அபெக்ஸ் பெயரில் ஓலாவிற்கு வரும் எமன்.. வேகம்னா வேகம் அப்படி ஒரு வேகத்துல போகுமாம்! டீசர் வெளியிட்ட ஏத்தர்!
இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஏத்தர் எனெர்ஜி (Ather Energy), விரைவில் புதுமுக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றது. இந்த தகவலை டீசர் படத்தின் வாயிலாகவே நிறுவனம் உறுதிச் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஏத்தர் எனெர்ஜி (Ather Energy). இந்த நிறுவனம் தற்போதைய நிலவரப்படி 450எக்ஸ் (450X) மற்றும் 450எஸ் (450S) ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையிலேயே இந்த வரிசையில் புதுமுக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் ஒன்றை இணைக்க இருப்பதை அந்நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கின்றது. டீசர் வாயிலாக இந்த தகவலை ஏத்தர் எனெர்ஜி உறுதிப்படுத்தி இருக்கின்றது. இதனை நிறுவனத்தின் சிஇஓ-வே எக்ஸ் தளம் வாயிலாக வெளியிட்டு இருக்கின்றார்.
இந்த டீசர் படத்தின் வாயிலாக புதுமுக ஏத்தர் எலெக்ட்ரிக் டூ-வீலரின் பெயர் என்ன என்பது தெரிய வந்திருக்கின்றது. 450 அபெக்ஸ் (450 Apex)என்கிற பெயரிலேயே அந்த புதுமுக மின்சார டூ-வீலர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த வாகனம் இப்போது நிறுவனத்தால் விற்பனைக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து மாடல்களைக் காட்டிலும் அதிக திறனை வெளியேற்றக் கூடியதாக இருக்கும் என தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்போதைய நிலவரப்படி நிறுவனத்தின் அதிக பவர்ஃபுல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக 450எக்ஸ் இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிமீ ஆகும். மேலும், இதனால் வெறும் 3.3 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டிவிடும். இந்த அதிக திறனை வெளியேற்றக் கூடிய ஓர் ஏத்தர் தயாரிப்பாகவே 450 அபெக்ஸ் இருக்கப் போகின்றது.
இந்த தயாரிப்பு ஓலா எஸ்1 ப்ரோவிற்கு மிகப் பெரிய சவாலை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என தெரிகின்றது. ஆமாங்க, ஏத்தர் எனெர்ஜி ஓலா எஸ்1 ப்ரோவிற்கு போட்டியாகவே 450 அபெக்ஸ் மாடலை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. ஓலா எஸ்1 ப்ரோ இந்தியர்களின் ஃபேவரிட் எலெக்ட்ரிக் டூ-வீலராக மாறி இருக்கின்றது.
ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 5.5 கிலோவாட் திறன் கொண்ட மின்சார மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 120 கிமீ ஆகும். மேலும், இதனால் 0-40 கிமீ வேகத்தை வெறும் 2.6 செகண்டுகளிலேயே எட்டிவிட முடியும்.
இத்தகைய திறனுக்கே டஃப் கொடுக்கக் கூடியதாக 450 அபெக்ஸ் இருக்கும் என கூறப்படுகின்றது. ஆனால், இதன் துள்ளியமான வேகம் பற்றிய விபரம் அறிவிக்கப்படவில்லை. மேலும், ஓலா எஸ்1 ப்ரோவில் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 140 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த ரேஞ்ஜ் திறனுக்கும் 450 அபெக்ஸ் டஃப் கொடுக்கும் வகையிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், இந்த வாகனம் குறித்து எந்தவொரு தகவலும் துள்ளியமாக வெளியிடப்படவில்லை. விரைவில் அதுபற்றிய அனைத்து விபரங்களையும் ஏத்தர் எனெர்ஜி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பொருத்தவரை ஏத்தர் எனெர்ஜியின் மற்ற தயாரிப்புகளான 450எக்ஸ் மற்றும் 450எஸ் ஆகியவற்றைப் போல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மிக முக்கியமாக 450 எக்ஸ் அதிக சிறப்பு வசதிகள் தாங்கிய ஏத்தர் தயாரிப்பாக்க காட்சியளிக்கின்றது. அதன் உயர்நிலை தேர்வில் கூகுள் மேப், ப்ளூடூத் இணைப்பு, ஏத்தர் கன்னெக்ட் ப்ரோ, ஆட்டோ ஹோல்ட் மற்றும் ரிவர்ஸ் அசிஸ்ட் போன்ற ஏகப்பட வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இவற்றுடன் மிக சிறந்த ரேஞ்ஜ் திறனுக்காக 450 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.7 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதை முழுமையாக சார்ஜ் செய்தால் 146 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமாதிரியான அதிக சிறப்பு வசதிகள் தாங்கிய புதிய ஏத்தர் வாகனமாகவே இந்தியாவில் விற்பனைக்குக் களமிறங்க இருக்கின்றது ஏத்தர் 450 அபெக்ஸ். இதன் வருகையும் தற்போது இந்தியர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு ஆழ்த்தி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நல்ல வரவேற்பு மின்சார இருசக்கர வாகனங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையால்தான் வாகன உற்பத்தியாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு மின்சார டூ-வீலர்களை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையிலேயே ஓலாவிற்கு ஆப்பு வைக்கும் விதமாக 450 அபெக்ஸை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது ஏத்தர் எனெர்ஜி.


Click it and Unblock the Notifications








