மதுரை முத்து ஸ்டைலில் நடந்த ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்! தரமான அப்டேட் குடுத்திருக்காங்க!

ஏத்தர் நிறுவனம் இன்று தனது 3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும், தனது ஸ்கூட்டரில் உள்ள சில அம்சங்களை அப்டேட் செய்து இன்று வெளியிட்டுள்ளது. இந்த 3 ஸ்கூட்டர்கள் என்னென்ன? புதிதாக என்னென்ன அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது? புதிய தொழிற்நுட்பங்கள் என்ன? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

எத்தர் நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க மக்கள் பலர் ஆர்வமாக இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக இந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை வளர்ச்சி பாதையிலேயே சென்று கொண்டிருக்கிறது. தொடர்ந்து உற்பத்தியும் அதிகரிக்கப்படுகிறது.

ather launch

இந்நிலையில் ஏத்தர் நிறுவனம் தனது புதிய மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஏத்தர் 450 எக்ஸ் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையாகி வரும் நிலையில் தற்போது புதிதாக ஏத்தர் 450 எஸ் என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே விற்பனை ஆகி வரும் ஏத்தர் 450 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அப்டேட் வெர்ஷனையும் ஸ்கூட்டரின் அதிக பவர் கொண்ட மற்றொரு புதிய ஸ்கூட்டராக அறிமுகப்படுத்தியுள்ளது.

இது மட்டுமில்லாமல் ஏத்தர் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிய தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளது. வித்தியாசமான முறையில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. முதலில் நாம் ஏத்தர் நிறுவனம் கொண்டு வந்துள்ள புதிய தொழில்நுட்பங்கள் குறித்து காணலாம் வாருங்கள்.

ather launch

ஸ்விட்ச் கியர்: ஏத்தர் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூடர்களின் ஸ்விட்ச் கிளஸ்டர்களை முழுமையாக மாற்றி அமைத்துள்ளது. இதன் ரைடு மோடுகளை சுலபமாக மாற்ற முடியும். ரிவர்ஸ் கியருக்கான தனி ஸ்விட்ச், மெனுக்களை கையாள்வதற்காக 5 வே ஸ்விட்ச், ஹலோ/ஹடோ ஸ்விட்ச் ஹாரன் ஸ்விட்ச், உள்ளிட்ட ஸ்விட்சுகள் இதில் இடம் பெற்றுள்ளன.

டீப் வியூ டிஸ்ப்ளே: ஏத்தர் நிறுவனம் தனது டீப் வியூ டிஸ்பிளேவையும் மாற்றியமைத்துள்ளது. இதை முழுமையாக புதிதாக டிசைன் செய்துள்ளது. இந்த டிஸ்பிளேவை டச் ஸ்கிரீன் இல்லாத டிஸ்ப்ளே ஆக வழங்கி உள்ளது. சிறந்த விசிபிலிட்டிக்காக 20 மடங்கு அதிக காண்ட்ராஸ்ட் மற்றும் நான்கு மடங்கு அதிகமான செக்மெண்ட் கொண்ட வியூ இதில் உள்ளது.

ather launch

காஸ்டிங் ரீஜென்: ஏத்ர் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் காஸ்டிங் ரீஜன் என்ற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது எலெக்ட்ரிக் மோட்டார் இயங்கும் போது அது எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு தேவையான அளவு விட அதிகமாக இயங்கினால் அந்தப் பவரை நேரடியாக மீண்டும் பேட்டரியை சார்ஜ் செய்ய பயன்படுத்திக் கொள்ள முடியும். இதனால் ஸ்கூட்டரின் ரேஞ்ச் 15 சதவீதம் வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஎஸ்எஸ்: ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பின்பக்கம் மற்றும் முன்பக்கம் ஹசார்டு லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் இஎஸ்எஸ் என்ற அம்சம் இருக்கிறது.அதாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சற்று வித்தியாசமாக அல்லது ஆபத்தான சூழ்நிலையில் இருப்பதை உணர்ந்தால் இந்த சிஸ்டம் ஆக்டிவேட் ஆகும். இந்த சிஸ்டம் ஆக்டிவேட் ஆனால் இதன் முன் பக்கமும், பின்பக்கமும் வருபவர்களுக்கு ஸ்கூட்டர் ஆபத்தில் உள்ளதை உணரும் வகையில் இதில் லைட்டுகள் பிளின்க் ஆகும்.

ஃபால் ஆஃப்: எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஃபால் ஆஃப் என்ற புதிய தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது ஸ்கூட்டர் 60 டிகிரிக்கு அதிகமாக சாய்ந்தால் அதன் இன்ஜின் தானாக கட் ஆகும்படி டிசைன் செய்யப்பட்டுள்ளது. அதாவது பைக் ஸ்கூட்டர் கீழே விழுந்து விட்டால் அதை மீண்டும் தூக்கும் போது ஆக்சிலேட்டர் கொடுத்து பைக் விபத்தில் சிக்குவதை தவிர்க்க இந்த தொழில்நுட்பம் பயன்படும்.

இறுதியாக இந்நிறுவனம் மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி உள்ளது என ஏற்கனவே சொல்லியிருந்தோம். அது என்னென்ன எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்? இதில் உள்ள அம்சங்கள் என்ன? இது குறித்த விரிவான விபரங்களை தொடர்ந்து காணலாம். முதலில் ஏத்தர் 450 எஸ் என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி காணலாம்.

ஏத்தர் 450எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்தவரை 2.9 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது 90 கிலோமீட்டர் வேகம் வரை சீறிப்பாயும். இந்த ஸ்கூட்டர் 0-40 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.9 நொடியில் பிக்கப் செய்து விடும். இந்த ஸ்கூட்டரில் டீப் வியூ டிஸ்ப்ளே, டர்ன் பை டர்ன் நேவிகேஷன் உள்ளன. இது முழு சார்ஜில் 115 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டது.

ஏத்தர் 450 எக்ஸ் ஸ்கூட்டரை பொறுத்தவரை இரண்டு வேரியண்ட்களில் உள்ளது. முதல் வேரியண்டில் 2.9 கிலோ வாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது 0-40 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.3 நொடியில் பிக்கப் செய்து விடும். இதில் 17.78 செண்டிமீட்டர் டச் ஸ்கிரீன் மற்றும் ஆன்போடு கூகுள் மேப் டிஸ்பிளே உள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜில் 111 கிலோமீட்டர் ரேஞ்சை வழங்கும் திறன் கொண்டது.

அடுத்த வேரியண்டாக ஏத்தர் 450 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.7 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 90 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் 0-40 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.3 நொடியில் பிக்கப் செய்து விடும். இதில் பழைய வெர்ஷனில் உள்ள அதே அம்சங்கள் இருக்கிறது. ரேஞ்ச் மட்டும் கூடுதலாக 150 கிலோமீட்டர் வரை முழு சார்ஜில் பயணம் செய்யும் திறன் கொண்டது.

ஏத்தர் 450எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையைப் பொறுத்தவரை ரூபாய் 1,29,999 என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. 450 எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையைப் பொறுத்தவரை ரூபாய் 1,37,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்கூட்டரை வாங்க தற்போது மக்கள் போட்டி போட்டு வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏத்தர் நிறுவனம் ஏற்கனவே மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுள்ள நிலையில் தற்போது புதிதாக குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஏத்தர் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. உள்ளது. இதனால் ஏத்தர் நிறுவனத்தின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்

More from DriveSpark

Article Published On: Friday, August 11, 2023, 14:24 [IST]
English summary
Ather debuts 450x 450s variants in india check out pricing range features
மேலும்... #ஏத்தர் #ather energy
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X