ஆனந்த் மஹிந்திரா ஓட்டி வந்த சைக்கிள்... இத சாதாரண சைக்கிள்னு நினைச்சு எடை போட்றாதீங்க..
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஆனந்த் மஹிந்திராவும் ஒருவர் ஆவார். சமூக வலைதளங்களில் மிகவும் துடிப்பாக செயல்படக் கூடிய நபராகவும் இவர் காட்சியளிக்கின்றார். இதேபோல், இவர் புதுமைகளைப் பாராட்ட சிறு துளியும் தயங்க மாட்டார். இவரின் கண்களில் படும் புதுமைகளைக்கு உடனடி அங்கீகாரம் வழங்கப்படும்.
குறிப்பாக, அதை உருவாக்கியவர் யாராக இருந்தாலும், அவரை ஆனந்த் மஹிந்திரா கொண்டாடத் தொடங்கிவிடுவார். அந்தவகையில், வீட்டில் வைத்து தயாரிக்கப்பட்ட வாகனங்களை இவர் பெற்றுக் கொண்டு புத்தம் புதிய விலை உயர்ந்த மஹிந்திரா தயாரிப்புகளை இவர் பரிசாக வழங்கிய சம்பவங்கள்கூட இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றன.

இத்தகைய ஓர் மதிப்புமிக்க தொழிலதிபரே தற்போது ஓர் புதுமையான சைக்கிளில் பயணித்து அனைவரின் மனதையும் கவர்ந்திருக்கின்றார். அவர் ஓட்டிய சைக்கிள் ஐஐடி பாம்பே மாணவரால் வடிவமைக்கப்பட்ட சைக்கிள் (BiCycle) ஆகும். இது வழக்கமான மிதிவண்டி அல்ல. மின்சாரத்தில் இயங்கும் சைக்கிள் ஆகும்.
இதன் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் அதனை பேப்பர் மடிப்பதைப் போல மடித்து வைத்துக் கொள்ள முடியும். இந்த சைக்கிளுக்கு ஐஐடி மாணவர் ஹார்ன்பேக் எக்ஸ்1 (Hornback X1) என பெயர் வைத்திருக்கின்றார். இந்த சைக்கிளிலேயே சூப்பராக ஓர் ரைடை ஆனந்த் மஹிந்திரா செய்திருக்கின்றார்.

அவருடைய அலுவலக வளாகத்தில் வைத்தே இந்த செயலை ஆனந்த் மஹிந்திரா செய்ததாகக் கூறப்படுகின்றது. ஹார்ன்பேக் எக்ஸ் எலெக்டிர் சைக்கிள் மடித்து வைத்துக் கொள்வதைப் போலவே இன்னும் பல அம்சங்கள் மற்றும் வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், அதிக வேகம், பாதுகாப்பான பயணம் மற்றும் சொகுசான ரைடு ஆகியவற்றை வழங்கும் ஓர் சைக்கிளாகவே இதனை மாணவர் தயார் செய்திருக்கின்றார்.
இதனால்தான் இந்த இ-சைக்கிள் ஆனந்த் மஹிந்திராவின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. பொதுவாக, மடித்து வைத்துக் கொள்ளும் வசதிக் கொண்ட சைக்கிள்களில் சிறிய வீல்களே வழங்கப்படும். ஆனால், ஐஐடி மாணவர் தயார் செய்திருக்கும் ஹார்ன்பேக் எக்ஸ்1 எலெக்ட்ரிக் சைக்கிளில் முழு அளவுள்ள வீல் மற்றும் டயர் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கும், சைக்கிள்களுக்கும் நாளுக்கு நாள் தேவை அதிகரித்து வரும் சூழலிலேயே இந்த இ-சைக்கிளை மாணவர் தயார் செய்திருக்கின்றார். இந்தியர்களின் கவனத்தை இ-வாகனம் பக்கம் விதமாக இந்த தயாரிப்பு உள்ளது. இப்போதைய நிலவரப்படி எலெக்ட்ரிக் சைக்கிள்களுக்கு டெலிவரி சேவையில் ஈடுபடும் டெலிவரி பாய்ஸ் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இதுதவிர, தினசரி அலுவலகம் சென்று வருவோரின் மத்தியிலும் இந்த வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே மாணவன் தரமான இ-சைக்கிளை தயாரித்து இருக்கின்றார். ஏற்கனவே இந்த எலெக்ட்ரிக் சைக்கிள் ஆன்-லைன் வர்த்தக தளத்தில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஆனந்த் மஹிந்திராவின் ஊக்கத்தின் அடிப்படையில் ஐஐடி மாணவரின் இந்த கண்டுபிடிப்பு மிக சிறப்பாக உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற தளங்களிலேயே ஹார்ன்பேக் எக்ஸ்1 விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் அமேசான் விலை ரூ. 44,999 ஆகும். ரூ. 1000 கூப்பன் இந்த இ-சைக்கிளுக்கு சலுகையாக வழங்கப்படுகின்றது.
16 வயது தொடங்கி 50 வயது வரை உள்ளவர்களால் இ-சைக்கிளை ஓட்டிக் கொள்ள முடியும். ப்ளூ மற்றும் ஆரஞ்சு நிற தேர்வுடன் ஹார்ன்பேக் எக்ஸ்1 விற்பனைக்குக் கிடைக்கின்றது. இ சைக்கிளில் 7.65Ah திறன் கொண்ட கழட்டி மாட்டும் வசதிக் கொண்ட பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இது ஓர் ஐபி65 தர சான்று பெற்ற பேட்டரி பேக் ஆகும். இத தர சான்று மோட்டாரே இந்த சைக்கிளில் பயன்படுத்தப்ப்டடு இருக்கின்றது. அது 36V, 250W திறன் கொண்ட பிஎல்டிசி மோட்டார் ஆகும். இதன் பேட்டரி யை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் 45 கிமீ வரை டிராவல் செய்ய முடியும்.
பெடல் அசிஸ்ட் வசதியும் வழங்கப்பட்டு இருக்கின்றது. முழுமையாக சார்ஜ் தீர்ந்துவிட்ட பின்னர் பெடல் செய்தும் பயணிக்க முடியும். இதுதவிர, பன்முக தகவல்களை வழங்கும் வசதிக் கொண்ட எல்சிடி திரை, முன் மற்றும் பின் வீலில் டிஸ்க் பிரேக் ஆகிய அம்சங்களும் வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மடித்து வைத்துக் கொள்ளும் வசதி இந்த இ-சைக்கிளில் வழங்கப்பட்டு இருப்பதால் அதனை கையாள்வது மிகவும் சுலபமானதாக மாறி இருக்கின்றது. குறிப்பாக, காரில்கூட வைத்து எடுத்துச் சென்று பின்னர் குறிப்பிட்ட இடத்தில் வைத்துப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதேபோல், வீட்டிலும் இதை வைத்துக் கொள்ள சிறிய இட வசதியே போதுமானது.


Click it and Unblock the Notifications









