உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய நிறுவனம்! வேற எந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் இந்த வசதி கிடையாது!
ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் (Ather Energy) 'கம்யூனிட்டி டே' (Community Day) நிகழ்ச்சி, அதன் தலைமையகமான பெங்களூர் நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தனது 450 லைன் அப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு (Electric Scooters) ஏத்தர் எனர்ஜி நிறுவனம் பல்வேறு புதிய அப்டேட்களை அறிவித்துள்ளது.
ஏத்தர்ஸ்டேக் 5.0 சாஃப்ட்வேர் அப்டேட், புதிய வசதிகள், 4 புதிய கலர் ஆப்ஷன்கள், சௌகரியமான இருக்கை மற்றும் பேட்டரிக்கு 5 வருடங்கள் வாரண்டி உள்ளிட்டவைதான் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது 450 லைன் அப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அறிவித்துள்ள அப்டேட்கள் ஆகும். ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தற்போதைய நிலையில் 450 எக்ஸ் (450 X) மற்றும் 450 ப்ளஸ் (450 Plus) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

உலகின் ஒரே நிறுவனம்!
ஏத்தர்ஸ்டேக் 5.0 சாஃப்ட்வேரை அறிமுகம் செய்திருப்பதுதான், ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் தற்போதைய மிக முக்கியமான அப்டேட்டாக கருதப்படுகிறது. இதன் மூலம் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் டேஷ்போர்டு டிஸ்ப்ளேக்களுக்கு புதிய 'யூஸர் இன்டர்ஃபேஸ்' கிடைத்துள்ளது. அத்துடன் மேம்பட்ட நேவிகேஷன் சிஸ்டமும் கிடைக்க பெற்றுள்ளது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் கூகுள் ஆன்போர்டு நேவிகேஷனை வழங்கும் உலகின் ஒரே நிறுவனம் என்ற பெருமை இதன் மூலம் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. அப்டேட் செய்யப்பட்ட கூகுள் மேப்ஸ் செட்-அப்பும், மிகப்பெரிய சாஃப்ட்வேர் அப்டேட்டாகதான் கருதப்படுகிறது.
இதுதவிர ஆட்டோ ஹோல்டு மற்றும் ஹில் ஹோல்டு வசதியின் ஏத்தர் வெர்ஷன் என வசதிகளும் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இவற்றுடன், பேட்டரி பாதுகாப்பு திட்டத்தையும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. இது பேட்டரி வாரண்டியை 5 வருடங்கள்/60,000 கிலோ மீட்டர்களுக்கு நீட்டிக்கிறது. ஏத்தர் 450 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு பேட்டரி பாதுகாப்பு (3 + 2 ஆண்டுகள்) தற்போது ஸ்டாண்டர்டாக வருகிறது. அதே நேரத்தில் 450 பிளஸ் உரிமையாளர்கள், கூடுதலாக 2 வருடங்களுக்கான வாரண்டியை, வெறும் 6,999 ரூபாய்க்கு வாங்கி கொள்ள முடியும்.

புதிய கலர்கள்!
இதுதவிர ட்ரூ ரெட், காஸ்மிக் பிளாக், சால்ட் க்ரீன் மற்றும் லூனர் க்ரே என நான்கு புதிய கலர் ஆப்ஷன்களையும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதே நேரத்தில் ஸ்பேஸ் க்ரே மற்றும் ஒயிட் ஆகிய 2 கலர் ஆப்ஷன்களும் தொடர்ந்து கிடைக்கும். அத்துடன் வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று, புதிய இருக்கையையும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த அப்டேட்கள் மூலம், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மாற விரும்பும் பலரை ஏத்தர் எனர்ஜி கவர்ந்து இழுக்கும் என கருதப்படுகிறது.
அத்துடன் இதன் மூலமாக மிகவும் முக்கியமான போட்டியாளர்களான ஓலா எஸ்1 ப்ரோ (Ola S1 Pro), பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak), டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube) மற்றும் விடா வி1 (Vida V1) போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் மிகவும் கடுமையான போட்டியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆனால் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தற்போது செய்துள்ள அப்டேட்கள் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், அவர்களுக்கு ஏமாற்றமான ஒரு நிகழ்வும் நடந்துள்ளது.
நினைச்சது நடக்கலயே!
தற்போதைய நிலையில் ஏத்தர் 450 ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1,35,452 ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் ஏத்தர் ஏத்தர் 450 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1,58,462 ஆக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிரீமியமான மாடல்கள் என்பதால், மிகவும் விலை உயர்ந்தவையாக உள்ளது. கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்புகள் என்றாலும், அனைவராலும் இந்த விலையில் வாங்க முடியாது.
எனவே ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஓரளவிற்கு குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை தனது கம்யூனிட்டி டே நிகழ்ச்சியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் இருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் ஏற்கனவே விற்பனையில் உள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அப்டேட்களை அறிவித்ததை தவிர, புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எதையும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவில்லை.


Click it and Unblock the Notifications








