1 லட்சமாவது யூனிட்டை டெலிவரி செய்த ஏத்தர்... இவ்ளோ வசதிகளை வாரி வழங்கினா யாருதான் வாங்காம இருப்பா!!
நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஏத்தர் எனெர்ஜி (Ather Energy)-யும் ஒன்று. இந்த நிறுவனமே டெலிவரியில் தற்போது புதிய மைல் கல்லை எட்டி இருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம் 1 லட்சமாவது யூனிட்டை தனது வாடிக்கையாளருக்கு டெலிவரி கொடுத்திருக்கின்றது.
இது மிகப் பெரிய சாதனை ஆகும். இதன் வாயிலாக, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும், ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்களுக்கும் நாட்டு மக்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது உறுதியாகி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே நிறுவனத்தின் தயாரிப்புகள் அதிக எண்ணிக்கையில் விற்பனையான வண்ணம் உள்ளன.

இதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த 2023 பிப்ரவரியில் மட்டும் 12,147 யூனிட்டுகள் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகின. இதுவரை இந்த அளவு அதிக எண்ணிக்கையில் ஏத்தர் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் விற்பனையாகியது இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இது 2022 பிப்ரவரியைக் காட்டிலும் 495 சதவீதம் அதிக விற்பனை எண்ணிக்கை ஆகும்.
இவ்வாறே கடந்த சில மாதங்களாகவே நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அமோக விற்பனை வளர்ச்சியைச் சந்தித்த வண்ணம் இருக்கின்றன. இதன் விளைவாக தற்போது 1 லட்சமாவது யூனிட் டெலிவரியை அதனால் எட்ட முடிந்திருக்கின்றது. நாட்டின் ஒட்டுமொத்த மின்சார இருசக்கர வாகன சந்தையில் 15.5 சதவீத பங்கை ஏத்தர் எனெர்ஜி கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

டெலிவரி விஷயத்தில் மட்டுமே இந்த நிறுவனம் புதிய மைல்கல்லை எட்டவில்லை. அது 100 -வது அனுபவ மையத்தை திறத்தல் , 1000 -மாவது ஏத்தர் க்ரிட் சார்ஜிங் மையத்தை அமைத்தல் உள்ளிட்ட மைல்கல்லையும் சமீபத்தில் எட்டியது. ஏத்தர் நிறுவனம் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக புதிய எக்ஸ்பீரியன்ஸ் மையங்களை நாட்டில் திறந்த வண்ணம் இருக்கின்றது.
அந்தவகையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் ஆறு புதிய அனுபவ மையங்களை அது திறந்து வைத்தது. இதனுடன் சேர்த்து இப்போதைய நிலவரப்படி நிறுவனத்தின்கீழ் 108 அனுபவ மையங்கள் செயல்பாட்டுக் கொண்டிருக்கின்றன. மேலும், நிறுவனத்தின் தயாரிப்புகள் தற்போது 81க்கும் மேற்பட்ட நகரங்களில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

இதன் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்தும் திட்டத்தில் ஏத்தர் எனெர்ஜி இருக்கின்றது. இதை மட்டுமில்லைங்க சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கையையும் அடுத்து வரும் நாட்களில் ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் அதிகப்படுத்த இருக்கின்றது. இந்த பணிகளுடன் சேர்த்து தன்னுடை மின்சார ஸ்கூட்டர்களான ஏத்தர் 450 பிளஸ் மற்றும் 450 எக்ஸ் ஆகியவற்றில் கூடுதல் சிறப்பம்சங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் பணியிலும் ஏத்தர் ஈடுபட்டு வருகின்றது.
அந்தவகையில், அண்மையில் ஏத்தர் ஸ்டேக் 5.0 எனும் அப்டேட்டை அறிமுகப்படுத்தியது. இந்த அப்டேட் வாயிலாக பன்முக கூடுதல் சிறப்பு வசதிகள் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. குறிப்பாக, க்ரூஸ் கன்ட்ரோல், கிராவ்ல் கன்ட்ரோல் மற்றும் அட்வான்ஸ்டு ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை அப்டேட் வாயிலாக வழங்கப்பட்டன. இத்துடன் ஆட்டோ ஹோல்டு எனும் பிரத்யேக அம்சத்தையும் ஏத்தர் வழங்கி இருக்கின்றது.

இது மேனுவல் பிரேக்கிங்கிற்கு பதிலாக தானாகவே வாகனத்தை பிரேக் நிறுத்தி வைக்க உதவியாக இருக்கும். இந்த அம்சம் சிக்னலில் நிற்கும்போது பெரும் உதவியாக இருக்கும். ஆனால், இந்த அம்சம் ஜென்3 ரக ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுபோன்று இன்னும் பல்வேறு அம்சங்களை அப்டேட் வாயிலாக வழங்கும் பணியிலேயே ஏத்தர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications









