ஓலாக்கு ஆப்பு வைக்க தேதி குறித்த ஏத்தர்! இந்த தேதியில் வரப்போகும் வேறலெவல் ஸ்கூட்டர்!
ஏத்தர் நிறுவனம் அந்நிறுவனத்தின் சிறந்த பெர்பார்மன்ஸ் ஸ்கூட்டரான அப்பெக்ஸ் 450 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஜனவரி மாதம் 6ம் தேதி அறிமுகப்படுத்தப் போவதாக தற்போது அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த ஸ்கூட்டருக்கான வருகைக்கு பலர் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. இது பலரை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மக்கள் விரும்பி வாங்கி வருகின்றனர். தேர்தல் நிறுவனத்தின் எலெக்டரிக் ஸ்கூட்டர் தரமானதாக இருப்பதாக மக்கள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது. ஏத்தர் தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் இருக்கிறது.

வெளியில் ஏத்தர் நிறுவனம் அதிக பெர்பார்மென்ஸ் கொண்ட ஸ்கூட்டர் ஒன்றே வெளியிடப் போவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் அப்பெக்ஸ் 450 என்ற ஸ்கூட்டரை காட்சிப்படுத்தியிருந்தது. இந்த ஸ்கூட்டருக்கான புக்கிங் ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில் தற்போது இதன் அறிமுக தேதி குறித்த விபரங்கள் எல்லாம் வெளியாகி உள்ளன. ஏத்தர் பிராண்டிலேயே அதிவேகமாக பயணிக்கும் எலெக்டரிக் ஸ்கூட்டர் என்றால் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சொல்லலாம்.
ஏத்தர்நிறுவனம் அப்பெக்ஸ் 450 பேட்டரி ஸ்கூட்டரை முதன் முதலாக காட்சிப்படுத்தப்பட்ட போது அதன் பக்கவாட்டு புரோபைல் குறித்த புகைப்படத்தை வெளியிட்டு இருந்தது. இதில் நமக்கு பல தகவல்கள் கிடைக்கும். பின்பக்கம் ஒரே ஒரு கிராஃப் ரெயிலுடனும் முன்பக்க ஏப்ரான் இதற்கு முந்தைய ஏத்தர் ஸ்கூட்டரை போல வடிவமைப்பிலும் இருப்பது நமக்கு தெரிந்தது.

தற்போது ஏத்தர் 450 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பொருத்தவரை அதிகபட்சமாக 90 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும் சிறு முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.3 நொடியில் பிக்கப் செய்யும் திறன் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டிருந்தது. இதற்காக இந்த ஸ்கூட்டரில் 6.4 கிலோ வாட் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருந்தது. இது 26 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருந்தது.
இந்த ஸ்கூட்டரை பொறுத்தவரை 3.7 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஸ்கூட்டர் ஒரு முறை சார் செய்தால் 150 கிலோ மீட்டர் வரைரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. தற்போது அப்பெக்ஸ் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமாகும் நிலையில் இதன் அம்சங்கள் குறித்து தெரிந்து கொள்ள மக்கள் மத்தியில் ஆர்வம் இருக்கிறது.
ஏத்தர் அப்பெக்ஸ் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பொருத்தவரை அந்நிறுவனத்தின் சிறந்த பெர்பார்மென்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்ராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இந்த ஸ்கூட்டரில் சிறப்பான பிக்கப் மற்றும் டாப் ஸ்பீடு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும் இந்த ஸ்கூட்டரில் எக்கோ, ரைடு, ஸ்போர்ட் மற்றும் வேர்ப் பிளஸ் ஆகிய ரைட் மாடுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் வேர்ப் ப்ளஸ் ரைடு மோடு சிறந்த பெர்பார்மென்ஸை வெளிக்கொண்டுவரும் ரைடு மோடாக இருக்கும் என கருதலாம். இந்த நிறுவனத்தின் சிறந்த பெர்பார்மென்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நீங்கள் வரும் ஜனவரி மாதம் 6ம் தேதி எதிர்பார்க்கலாம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிச்சயம் திரில்லான ரைடர் விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தும் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது அதிக பெர்ஃபார்மென்ஸ் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது ஏத்தர் ரசிகர்கள் மத்தியில் ஒரு வகையில் ஏமாற்றம் என்றாலும் சிறந்த பெர்பார்மென்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எதிர்பார்த்த அவர்களுக்கு நல்ல வரப் பிரசாதம் தான். இதன் அம்சங்கள் எப்படி இருக்கிறது என அறிமுகத்தின் போது தான் தெரியவரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏத்தர் நிறுவனம் சிறந்த பெர்பார்மென்ஸ் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தப் போவதாக சொன்ன போதே உங்களுக்கு தெரிந்திருக்கும் இது தான் நிறுவனத்தின் அதிக விலை கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கும் என. ஆனால் இதன் விலை குறித்த விபரங்கள் எல்லாம் ஆறாம் தேதி தான் தெரிய வரும். நல்ல பெர்ஃபார்மென்ஸ் செய்யும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விரும்பும் நபராக இருந்தால் பணத்தை தயார் செய்து வையுங்கள்.


Click it and Unblock the Notifications








