கேடிஎம் மார்கெட் காலியாகபோகுது! இனி இளைஞர்கள் எல்லாம் ஆப்ரில்லா பக்கம் போக போறாங்க!
அப்ரில்லா நிறுவனம் தனது புதிய ஆர்எஸ் 440 என்ற பைக்கின் டீசரை வெளியிட்டுள்ளது. இந்த பைக்கை நிறுவனம் வரும் 7ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப் போகிறது. இந்த பைக்கை இந்திய இளைஞர்கள் பலர் ஆர்வமாக எதிர்பார்த்து வருகின்றனர். இந்த பைக் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
அப்ரில்லா நிறுவனம் இத்தாலியை சேர்ந்த நிறுவனம். இந்நிறுவனம் இந்தியாவில் தனது வாகனங்களை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் ஆர்எஸ் 440 என்ற பைக்கை இந்திய சாலைகளில் கடந்த சில மாதங்களாக சோதனை செய்து வந்தது. இந்த பைக் ஆர்எஸ் 660 என்ற பைக்கில் இருந்து இன்ஸ்பயர் ஆகி வடிவமைக்கப்பட்டதாகவும் இதனால் ஆர் எஸ் 440 பைக்கின் டிசைன் பெரும்பாலும் இன்ஸ்பயர் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த ஆர் எஸ் 440 களம் இறக்கும்போது மார்க்கெட்டில் ஏற்கனவே உள்ள யமஹா ஒய் இசட் எஃப் ஆர்3, கேடிஎம் ஆர்சி 390, கவாஸகி, நிஞ்சா 400 ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக களமிறக்கிறது. இதனால் இந்தியாவில் உள்ள இளைஞர்களை தவறும் வகையில் இந்த பைக் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பைக்கில் 440 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது லிக்யூட் கூல்டு, டிஓஎச்சி ஒவ்வொரு சிலிண்டருக்கும் 4 வால்வு கொண்ட இன்ஜினாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 48 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த இஞ்சின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. அப்ரில்லா நிறுவனத்திற்கு இந்த பைக் ஒரு மிகப்பெரிய அறிமுகமாக இந்தியாவில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாம் முன்னரே சொன்னது படி இந்த அப்ரில்லா ஆர்எஸ் 440 பைக்கில் டிசைனை பொருத்தவரை ஆர்எஸ் 660 பைக்கில் உள்ள டிசைனே பெரும்பாலும் இதிலும் வழங்கப்பட்டுள்ளது. எல்இடி ஹெட்லைட் மஸ்குலரான பெட்ரோல் டேங்க் உயரமான விண்டு ஸ்கிரீன், கிளப் ஆன் ஹேண்டில் பார், அக்ரஸிவான டிசைன், பின்பக்கம் காம்பேக்டான உயர்த்தப்பட்ட வடிவமைப்பு, எல்இடி லைட் மற்றும் எல்இடி டார்ன் இன்டிகேட்டர் ஆகியன இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் அலுமினியம் ட்வின்ஸ் ஸ்பேர் பிரேம் பொருத்தப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனை பொருத்தவரை முன்பக்கம் தலைகீழாக பொருத்தப்பட்ட போர்க் மற்றும் பின்பக்கம் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. பிரேக்கிங் பொருத்தவரை டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரேக்கிங் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வீலை பொறுத்தவரை 17 இன்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் உள்ள அம்சங்களை பொருத்தவரை இதில் அக்ரசிவ் ரைடர் ட்ரையாங்கிள் மற்றும் டிஎஃப்டி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இது ப்ளூடூத் உடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் ரைடர்கள் தங்கள் செல்போன்களை இந்த பைக்குடன் இணைத்து பயணிக்க முடியும். இது தற்போது வரும் பைக்குகளில் மிக முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது. அந்த அம்சம் இந்த அப்ரில்லா ஆர்எஸ் 440 பைக்கிலும் இருக்கிறது.
இதுபோக இந்த பைக்கில் நேவிகேஷன், டிராக்சன் கண்ட்ரோல், ஸ்லிப் மட்டும் அசிஸ்ட் கிளட்ச், ரைடு பை ஒயர் திரட்டல், குவிக் ஸ்வஃப்டர், அட்ஜஸ்டபிள் லிவர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருக்கிறது. போட்டி நிறுவனங்களில் உள்ள பைக்குகளில் அம்சங்களுக்கு எந்த விதமும் இல்லாமல் இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இது மார்க்கெட்டில் மிகப்பெரிய போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. இதில் பைக்கின் லுக் ஓரளவுக்கு தெரியும் படியாக இருக்கிறது. இந்த பைக்கின் விலை குறித்து அதிகாரப்பூர் தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை செப்டம்பர் மாதம் 7ம் தேதி அறிமுகமாகும் போது தான் இந்த பைக்கின் விலை குறித்த விபரங்கள் எல்லாம் வெளியாகும். இருந்தாலும் இந்த பைக் மார்க்கெட்டிற்கு வரும்போது ரூபாய் 4.5 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் தற்போது 400 சிசி திறன் கொண்ட பைக்குகளின் மீதான ஈர்ப்பு அதிகமாக இருக்கிறது. முக்கியமாக தற்போது நீண்ட தூர பயணத்திற்கு இளைஞர்கள் அதிகம் விரும்புவதால் இந்த ரக பைக்குகளை தேர்வு செய்து வருகின்றனர். கேடிஎம் ஆர்சி 390 பைக்குக்கு போட்டியாக இந்த பைக் களமிறங்குவதால் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








