மேட்-இன்-இந்தியா பைக்கை தான் அமெரிக்கா காரர்களே ஓட்ட போறாங்க!! இந்தியராய் நம்மை பெருமைப்படுத்த கூடிய செய்தி!
இந்தியாவில் உருவாக்கப்படும் மேட்-இன்-இந்தியா அப்ரிலியா ஆர்.எஸ் 457 மோட்டார்சைக்கிளின் அமெரிக்க சந்தைக்கான விலைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த பைக் இந்தியாவில் சமீபத்தில்தான் வெளியீடு செய்யப்பட்டது. இந்த அப்ரிலியா மோட்டார்சைக்கிளை பற்றியும், அமெரிக்கன் மார்க்கெட்டிற்கான விலைகளை பற்றியும் இனி விரிவாக பார்க்கலாம், வாங்க.
புதிய அப்ரிலியா ஆர்.எஸ்457 மோட்டார்சைக்கிள் இந்த 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் உலகளவில் வெளியீடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இந்தியாவில் கடந்த செப்டம்பரில் மோட்டோஜிபி இந்தியா கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில் இந்த அப்ரிலியா பைக் வெளியீடு செய்யப்பட்டது. இதனால், இன்னும் சில வாரங்களில் அப்ரிலியா ஆர்.எஸ்457 பைக் இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிடும்.

இந்தியாவிற்கு முன்னதாகவே இந்த ட்வின்-சிலிண்டர் ஸ்போர்ட்ஸ் பைக் கனடா மற்றும் அமெரிக்கா என வட அமெரிக்க சந்தைகளில் விற்பனைக்கு செல்ல உள்ளது. அமெரிக்காவில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்பட உள்ள அப்ரில்லா ஆர்.எஸ்457 பைக்குகள் இந்தியாவில் உருவாக்கப்பட்ட மேட்-இன்-இந்தியா பைக்குகளாக களமிறக்கப்பட உள்ளன.
அமெரிக்காவில் மேட்-இன்-இந்தியா அப்ரில்லா ஆர்.எஸ்457 பைக்கின் விலை 6,799 அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.5.66 லட்சம் ஆகும். இந்த விலையில் பிரிஸ்மாடிக் டார்க் மற்றும் ஒளிபுகா லைட் என்கிற பெயிண்ட் ஆப்ஷன்களில் அப்ரிலியா ஆர்.எஸ்457 அங்கு கிடைக்கும்.

அதுவே, இந்த பைக்கின் ரேசிங் ஸ்ட்ரிப்புகளை கொண்ட ஸ்பெஷல் எடிசனுக்கு சற்று அதிகமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசனில் ஆர்.எஸ்457 பைக்கின் விலை அமெரிக்காவில் 6,899 டாலர்களாக (ரூ.5.74 லட்சம்) நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதுவே, கனடாவில் இந்த பைக்கின் விலை 7,799 டாலர்களாக (ரூ.4.71 லட்சம்) கொண்டுவரப்பட்டு உள்ளது.
கனடா மார்க்கெட்டில் இந்த விலையில் சிங்கிள்-டோன் பெயிண்ட் ஆப்ஷனில் ஆர்.எஸ்457 கிடைக்கும். ரேசிங் ஸ்ட்ரிப் எடிசனின் விலை சற்று அதிகமாக 7,999 டாலர்களாக (ரூ.4.83 லட்சம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4 இலட்சம் என்ற அளவில் தான் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலைகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அப்ரிலியா 457 பைக்கிற்கான முன்பதிவுகளும் அமெரிக்கா மற்றும் கனடாவில் துவங்கப்பட்டு உள்ளன. இந்தியாவில் உருவாக்கப்படும் ஆர்.எஸ்457 பைக்குகள் இந்த நாடுகளின் ஷோரூம்களுக்கு 2024 ஏப்ரல் - ஜூன் மாதங்களில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கூறியதுபோல், அமெரிக்க சந்தைகளுக்கு செல்லவுள்ள அப்ரிலியா 457 பைக்குகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பியாஜியோ நிறுவனத்தின் பாராமதி தொழிற்சாலையில் அப்ரிலியா ஆர்.எஸ்457 பைக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அப்ரிலியா ஆர்.எஸ்660 மோட்டார்சைக்கிளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய ஆர்.எஸ்457 மோட்டார்சைக்கிளுக்கு இந்திய மார்க்கெட்டில் விற்பனையில் கேடிஎம் ஆர்சி390 மற்றும் கவாஸாகி நிஞ்சா 400 உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் உருவாக்கப்படும் மேட்-இன்-இந்தியா மோட்டார்சைக்கிள் அமெரிக்காவில் விற்பனைக்கு செல்லவுள்ளது உண்மையில் இந்தியர்களாகிய நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம் ஆகும். ஏனெனில், இந்திய தயாரிப்புகள் எந்த அளவிற்கு உலக மக்களிடத்தில் நம்பிக்கைக்கு உரியவைகளாக உள்ளன என்பதற்கு இது சாட்சி ஆகும்.


Click it and Unblock the Notifications









