மார்ச் மாதம் 353% வளர்ச்சியை பதிவு செய்த ஏத்தர்! எவ்வளவு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வித்திருக்காங்க தெரியுமா?

ஏப்ரல் மாதம் துவங்கிவிட்ட நிலையில் ஒவ்வொரு வாகன தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது கடந்த மார்ச் மாதம் மற்றும் 2022-23ம் நிதியாண்டிற்கான விற்பனை நிலவரங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த வரிசையில் இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஏத்தர் நிறுவனம் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதைப் பற்றி விரிவாகக் காணலாம்.

ஏத்தர் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் மொத்தம் 11,754 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு மார்ச் மாதம் வெறும் 2591 ஸ்கூட்டர்களை தான் விற்பனை செய்திருந்தது. ஒரே ஆண்டில் 353 சதவீத வளர்ச்சியை இந்நிறுவனம் பெற்றுள்ளது இது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை மார்கெட்டில் மிகப்பெரிய வளர்ச்சியாகும். ஓலா நிறுவனமும் ஏத்தர் நிறுவனமும் தான் இவ்வளவு பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

மார்ச் மாதம் 353% வளர்ச்சியை பதிவு செய்த ஏத்தர்! எவ்வளவு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வித்திருக்காங்கதெரியுமா?

அடுத்தாக நிதியாண்டு விபரங்களைப் பொருத்தவரை 2022-23ம் நிதியாண்டில் இந்நிறுவனம் மொத்தம் 82,146 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் கடந்த 2021-22ம் நிதியாண்டின் விற்பனை விபரங்களை வெளியிடவில்லை இதனால் இதை ஒப்பிடுவது என்பது முடியாத காரியமாகிவிட்டது. ஏத்தர் நிறுவனம் கடந்த நிதியாண்டில் ஒவ்வொரு மாதமும் தனது விற்பனையை 17.39 சதவீதம் என்ற சராசரியில் அதிகரித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் மொத்தம் 10,013 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்திருந்தது. இந்த மாதம் 11,754 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. என்னதான் ஏத்தர் ஸ்கூட்டருக்கு மார்கெட்டில் நல்ல வரவேற்பு இருந்தாலும் ஓலா மற்றும் டிவிஎஸ் ஆகிய நிறுவனங்கள் தான் செக்மெண்டில் கெத்து காட்டி வருகின்றனர்.

உதாரணமாக ஓலா நிறுவனம் கடந்த மார்ச் மாதம் 27 ஆயிரம் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் மட்டும் 2 லட்சம் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. அதுவே டிவிஎஸ் நிறுவனத்தின் ஐக்யூப் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டால் கடந்த மாதம் மட்டும் மொத்தம் 15,364 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது.

இவை இரண்டையும் விட ஏத்தர் நிறுவனம் குறைவான ஸ்கூட்டர்களையே விற்பனை செய்துள்ளது இது குறித்து அந்நிறுவனத்தின் தொழிற்பிரிவு தலைமை அதிகாரி ரன்வீட் சிங் போக்கேலா கூறும் போது : " கடந்த நிதியாண்டில் முதல் 6 மாதங்கள் செம கண்டெக்டர் சிப் உள்ளிட்ட தட்டுப்பாடுகள் இருந்தது. எங்களால் முழு அளவில் தயாரிப்பை மேற்கொள்ள முடியவில்லை. தற்போது மெல்ல மெல்ல எங்கள் தயாரிப்பை அதிகரித்து 11 ஆயிரம் ஸ்கூட்டர்களை தயாரித்துள்ளோம்

கடந்த மாத விற்பனையானது ஒரே ஆண்டில் 4 மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. தற்போது 116 ஷோரூம்களை திறந்துள்ளோம். இவி வளர்ச்சிக்காக 911 பொது இடங்களில் பாஸ்ட், சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைத்துள்ளோம். தற்போது இந்தியா முழுவதும் 1224 ஏத்தர் கிரிட்கள் இருக்கிறது. சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்கவுள்ளோம் " எனக் கூறினார்.

தற்போது ஐபிஎல் போட்டிகள் துவங்கியுள்ள நிலையில் ஏத்தர் நிறுவனம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஸ்பான்ஸராக இருக்கிறது. இதுவே ஏத்தருக்கு போட்டியாக வளரும் ஆம்பியர் நிறுவனம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ஸ்பான்ஸராக இருக்கிறது என்பத குறிப்பிட்தட்டது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Sunday, April 2, 2023, 9:51 [IST]
English summary
Ather energy records 353 growth on 2023 march sales
மேலும்... #ஏத்தர் #ather
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+