ஒரு பைசா கூட செலவில்லாமல் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சொந்தமாக்கலாம்! எப்படி தெரியுமா?
ஏத்தர் எனர்ஜி தற்போது தனது வாடிக்கையாளர்களுக்காக 100% ஆன்-ரோடு பைனான்ஸ் லோன் ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. தனது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த இப்படியான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை அளவு கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். இது குறித்து விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
ஏத்தர் நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் ஒரு முக்கியமான நிறுவனமாக இருந்து வருகிறது. இந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்புகள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. பலர் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளை ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர். இது மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் ஏத்தர் நிறுவனம் தனது விற்பனை அதிகப்படுத்த பல்வேறு ஆப்ஷன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்கனவே தனியார் வங்கிகள் மூலம் 60 மாத லோன் ஆப்ஷனை அறிமுகப்படுத்தியது. அதன்படி வாடிக்கையாளர்கள் குறைவான இஎம்ஐ மூலம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க முடியும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் ஏத்தர் நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்கள் ஒரு ரூபாய் கூட செலுத்தாமல் 100% லோன் மூலம் ஏத்தர் எலக்ட்ரிக் வாகனத்தை வாங்கும் ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் பேங்க், ஹீரோ ஃபின் கார்ஃப், சோழமண்டலம் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

இதன்படி வாடிக்கையாளர்கள் ஒரு ரூபாய் கூட முன்பணம் செலுத்தாமல் தங்களது ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சொந்தமாக்கி கொள்ள முடியும். ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பான விற்பனையை பெற்று வருகிறது. பலர் இந்நிறுவனத்தின் ஸ்கூட்டரை விரும்பி வாங்கி வருகின்றனர்.
இந்நிறுவனம் கடந்து 2019 ஆம் ஆண்டு தனது விற்பனையை தொடங்கிய நிலையில் அப்பொழுது ஆன விற்பனையை விட கடந்த ஆண்டு ஆறு மடங்கு அதிகமான விற்பனை நடந்துள்ளது. உண்மையிலேயே இந்த விற்பனைக்கு மேலும் பல மடங்காக்குவதற்காக தான் இந்த முன்பணம் இல்லாத 100 சதவீத பைனான்ஸ் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் அறிமுகப்படுத்திய 60 மாத லோன் தான் முதல் இவி டூவீலர் செக்மென்டிலேயே அப்படியான லோன் முறையை அறிமுகப்படுத்திய நிறுவனம் ஆகும். அதன்படி ஒருவர் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கினால் மாதம் ரூபாய் 2999 இஎம்ஐயாக செலுத்த வேண்டும். இதன் மூலம் ஒருவர் குறைவான மாத செலவில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கிக் கொள்ள முடியும்.
எத்தர் நிறுவனத்தை பொறுத்தவரை ஏத்தர் 450 எக்ஸ் மற்றும் ஏக்கர் 450எஸ் ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை விற்பனை செய்து வருகிறது. இது ஏத்தர் 450 எக்ஸ் வாகனம் ரூபாய் 1.28 லட்சம் என்ற விலையிலும் 450எஸ் என்ற வாகனம் அறிமுக விலையாக ரூபாய் 1.29 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது.
இதில் ஏத்தர் 450எக்ஸ் அதிகபட்சமாக 90 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவும் முழு பேட்டரி சார்ஜில் 115 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஹோம், போர்ட்டபிள் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜர்கள் உள்ளன. இதில் ஃபாஸ்ட் சார்ஜர் மட்டும் பொது இடத்தில் உள்ள சார்ஜராக இருக்கிறது.
இதில் ஹோம் மற்றும் போர்ட்டபிள் சார்ஜர் நான்கு மணி நேரம் 30 நிமிடத்தில் 0 முதல் 80 சதவிதமான சார்ஜை ஏற்றிக்கொள்ளும். ஃபாஸ்ட் சார்ஜர் பத்து நிமிடத்தில் 15 கிலோமீட்டர் தூரம் செல்லும் வரை சார்ஜ் ஏற்றிக்கொள்ளும். ஹோம் மற்றும் போர்டபிள் சார்ஜர்கள் ஸ்கூட்டருடனேயே சேர்த்து விற்பனையாகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது தயாரிப்புகளை சிறப்பாக வைத்திருக்கிறது. அதே நேரம் விற்பனையும் கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. இருந்தாலும் ஓலா அளவிலான விற்பனை அளவை எட்டி பிடிக்க முடியவில்லை இதற்கு ஏற்ற நிறுவனம் சிறு சிறு கிராமங்களையும் டார்கெட் செய்து தனது விற்பனையை அதிகப்படுத்தும் முயற்சியில் இறங்கவில்லை அதை செய்தால் விற்பனை மேலும் அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications








