வெறும் ரூ.2,500 மட்டும்தான்... இப்போவே ஒரு ஸ்கூட்டரை புக் செய்து வைங்க!! ஏத்தர் நிறுவனம் உருவாக்கி இருக்கு!
ஏத்தர் 450எக்ஸ் அபெக்ஸ் (Ather 450X Apex) எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன. எவ்வளவு தொகை இருந்தால் இந்த புதிய ஏத்தர் இ-ஸ்கூட்டரை முன்பதிவு செய்துவிடலாம் என்பதை பற்றியும், புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஸ்கூட்டர்கள் எப்போது டெலிவிரி செய்யப்படும் என்பதை பற்றியும் இனி பார்க்கலாம்.
இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான மார்க்கெட் கடந்த சில வருடங்களில் சிறப்பாக முன்னேற்றம் கண்டுள்ளது. இதன் காரணமாகவே, சந்தையில் புது, புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தொடர்ச்சியாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளன. இந்த வரிசையில், பெங்களூரை சேர்ந்த ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அதன் புதிய 450எக்ஸ் அபெக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.

தற்சமயம் விற்பனையில் இருக்கும் ஏத்தர் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை காட்டிலும் இது விலைமிக்கதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும், 450எக்ஸ் அபெக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலைகள் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விளம்பரப்படுத்தும் விதமாக பல்வேறு டீசர் வீடியோக்களை ஏத்தர் எனர்ஜி தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
இந்த வகையில் சமீபத்தில் கூட, அனுபவம் வாய்ந்த பைக் ரேஸர்கள் புதிய ஏத்தர் 450எக்ஸ் அபெக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ரேஸ் டிராக்கில் ஓட்டிப் பார்த்து தங்களது கருத்துகளை கூறும் வீடியோ ஒன்று ஏத்தர் எனர்ஜியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால், நமது டிரைவ்ஸ்பார்க் குழுவினரிடம் இருந்தும் மிக விரைவில் ஏத்தர் 450எக்ஸ் அபெக்ஸ் டெஸ்ட் ரைடு ரிவியூவை எதிர்பார்க்கலாம்.
இந்த வீடியோவில், ஒருவர் புதிய 450எக்ஸ் அபெக்ஸ் ஸ்கூட்டரை ஓட்ட, மற்றொருவர் வழக்கமான 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டியுள்ளார். அதாவது, பழைய 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை காட்டிலும் புதிய 450எக்ஸ் அபெக்ஸ் ஸ்கூட்டர் எந்த அளவிற்கு செயல்படுதிறன் மிக்கதாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.
மேலும் இந்த டுவிட்டர் பதிவில், 450எக்ஸ் அபெக்ஸ் ஸ்கூட்டரில் புதியதாக வ்ராப்+ என்ற ரைடிங் மோடை அறிமுகப்படுத்துவதையும் ஏத்தர் எனர்ஜி குறிப்பிட்டுள்ளது. 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் தற்சமயம் வழங்கப்பட்டு வரும் வ்ராப் ரைடிங் மோடுக்கு பதிலாக வ்ராப்+ ரைடிங் மோட் 450எக்ஸ் அபெக்ஸ் ஸ்கூட்டரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த டுவிட்டர் வீடியோவில், புதிய 450எக்ஸ் அபெக்ஸ் ஸ்கூட்டரின் தோற்றம் மறைப்புகளால் மறைக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய ஏத்தர் ஸ்கூட்டரை ஓட்டும்போது அடிக்கடி பிரேக்கை பயன்படுத்த தேவைப்படவில்லை என வீடியோவில் ரைடர் கூறுவதை கேட்க முடிகிறது. இதில் இருந்து, இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பல்வேறு நிலைகளை கொண்ட பிரேக் ரீஜெனரேஷன் வழங்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கிறோம்.
இதற்கிடையில், புதிய 450எக்ஸ் அபெக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன. விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் ஏத்தர் எனர்ஜியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் ரூ.2,500ஐ செலுத்தி புதிய 450எக்ஸ் அபெக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்துக் கொள்ளலாம். முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு ஸ்கூட்டர் டெலிவிரி கொடுக்கும் பணிகள் 2024 மார்ச் மாதத்தில் இருந்து துவங்கவுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் ஒரே குறை என்னவென்றால், அவற்றின் சற்று அதிகப்படியான விலை ஆகும். அந்த அளவிற்கு ஏத்தர் ஸ்கூட்டர்களில் செயல்படுதிறனும், தொழிற்நுட்ப அம்சங்களும் கிடைப்பது என்னமோ உண்மைதான். இருப்பினும், நம் நாட்டில் அவ்வளவு விலை கொடுத்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வாங்க நிறைய பேர் தயாராக இல்லை என்பதை ஏத்தர் நிறுவனம் உணர வேண்டும். ஆனால், தற்போதைய 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை காட்டிலும் விலைமிக்க 450எக்ஸ் அபெக்ஸ் ஸ்கூட்டரை ஏத்தர் களமிறக்குகிறது.


Click it and Unblock the Notifications








