ஓலா கொடுக்காத அப்டேட்டை வழங்கிய ஏத்தர்! இப்ப மக்கள் பார்வையெல்லாம் இவங்க பக்கம் தான்!

ஏத்தர் நிறுவனம் தனது 450 எக்ஸ் வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அவர்கள் தங்கள் வாகனத்தின் சார்ஜ் எவ்வளவு செலவாகிறது என்பதை மட்டும் அல்லாமல் எவ்வளவு சார்ஜ் ரீஜென் செய்கிறார்கள் என்ற தகவல்களையும் பார்க்க முடியும் என தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

ஏத்தர் நிறுவனம் இந்தியாவில் அதிகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்நிறுவனம் அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு நல்ல அனுபவத்தை பெற தனது ஓஎஸ்-யை அப்டேட் செய்து வருகிறது.

ather regen ota update

அதன்படி சமீபத்தில் ஏத்தர் 450 எக்ஸ் ஜென் 3 மற்றும் ஜென் 2 வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டது. அந்த அப்டேட்டின் படி வாடிக்கையாளர்களுக்கு ரீஜென் மூலம் எவ்வளவு சார்ஜ் சேமிக்கப்பட்டுள்ளது என்ற தகவலும் கிடைக்கப்பெறுகிறது. அதாவது ஆக்டிவ் மற்றும் பிரேக்கிங் ரீஜென் மூலம் எவ்வளவு சார்ஜ் சேமிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் பைக்கின் முன்பு உள்ள ஸ்கிரீனில் தெரிகிறது.

ரீஜெனரேட்டிவ் சிஸ்டம் என்பது இவிகளில் மிக முக்கியமான ஒரு விஷயமாக இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் ஸ்டார்ட் செய்தவுடன் அதன் மோட்டார் இயங்கத் துவங்கி விடும். ஆனால் நாம் ஆக்ஸலேட்டரை கொடுத்தால் மட்டுமே வாகனம் நகரும், ஆக்ஸிலேட்டர் கொடுக்காத நேரத்தில் மோட்டார் சுழலும் போது காலியாகும் சார்ஜை வீணாகாமல் தடுக்க இப்படியாக மோட்டார் சுற்றும் போது அதை மீண்டும் எலெக்ட்ரிகல் பவராக மாற்றி பேட்டரியில் சேமிப்பதை இந்த ரீஜென் சிஸ்டம் ஆகும்.

ather regen ota update

இப்படியாக செய்வதன் மூலம் வாகனத்தின் ரேஞ்ச் சிறப்பாக இருக்கும். தேவையில்லாமல் காலியாகும் சார்ஜை தவிர்க்க முடியும். முக்கியமாக சிட்டி பயன்பாட்டில் அதிகமாக பிரேக்குகளை பயன்படுத்துவதால் சிட்டி பயன்பாட்டில் உள்ள ஸ்கூட்டர்களில் அதிக ரேஞ்ச் கிடைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை பயன்பாட்டில் பிரேக் பிடிப்பது குறைவாக இருக்கும். இதனால் இங்கு இது தேவையில்லை.

ஸ்கூட்டர்களை பொறுத்தவரை இரண்டு விதமான ரீஜென் ஆப்ஷன்கள் உள்ளன. ஒன்று ஆக்டிவ் ரீஜென் என்று அழைக்கப்படுகிறது. இது நீங்கள் திரட்டலை முன்பக்கமாக திருப்பினால் அப்பொழுது ஏற்படும் சார்ஜ் இழப்புகளை ஈடு செய்ய மீண்டும் மோட்டாரின் பவரில் இருந்து மின் சக்தியைப் பெற்று அதை பேட்டரியில் பத்திரமாக சேமிக்கிறது.

மற்றொன்று பிரேக்கிங் ரீஜென் சிஸ்டம் ஆகும். இந்த சிஸ்டத்தின்படி நீங்கள் ஸ்கூட்டரில் செல்லும்போது பிரேக் பிடிக்க நேர்ந்தால் அப்பொழுது ஏற்படும் சார்ஜ் இழப்புகளை மின்சக்தியாக மாற்றி மீண்டும் பேட்டரியில் சேமிக்கிறது. இதன் மூலம் அதிக ரேஞ்ச் கிடைக்கிறது. தேவையில்லாமல் சார்ஜ் வீணாவதையும் தடுக்கிறது.

இந்த இரண்டு விதமான சேமிப்பு குறித்த தகவல்களும் ஸ்கூட்டரில் உள்ள டிஸ்ப்ளேவில் தெரியும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏத்தர் 450 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்த வரை 3.7 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்குடன் விற்பனைக்கு வருகிறது. தற்போது இதற்காக புக்கிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது முழு சார்ஜில் 150 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. அதேபோல ஏத்தர் நிரூபணம் 2.9 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்கையும் விற்பனை செய்து வருகிறது. இது முழு சார்ஜில் 11 கிலோ மீட்டர் ரேஞ்ச் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள மோட்டாரை பொருத்தவரை 8.5 பிஎச்பி பவரையும் 26 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை பொறுத்த வரை ரூ1.38 லட்சம் என்ற விலையில் 2.9 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்குடன் விற்பனைக்கு வருகிறது.

இந்த 2.9 வாட் ஹவர் பேட்டரி பேக் உடனேயே ப்ரோ வேரியன்ட் ரூ 1. 53 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு வருகிறது. ஏத்தர் நிறுவனம் தற்போது 3.7 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டரை புக்கிங் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏத்தர் நிறுவனம் எலக்ட்ரிக் வாகன சந்தையில் மிக முக்கியமான நிறுவனமாக இருந்து வருகிறது. இந்நிறுவனம் பல்வேறு விதமான அப்டேட்களை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அதில் இருந்து அப்டேட் மிக முக்கியமான அப்டேட் ஆக பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனம் ஓட்டும் திறனையும் அதன் மூலம் எப்படி சேமிப்பை மேம்படுத்தலாம் என்பதையும் இந்த தகவல்கள் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

More from DriveSpark

Article Published On: Friday, September 15, 2023, 12:34 [IST]
English summary
Ather 450x dashboard now features active regen with latest ota update
மேலும்... #ஏத்தர் #ather energy
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+