எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ பிடித்து எரிந்ததற்கு பேட்டரி காரணம் இல்லை! ஏத்தர் புதிய விளக்கம்!
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெங்களூருவில் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று தீ பிடித்து எரிந்தது. இது குறித்து ஏத்தர் குழு விசாரணை நடத்தியது. இதில் தீ விபத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டு பிடித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் கடந்த ஓராண்டாக அவ்வப்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் தொடர்ந்து தீ பிடித்து எரியும் சம்பவம் அதிகமாக நடந்து வருகிறது. இதற்கு முன்னர் இப்படியான பல சம்பவங்களில் உயரிழிப்புகள் கூட நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து தீப்பிடித்து வருவதால் இந்த பிரச்சனையில் நேரடியாக மத்திய அரசே தலையிட்டு பேட்டரி கட்டமைப்பில் தான் பிரச்சனை என்பதை அறிந்து அதை சரி செய்தது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஏத்தர் நிறுவனத்தின் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ விபத்தில் சிக்கியது. இதற்கு முன்னர் ஏத்தர் நிறுவனத்தின் ஸ்கூட்டர் பெரிய அளவில் தீவிபத்தில் சிக்காமலிருந்ததால் அந்த நிறுவனத்தின் மீது நம்பிக்கை இருந்தது கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெங்களூருவில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஏத்தர் நிறுவனத்தின் தொழிற்நுட்ப குழு விசாரணை நடத்தியது. அவர்கள் விபத்தில் சிக்கிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கைபற்றி அதை ஆய்வு செய்தனர். பல்வேறு கட்ட ஆய்விற்குப் பிறகு இந்த குழு தீ விபத்திற்கான முக்கியமான காரணத்தைக் கண்டு பிடித்துள்ளது அதை விளக்கமாக ஏத்தர் நிறுவனமே தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளது.

அதன்படி தீவிபத்தில் சிக்கிய ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருந்த டார்க்டு மோட்டார் கண்ட்ரோலர் கனெக்டரில் தான் தீ முதலில் படித்துள்ளது. இது தான் தீ விபத்திற்கு முக்கியமான காரணமாக இருந்துள்ளது. இந்த தீ ஏற்பட்டதும், ஆன்போர்டு பாதுகாப்பு அம்சங்கள் இந்த வாகனத்தின் பேட்டரியிலிருந்து வரும் சப்ளையை கட் செய்துவிட்டது. இருந்தாலும் அதற்குள் தீ பிடித்துவிட்டதால் தீ பரவி, ஸ்கூட்டர் முழுவதும் எரிந்துவிட்டது என அந்த குழு கண்டுபிடித்துள்ளது.
இந்நிலையில் ஏத்தர் நிறுவனம் தனது விளக்க அறிக்கையில் மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எரிந்ததுபோல பேட்டரி சூடாகி நடந்த பிரச்சனை கிடையாது என்றும், இந்த சம்பவத்தில் டேஷ்போர்டு, பேட்டரி பேக், மற்றும் பிஎம்எஸ் ஆகிய விஷயங்கள் சேதமாகாமலிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இந்த விபத்திற்குக் காரணமாக வயரிங் பிரச்சனை ஒரு மனித தவறாமல் நிகழ்ந்த சம்பவம் என்றும், இது அரிதிலும் அரிதாக நடக்கும் சம்பவம் இனி இப்படியான சம்பவம் நடக்காமல் 2 முறை செக் செய்யும்படி தயாரிப்பு நடைமுறையில் மாற்றம் செய்யவுள்ளதாக விளக்கமளித்துள்ளது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு ஏத்தர் நிறுவனம் குறிப்பிட்ட பேட்ஜ் ஸ்கூட்டர்களை திரும்ப அழைத்துள்ளது. அதில் இந்த வயரிங் பிரச்சனை இருக்கிறதா என்பதைச் சோதனை செய்து பிரச்சனை இருந்தால் உடனே சரி செய்ய முடிவு செய்துள்ளது. இந்தியாவில் சில நிறுவனங்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே தீவிபத்தில் சிக்காமலிருந்தது. அதில் ஏத்தர் நிறுவனமும் ஒன்றும்.
இதற்கு முன்னர் ஒரே ஒரு சம்பவத்தில் மட்டும் ஏத்தர் எக்ஸ்பிரியன்ஸ் சென்ரில் பேட்டரி பேக் உள்ள தண்ணீர் சென்றதால் ஒரு தீ விபத்து நடந்தது. அதன் பின்னர் வாடிக்கையாளரிடம் ஸ்கூட்டர் இருக்கும் போது தீ விபத்து நடந்தது இதுவே முதன் முறை. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








