24,000 ரூபாக்கான பலனை அறிவித்த முன்னணி மின்சார இருசக்கர வாகன பிராண்ட்! இந்த வருஷ முடிவ யாராலும் மறக்க முடியாது

இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஏத்தர் எனெர்ஜி (Ather Energy)-யும் ஒன்றாகும். இந்த நிறுவனமே வாடிக்கையாளர்களை தன் வசம் ஈர்க்கும் பொருட்டு சில சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கின்றது. மிக முக்கியமாக நடப்பாண்டின் இறுதியை அதிக விற்பனை எண்ணிக்கையுடன் முடிக்க திட்டமிட்டே அது சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கின்றது.

மேலும், இந்த திட்டத்திற்கு அது 'ஏத்தர் எலெக்ட்ரிக் டிசம்பர்' (Ather Electric December) என்கிற பெயரையும் ஏத்தர் எனர்ஜி சூட்டி இருக்கின்றது. இந்த திட்டத்தின் வாயிலாக வாடிக்கையாளர்கள் சுமார் 24 ஆயிரம் ரூபாய்க்கான பலன்களை அனுபவித்துக் கொள்ள முடியும். இந்த சலுகை நிறுவனத்தின் 450எக்ஸ் மற்றும் 450எஸ் ஆகிய இரண்டு தயாரிப்புகளுக்கும் பொருந்தும்.

Ather 450x

மேலும், இந்த சலுகையை வருகின்ற 31 ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த 25 ஆயிரம் ரூபாய் பலன் திட்டத்தில் 6 ஆயிரம் ரூபாய் மட்டுமே பண சலுகையாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், ரூ. 7 ஆயிரம் மதிப்புள்ள ஏத்தர் பேட்டரி பாதுகாப்பு திட்டம் இலவசமாக வழங்கப்பட இருக்கின்றது.

இந்த பேட்டரி பேக் பாதுகாப்பு திட்டத்தின் வாயிலாக 5 ஆண்டுகள் அல்லது 60 ஆயிரம் கிலோ மீட்டர் பயன்பாட்டிற்கு பிரத்யேக பாதுகாப்பு பலன்களை நம்மால் அனுபவித்துக் கொள்ள முடியும். இத்துடன், 70 சதவீதம் ஸ்டேட் -ஆஃப்- ஹெல்த் (State of Health) கியராண்டியையும் வழங்கப்பட இருக்கின்றது.

Ather 450x font

இதுதவிர, ஜீரோ டவுன்பேமென்ட், 5.99 சதவீதம் வட்டி விகிதத்தில் சுலப மாதத் தவணை திட்டம் ஆகியவற்றையும் வழங்க இருப்பதாக ஏத்தர் எனெர்ஜி அறிவித்து இருக்கின்றது. மேலும், 60 மாத இஎம்ஐ திட்டத்தின்கீழ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு வழங்க இருப்பதாகவும் ஏத்தர் எனெர்ஜி அறிவித்து இருக்கின்றது.

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் புதிய இருசக்கர வாகனங்களைக் களமிறக்கும் பணியிலும் மிக தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், விரைவில் அது 450 அபெக்ஸ் (450 Apex) எனும் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த இ-ஸ்கூட்டருக்கான புக்கிங் பணிகள் ஏற்கனவே நாட்டில் தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரூ. 2,500 முன் தொகையில் அபெக்ஸிற்கான ப்ரீ புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. இதன் அறிமுகம் வெகு விரைவிலேயே அரங்கேற இருக்கின்றது. மேலும், இதன் டெலிவரி பணிகள் வருகின்ற மார்ச் மாதத்தில் தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த புதிய அபெக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது, பிராண்டின் உயர்நிலை தயாரிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதை உறுதிப்படுத்துகின்ற வகையிலான தகவலே வெளியாகிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, புதிய அபெக்ஸ் அதிக திறனை வெளியேற்றக் கூடியதாக இருக்கும் என கூறப்படுகின்றது. இப்போதைய நிலவரப்படி நிறுவனத்தின் அதிக பவர்ஃபுல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக 450எக்ஸ் (450X) இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிலோ மீட்டர் ஆகும்.

மேலும், வெறும் 3.3 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டும் திறனை இந்த வாகனம் கொண்டிருக்கின்றது. இதைவிட அதிக பவர்ஃபுல்லானதாக ஏத்தர் 450 அபெக்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், இதன் வருகை மீது இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துக் காணப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் மின்சார இருசக்கர வாகனங்களில் ஏத்தர் தயாரிப்பும் ஒன்றாகும். தற்போது கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே ஏத்தர் நிறுவனம் புதிய அபெக்ஸை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. விரைவில் இந்த வாகனத்தின் சிறப்பம்சங்கள் பற்றிய முழு விபரம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 14, 2023, 23:59 [IST]
English summary
Ather announces year end offer here is more details
மேலும்... #ஏத்தர் #ather energy
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X