இவ்ளோ மட்டமா தயாரிப்பாங்கனு யாருமே எதிர்பார்க்கல... ஓட்டிக் கொண்டிருந்த போதே ரெண்டாக உடைந்த இ-ஸ்கூட்டர்!

பிரபல நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் ஒன்று ஓடிக் கொண்டிருக்கும்போதே இரண்டு பாதியாக உடைந்து விபத்தைச் சந்தித்து இருக்கின்றது. ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைக்கும் வகையில் அரங்கேறி இருக்கும் இந்த விபத்து சம்பவம் அரங்கேறியது எப்படி?, எந்த பிராண்டுடைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அது என்கிற அனைத்து முக்கிய விபரங்களையும் இந்த பதிவில் காணலாம், வாங்க.

இந்தியாவில் மின்சார இருசக்கர வாகன விற்பனையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களில் ஆம்பியர் (Ampere)-ம் ஒன்று. இந்த நிறுவனம் ஒட்டுமொத்தமாகவே மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை மட்டுமே இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அதில் ஒன்றே மேக்னஸ் இஎக்ஸ் (Magnus EX) ஆகும்.

Ampere magnus ex electric scooter breaks into two

நிறுவனத்தின் பிரபலமான மற்றும் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக மேக்னஸ் இஎக்ஸ் இருக்கின்றது. இந்த வாகனமே சாலையில் ஓடிக் கொண்டிருக்கும்போதே திடீரென பிஸ்கட்டைபோல் பாதியாக உடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களை பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

குறிப்பாக, ஆம்பியர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பயன்படுத்தி வருபவர்கள் தற்போது அரங்கேறி இருக்கும் சம்பவம் கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. கடந்த காலங்களில் இதேபோன்ற சர்ச்சையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சிக்கி வந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது. நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சிலவற்றின் முன் பக்க சஸ்பென்ஷன் திடீரென உடைந்து சேதமாகிய நிகழ்வுகள் நாட்டில் பல அரங்கேறின.

Ampere magnus ex electric scooter breaks into half

இந்த நிலையிலேயே புதிதாக ஆம்பியர் நிறுவனத்தின் மேக்னஸ் இஎக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இரண்டு பாதியாக உடைந்து அதிர்ச்சியை கிளப்பி இருக்கின்றது. இதற்கு முன்பாக இதுமாதிரியான ஓர் சர்ச்சையான சம்பவம் இந்தியாவில் அரங்கேறியது இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதாவது, விபத்தைச் சந்திக்காமலே வாகனத்தின் சேஸிஸ் இரண்டு பாதியாக உடைவது இதுவே முதல் முறையாகும்.

ஆகையால், இந்த விபத்து சம்பவம் பற்றிய வீடியோவும், தகவலும் இணையத்தில் மிக வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது. விபத்தைச் சந்தித்து இருக்கும் ஆம்பியர் மேக்னஸ் இஎக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சென்ற ஆண்டே வாங்கப்பட்டது என கூறப்படுகின்றது. வாங்கியது முதலே பல்வேறு பிரச்னைகள் அதில் இருந்ததாக அதன் உரிமையாளர் பகீரங்க குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.

மேலும், இந்த சம்பவம் அரங்கேறுவதற்கு முன்னரே, ஒரு முறை வாகனத்தின் சேஸிஸை இளைஞர் ரிப்பேர் செய்திருக்கின்றார். இந்த நிலையிலேயே பாதியாக ஸ்கூட்டர் உடைந்திருக்கின்றது. ஸ்கூட்டரில் குறைந்தபட்ச அளவு எடைக் கொண்ட பொருட்களே ஏற்றி செல்லப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இரண்டு டிஃபின் பாக்ஸ்கள் மட்டுமே ஏற்றிச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

இந்த நிலையிலேயே விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இந்த விபத்து சம்பவத்தில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது. பொறுமையாக சென்றதாலும், தலைக் கவசம் அணிந்திருந்த காரணத்தினாலும் பெரும் ஆபத்தில் இருந்து ஆம்பியர் மேக்னஸ் இஎக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒட்டி வந்த இளைஞர் தப்பி இருக்கின்றார்.

ஆம்பியர் மேக்னஸ் இஎக்ஸ் ரூ. 83,900-க்கு விற்கப்படுகின்றது. இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். ஓர் ஃபுல் சார்ஜில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 80 கிமீ தொடங்கி 100 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 50 கிமீ மட்டுமே ஆகும்.

1.8kW திறன் கொண்ட மின் மோட்டாரே மேக்னஸ் இஎக்ஸ்-இல் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மின்சார மோட்டாரால் வெறும் 10 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும். 60V, 38.25AH அட்வான்ஸ்டு லித்தியம் பேட்டரி பேக்கே மேக்னஸ் இஎக்ஸ்-ல் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணி நேரம் முதல் 7 மணி நேரம் வரை ஆகும். சிறந்த சஸ்பென்ஷனுக்காக முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக்கும், பின் பக்கத்தில் காயில் ஸ்பிரிங்கும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக டிரம் பிரேக்குகள் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. ஸ்கூட்டரின் உச்சபட்ச வேகமான 50 கிமீ வேகத்தைக் கட்டுப்படுத்த இதுவே போதுமானது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாட்டில் அனைத்து விதமான மின்சார வாகனங்களுக்கும் வரவேற்பு அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஒரு சில விநோத விபத்து சம்பவங்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் சார்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது மின்சார வாகனங்களை வாங்க நினைப்போர்களையும், ஏற்கனவே எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களையும் அச்சத்தில் உறைய வைக்கும் வகையில் அமைந்து வருகின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 25, 2023, 8:29 [IST]
English summary
Ampere magnus ex electric scooter broken into half
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+