான போக்குவரத்து விதிகளில் ஒன்றாகும். மேலும், இதைத் தவிர்க்கும் விதமாக கடுமையான அபராதம் மற்றும் தண்டனைகள் குடிகார ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த மாதிரியான சூழலில் அமெரிக்காவைச் சேர்ந்த ஓர் முதியவர் சரக்கு போட்டால் மட்டுமே ஓடக் கூடிய ஒரு மோட்டார்சைக்கிளைத் தயார் செய்து அசத்தியிருக்கின்றார்.

Us man invents beer powered motorcycle

"என்ன சரக்கு போட்டா மட்டும்தான் வண்டி ஓடுமா" நாங்கள் எல்லாரும் ரெடினு கிளம்பிடாதீங்க. இந்த வண்டி நாம சரக்கு போட்டா ஓடாது. அது சரக்கு போட்டால் மட்டும்தான் ஓடும். ஆமாங்க, அமெரிக்க முதியவர் கண்டுபிடித்திருப்பது மதுபானத்தில் ஓடக் கூடிய டூ-வீலர் ஆகும்.

முக்கியமாக பியரில் ஓடும் வகையில் அது வடிவமைக்கப்பட்டு உள்ளது. இத்தகைய குடிகார வண்டியையே அமெரிக்க முதியவர் தற்போது தயார் செய்திருக்கின்றார். தண்ணீரில் ஓடும் பைக், கடல் நீரில் ஓடும் பைக் பற்றி இதற்கு முன்னர் நாம் கேள்விப் பட்டிருப்போம். இதைப் போலவே அமெரிக்காவைச் சேர்ந்தவர் வெறும் பீரில் மட்டுமே ஓடக் கூடிய வாகனத்தை உருவாக்கி இருக்கின்றார்.

Beer powered motorcycle

கை மைக்கேல்சன் எனும் அமெரிக்க முதியவரை இந்த டூ-வீலரை தயாரித்தவர் ஆவார். ராக்கெட் மேன் என்கிற பெயரிலும் இவர் அறியப்படுகின்றார். இவர் விநோதமான கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் பெயர்போனவராக இருக்கின்றார். ராக்கெட் பவர்டு கழிவறை மற்றும் ஜெட் பவர்டு காப்பி பானை ஆகியவற்றை அவர் உருவாக்கி இருக்கின்றார்.

இந்த நிலையிலேயே தன்னுடைய தனித்துவமான திறனை வெளிக்காட்டும் விதமாக முற்றிலும் வித்தியாசமான உருவம் கொண்ட மற்றும் ஃப்யூவலில் ஓடக் கூடிய வாகனத்தை அவர் தயார் செய்திருக்கின்றார். "ஏங்க பீரு என்ன விலை விக்குது அதுல போயி வண்டிய ஓட்டினா எப்படிங்க" எனும் உங்களுடைய மைண்ட் வாய்ஸை எங்களால் உணர முடிகின்றது.

தான் தயாரிக்கும் வாகனம் அனைத்திலும் வித்தியாசமானதாக இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே அதன் தோற்றத்தையும், இயங்கும் தன்மையையும் அவர் வடிவமைத்திருக்கின்றார். அதேவேளையில் இந்த ராக்கெட் மேனுக்கு குடிக்கும் பழக்கம் இல்லையாம். இதுவும் அவர் பியர் பவர்டு மோட்டார்சைக்கிளை தயாரிப்பதற்கான காரணமாக இருக்கின்றது.

இந்த இருசக்கர வாகனத்தில் 14 gallon keg நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. எரிபொருள் எஞ்ஜினுக்கு பதிலாகவே இது பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவே, காயிலை சூடாக்கும் கருவியாகும். இதனாலேயே பீரைக் கொண்டு டூ-வீலரால் இயங்க முடிந்திருக்கின்றது. பீரால் இயங்கும் வாகனத்தை தயாரிப்பதற்கு மற்றுமொரு காரணத்தையும் ராக்கெட் மேன் கையிலேயே வைத்திருக்கின்றார்.

அவர்கள் ஊரில் பியரைவிட பெட்ரோல் விலையே அதிகமாக இருக்கிறதாம். இதுவும் அவர் பீரால் ஓடும் மோட்டார்சைக்கிளை தயாரிக்க ஓர் காரணமாக இருக்கின்றது. நல்லவேளை இந்த அமெரிக்கர் நம்ம ஊருல இல்ல. இருந்திருந்தா பீரை நிச்சயம் அவர் பயன்படுத்தி இருக்க மாட்டார். நம்ம ஊருல பெட்ரோல், பீர் இரண்டுடைய விலையும் பலமடங்கு அதிகமாக இருக்கின்றது.

இவை இரண்டில் பீரின் விலையே மிக மிக அதிகமாக இருக்கின்றது. 150 ரூபா முதல் ஓர் பிரீன் விலை உள்ளது. இதுல கூடுதல் 10 ரூபாயை வைத்து டாஸ்மாக் ஊழியர்கள் ஓர் பீரை விற்பனைச் செய்கின்றனர். மைக்கேல்சன் உருவாக்கிய இருக்கும் இந்த பீர் பைக் மணிக்கு 150 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

அதாவது, மணிக்கு 250 கிமீ வேகத்தில் ஓடும். இத்தகைய அதிக பவர்புல் பீர் பைக்கையே அவர் தயாரித்து இருக்கின்றார். தற்போது இந்த பைக்கை அனைவரும் வந்து பார்த்துவிட்டு செல்ல வேண்டும் என்பதற்காக அருங்காட்சியகத்தில் அவர் வைத்திருக்கின்றார். மைக்கல்சன் திரைப்பட ஸ்டண்ட் மற்றும் விண்வெளி ஆர்வலராகவும் இருக்கின்றார். மேலும், வரும் காலங்களில் இன்னும் பல அற்புதமான கண்டுபிடிப்புகளை அவர் கண்டுபிடிக்க இருப்பதாகவும் அவர் கூறி இருக்கின்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பீரு, பிராண்டில ஓடுற வண்டிய தயாரிக்கிறதுக்கு பதிலா காச செலவாகாத மாதிரி ஓர் வண்டிய கண்டுபிடிச்சா நல்லா இருக்கும் என்பதே எங்களின் கருத்தாக இருக்கின்றது. இந்தியாவில் ஏழை, எளிய மக்கள் பெட்ரோல், டீசல் விலையுயர்வால் கடுமையாக பதிப்படைந்து வருவதை தவிர்க்க முடியும்.

More from DriveSpark

Article Published On: Friday, May 12, 2023, 21:08 [IST]
English summary
American youth creates beer powered two wheeler
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+