நம்ம மத்திய அரசு இந்த விஷயத்தில் கில்லாடிங்க... மக்களின் வரியை எப்படி மிச்சப்படுத்துறாங்க பாருங்க!!
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு வழங்கி வந்த ஊக்கத்தொகையை நிறுத்தி மத்திய அரசு ஓர் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. எதற்காக இந்த நடவடிக்கை? இதனால் பாதிக்கப்பட்டுள்ள எலக்ட்ரிக் வாகன நிறுவனங்களை பற்றி இனி தொடர்ந்து பார்க்கலாம்.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் சார்ஜர்களை வழங்குவதை நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் எதிரொலியாகவே, அரசாங்கம் சார்பில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுள் வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் சார்ஜர் என விற்பனை செய்யப்பட்டவைகளுக்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட தொகையை திரும்ப அவர்களிடமே கொடுக்குமாறு அவற்றின் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஆணையிடப்பட்டுள்ளது.

ஃபேம்-2 திட்டத்தின்படி மத்திய அரசு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகையை வழங்கி வந்தது. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையில் ஓலா எலக்ட்ரிக், ஏத்தர், ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் டிவிஎஸ் மோட்டார் போன்ற பிரபலமான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன. தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கியவர்களிடம் இருந்து சார்ஜருக்காக வசூலித்த தொகையை திரும்பி வழங்குவதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஏற்கனவே அறிவித்துவிட்டது.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தை தொடர்ந்து ஏத்தர், ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் டிவிஎஸ் போன்ற மற்ற நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தொகையை திரும்ப வழங்குவதாக அறிவித்துள்ளன. மேலும், இந்திய சந்தையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துவரும் மற்ற நிறுவனங்களும் கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டியுள்ளது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள் மொத்தமாக திரும்ப செலுத்த வேண்டிய தொகை சுமார் ரூ.300 கோடி ஆகும்.

இது எலக்ட்ரிக் வாகன துறையை தடம் புரள செய்யும் என குற்றஞ்சாட்டி உள்ள ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த சில வருடங்களாக எலக்ட்ரிக் வாகன துறை குறிப்பிடத்தக்க அளவிலான வெற்றியை பெறவில்லை. சார்ஜர் விலையில் சமீபத்தில் கொண்டுவரப்பட்டுள்ள ஒழுங்குமுறை போன்றவற்றினால் தேவையற்ற முதலீடுகள் பாதித்துள்ளன" என குறிப்பிட்டுள்ளது.
ரூ.130 கோடி வரையில் வாடிக்கையாளர்களுக்கு ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் வழங்க உள்ளதை போன்று, ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ரூ.140 வரையில் தனது 95,000 வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனங்கள் இரண்டும் சேர்த்து ரூ.18 கோடி வரையில் அவற்றின் 90,000 வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும். மத்திய அரசு ஊக்கத்தொகையை நிறுத்தி, ஏறக்குறைய ரூ.1,200 கோடியை எடுத்துக் கொண்டுள்ளதாக எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பாளர்கள் சமூகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு வழங்கிவந்த ஊக்கத்தொகையை நிறுத்தி இருப்பதற்கு மற்றொரு காரணம், ஃபேம் திட்டத்தின் மூலம் பயன்களை எல்லா நிறுவனங்களும் பெறாதது ஆகும். எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முழுக்க முழுக்க இந்தியாவில் கிடைக்கும் பாகங்களை கொண்டுதான் தயாரிக்க வேண்டும். இதுதான் ஃபேம்-2 திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் சார்ஜர்கள் விஷயத்தில் ஓர் ஒழுங்குமுறையை கொண்டுவரவே இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதாவது, எல்லா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் ஸ்டாண்டர்ட்டாக ஒரே மாதிரியான இவி சார்ஜர் அமலுக்கு வரலாம். மேலும், இந்த நடவடிக்கையில் தற்போதைக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே அடங்குகின்றன. எலக்ட்ரிக் 3 மற்றும் 4-சக்கர வாகனங்கள் உட்படவில்லை.


Click it and Unblock the Notifications









