"இவிகளுக்கான பிரத்தியேக டயர் வரும்" ரெய்ஸ் மோட்டோ டயர்ஸ் நிறுவனத்தின் எம்டி உடன் ஒரு நேர்காணல்!

இந்தியாவில் புதிதாகத் துவங்கப்பட்ட ரெய்ஸ் மோட்டோ டயர் பிராண்டில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பிரத்தியேக டயர் வெளியாகும் என அந்நிறுவனத்தின் நிறுவனர் டிரைவ் ஸ்பார்க் குழுவினருக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்

குஜராத்தை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் மஹான்சாரியா குழுமம். இந்நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரெய்ஸ் மோட்டோ என்ற புதிய டயர் பிராண்டை துவங்கியுள்ளது. இதை மஹான்சாரியா நிறுவனம் ஐரோப்பிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஸ்பெஷலிஸ்ட் -மிடாஸ் குழுமத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது.

இவிகளுக்கான பிரத்தியேக டயர் வரும் ரெய்ஸ் மோட்டோ டயர்ஸ் நிறுவனத்தின் எம்டி உடன் ஒரு நேர்காணல்!

மிடாஸ் குழுமம் நீண்ட ஆண்டுகளாக டூவீலர்களுக்கான டயர்களை உருவாக்கி வருகிறது. அதுவும் இந்நிறுவனம் உலகின் கடினமான மோட்டார் வாகன பந்தயமான டேக்கர் ரேலி பந்தயத்திற்காக டயர்களை தயாரிக்கிறது. இதன் மூலம் தான் மிடாஸ் நிறுவனம் பிரபலமடைந்துள்ளது.

மஹான்சாரியா நிறுவனம் மிடாஸ் நிறுவனத்திற்காகத் தனது ஆலையில் டயர்களை தயாரித்து வழங்குகிறது. இந்நிலையில் தான் இந்த இரு நிறுவனங்களும் இணைந்து புதிதாக ரெய்ஸ் மோட்டோ என்ற பிராண்டை உருவாக்கி அதன் மூலம் இந்தியாவில் டயர்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

இவிகளுக்கான பிரத்தியேக டயர் வரும் ரெய்ஸ் மோட்டோ டயர்ஸ் நிறுவனத்தின் எம்டி உடன் ஒரு நேர்காணல்!

இந்நிறுவனம் ரெய்ஸ் மோட்டோ டிரையல் ஆர் டயருக்கான டெஸ்ட் ரைடை ஏற்பாடு செய்திருந்தது. இந்த சமயத்தில் ரெய்ஸ் மோட்டோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் யோகேஷ் மஹான்சாரியாவுடன் ஒரு நேர்காணலை எங்கள் டிரைவ் ஸ்பார்க் குழு நடத்தியது. அதில் அவர் அந்நிறுவனத்தின் புதிய டயர்கள், எதிர்கால திட்டங்கள், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான டயர்கள் குறித்து எல்லாம் பேசினாம்.

எங்கள் நேர்காணலின் போது யோகேஷ் மஹான்சாரியா ரைஸ் மோட்டோ நிறுவனத்தின் இந்திய மார்கெட்டிற்கான தற்போதைய டயர் லைன்அப்கள் குறித்துப் பேசினார். ரெய்ஸ் மோட்டோ நிறுவனம் இந்தியாவில் மொத்தம் 4 விதமான டயர்களை விற்பனைக்குக் கொண்டு வருகிறது. அதில் ஃபிளாக் ஷிப் டயர் தான் டிரையல் ஆர் அதைத் தான் நாங்கள் ஓட்டி பார்த்தோம். இந்த டயர் 50-50 ஆன் ரோடு மற்றும் ஆஃப்ரோடு அம்சங்களைக் கொண்டுள்ளது.

பெரும்பாலான மோட்டார்சைக்கிள் டயர்கள் ரோடு தன்மையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால் டிரையல்ஆர் டயர் தான் ஆஃப்ரோடு தன்மைகளையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ரெய்ஸ் மோட்டோ நிறுவனம் இந்தியாவில் ஸ்கூட்டர்களுக்காகவும் 2 விதமான டயர்களை உருவாக்குகிறது.

இது மட்டுமல்ல இந்நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பிரத்தியேக டயர்களை உருவாக்குவதிலும் ஆர்வமாக உள்ளது. முக்கியமாக எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களுக்கான பிரத்தியேக டயர்களை உருவாக்கிய வருகிறது. விரைவில் இந்த டயர்கள் மார்கெட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரெய்ஸ் மோட்டோ நிறுவனம் ஒரு சைஸில் எல்லா வாகனங்களுக்கும் டயரை தயாரிப்பதை விட ஒவ்வொரு தயாரிப்பிற்கும் பிரத்தியேகமாக டயர்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது.

மஹான்சாரியா நிறுவனம் ரெய்ஸ் மோட்டோ பிராண்ட்டின் விநியோக நெட்வொர்க்கை தற்போது இந்தியா முழுவதும் விஸ்தரிப்பு செய்யத் திட்டமிட்டு வருகிறது. தற்போது வரை இந்தியாவில் 60 சதவீதமான பகுதிகளை இந்த பிராண்ட் கவர் செய்துவிட்டது. இந்த நேர்காணலின் போது யோகேஷன் ரெய்ஸ் மோட்டோவின் டயர்களை ஆன்லைனிலும் கொண்டு வர முடிவு செய்துள்ளதாகக் கூறினார். இதன் மூலம் வாடிக்கையாளர்களை எளிதாகக் கவர முடிவு செய்துள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Monday, February 13, 2023, 12:40 [IST]
English summary
An interview with mahansaria founder and MD reise moto
மேலும்... #டயர் #tyres
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+