பிஸ்கட்கூட 'டீ' உள்ள முக்கி எடுத்த பின்னாடிதான் உடையும்.. இந்த ஸ்கூட்டர் என்னங்க இதுக்கே ரெண்டா உடைஞ்சிருச்சு!

பிஸ்கட்கூட 'டீ' உள்ள முக்கி எடுத்ததுக்கு பின்னாடிதான் உடையும். ஆனால், ஓர் பிரபல நிறுவனத்தின் இருசக்கர வாகன மாடல் சாதாரணமாக ரைடு செய்துக் கொண்டிருந்தபோதே ரெண்டு துண்டாக உடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஓர் பிரபல நிறுவனத்தின் இருசக்கர வாகன மாடல் ஒன்று சாதாரணமாக சாலையில் ஓட்டிச் சென்றபோதே ரெண்டு துண்டாக உடைந்திருப்பதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலை அறிந்த உடன் பலரின் கேள்வி, அப்படி எந்த நிறுவனத்தின் தயாரிப்புங்க அது?, இவ்ளோ மட்டமாவா அவங்க வண்டிய தயாரிக்கிறாங்க?, என பல்வேறு கேள்விகளை நம்மிடையே எழுப்பி இருக்கின்றது.

Ampere magnus chassis splits half

இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஆம்பியரின் தயாரிப்பே அது ஆகும். இந்த நிறுவனத்தின் இ-ஸ்கூட்டரே வழக்கமான ரைடிங்கின்போதே ரெண்டு துண்டாக உடைந்து நாசமாகி இருக்கின்றது. நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளில் ஒன்றாக மேக்னஸ் இருக்கின்றது.

இதுவே மர்மமான முறையில் இரண்டு துண்டாக உடைந்த வாகனம் ஆகும். இதனால் ஆம்பியர் நிறுவனம் பெரும் சர்ச்சையில் தற்போது சிக்கி இருக்கின்றது. ஏற்கனவே ஓலா, ஏத்தர் மற்றும் பிற புதுமுக நிறுவனங்களின் வருகையால் ஆம்பியர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் லேசாக பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த மாதிரியான சூழலிலேயே வழக்கமாக வாகனத்தை ஓட்டிச் சென்றுக் கொண்டிருந்தபோதே மேக்னஸ் பிஸ்கட்டைப் போல ரெண்டாக உடைந்திருக்கின்றது. இந்த வாகனம் மீரட்டைச் சேர்ந்த மோஹித் குமார் என்பவருக்கு சொந்தமானது ஆகும். இவர் மைதானி மொஹலியா எனும் பகுதியில் வசித்து வருகின்றார். சம்பவ தினத்தன்று மோஹித்தும், அவரது ஐந்து வயது மகன் ஆரத்யாவும் சிவ் சவுக் வரை மேக்னஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணித்திருக்கின்றனர்

மகன் உடன் இருந்த காரணத்தினால் அவர் பெரிய அளவில் வேகமாகக்கூட செல்லவில்லை என்று கூறப்படுகின்றது. மேலும், பள்ளம்-மேடுகளையும் அவர் பார்த்து பார்த்து சென்றிருக்கின்றார். இந்த மாதிரியான சூழலிலேயே ஆம்பியர் மேக்னஸ் திடீரென சாலையில் இரண்டு துண்டுகளாக உடைந்திருக்கின்றது. இந்த திடீர் நிகழ்வால் தந்தை-மகன் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு லேசான காயங்களுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து உடனடியாக வாகனம் வாங்கப்பட்ட ஸ்ரீ ஷிவ் எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தை அவர் தொடர்புக் கொண்டிருக்கின்றார். தகவலைக் கேட்டறிந்த பின்னர் ஸ்ரீ ஷிவ் எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அங்குர் பன்சால், விபத்தில் சிக்கியவரையே அந்த வாகனத்தை ஷோரூமுக்கு எடுத்து வருமாறு கூறி இருக்கின்றார்.

பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகளின்போது ரோடு அசிஸ்டன்ஸையே விற்பனையாளர்கள் அல்லது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கும். ஆனால், விபத்தால் பாதிக்கப்பட்டவரையே அந்த வாகனத்தைக் கொண்டு வர ஷோரூம் நிர்வாகம் கட்டாயப்படுத்தி இருக்கின்றது. இதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட வாகனத்தை சரி செய்து மட்டுமே கொடுக்க முடியும்.

மாற்றி தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து இருக்கின்றது. இதனால் மோஹித் குமார் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றார். இந்த நிலையிலேயே மோஹித்தின் விபத்து சம்பவம் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. மோஹித் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே இந்த ஆம்பியர் மேக்னஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ. 88 ஆயிரம் கொடுத்து வாங்கி இருக்கின்றார்.

வாங்கி ஓராண்டுகள் ஆவதற்குள் இந்த அளவு மிக மோசமான பாதிப்பை மேக்னஸ் இ-ஸ்கூட்டர் சந்தித்து இருக்கின்றது. இதுவே அவரின் கடும் மன வேதனைக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. இவருக்கு மேக்னஸ் வாங்கியபோது மூன்று ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படும் என ஷோரூம் நிர்வாகம் வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தகுந்தது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையாளரான அங்குர் சில அதிர்ச்சிகரமான தகவலை பகிர்ந்துக் கொண்டார். இங்கு 400க்கும் அதிகமான மேக்னஸ் ஸ்கூட்டர்கள் இருப்பதாகவும், அதில் 40க்கும் மேற்பட்டவையின் அடிப்பகுதியில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இந்த தகவல் ஒட்டுமொத்த வாகன உலகையும் புரட்டி போடும் வகையில் அமைந்திருக்கின்றது.

மேலும், இந்த சிதைவால் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக கூடுதல் இரும்பு உலோகம் பற்ற வைத்தே வாகனங்கள் விற்பனைச் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். டீலர் இவ்வாறு செய்வது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இவ்வாறு செய்வது எப்போது வேண்டுமானாலும் மீண்டும் பாதிப்பைச் சந்திக்கலாம். ஆகையால், இந்த விஷயத்தில் நிரந்தர தீர்வு வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக அமைந்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒவ்வொரு வாகன உற்பத்தியாளர்களும் வாகனங்களை விற்பனைக்காக வெளியேற்றும் பல நிலைகளில் அதன் குவாலிட்டியை செக் செய்தே வெளியேற்றுவர். இந்த மாதிரியான சூழலில் ஆம்பியர் டீலர் கூறியிருப்பது எப்படி சாத்தியமாகும் என்பதே சந்தேகமாக உள்ளது. குறிப்பாக, பலருக்கு இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 28, 2023, 20:10 [IST]
English summary
Ampere magnus e scooter chassis splits half
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+