ஓலாவுக்கு போட்டியா ஏத்தர் விட்ட ஸ்கூட்டரின் விலை இவ்வளவு தானா? செமயா இருக்குதே!

ஏத்தர் நிறுவனம் தனது என்ட்ரி லெவல் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக 450 எஸ் என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டர் ஓலா நிறுவனத்தின் என்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான எஸ்1 ஏர் என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாகக் களமிறங்குகிறது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

ஏத்தர் நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் தரமாக இருப்பதால் மக்கள் பலர் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளை விரும்பி வாங்கி வருகின்றனர். இந்நிலையில் ஏத்தர் நிறுவனம் குறைந்த விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த முடிவு செய்திருந்தது.

ather 450s

அதன்படி தற்போது ஏத்தர் 450 எஸ் என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை என்ட்ரி லெவல் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டர் மார்க்கெட்டில் விற்பனையாகும் 125சிசி பெட்ரோல் ஸ்கூட்டருக்கு நிகராக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டருக்காக பலர் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் தற்போது இந்த ஸ்கூட்டர் அறிமுகமாகி உள்ளது.

இந்த ஏத்தர் 450 எஸ் ஸ்கூட்டருக்கான புக்கிங் வரும் ஜூலை மாதம் முதல் இந்தியா முழுவதும் உள்ள ஏத்தர் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களில் துவங்குகிறது. இந்த ஸ்கூட்டரை பொறுத்தவரை 3 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்டது. இது ஒரே சார்ஜில் 115 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ather 450s

இந்த ஏத்தர் 450 ஸ்கூட்டர் அதிகபட்சமாக 90 கிலோ மீட்டர் வேகும் வரை சீறிபாயும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சிட்டி பயன்பாட்டிற்கு ஏற்ற ஸ்கூட்டர் ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் விலையைப் பொறுத்தவரை ரூ1,29,999 என்ற எக்ஸ் ஷோரூம் விலையை நிர்ணயம் செய்துள்ளது.

இந்த விலை என்பது ஜூன் மாதம் முதல் மத்திய அரசு குறைத்த ஃபேம் 2 திட்டத்தின் படி மறுசீரமைப்பு செய்யப்பட்ட விலை தான். இந்த ஸ்கூட்டருக்கான டெலிவரியும் ஜூலை மாதமே துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் மார்க்கெட்டில் நேரடியாக ஓலா எஸ்1 ஏர் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாகக் களமிறங்குகிறது.

ather 450s

இந்த ஏத்தர் 450 எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ தருண் மேத்தா கூறும்போது : "ஏத்தரின் 450 பிளாட்பார்ம் மிகப்பெரிய வெற்றியைச் சந்தித்துள்ளது இதை நாங்கள் அனைத்து தரப்பிலான மக்களுக்கும் ஏற்றவாறு வடிவமைக்கத் திட்டமிட்டோம். அதன்படி ஏத்தர் 450s புதிய என்ட்ரி லெவல் வேரியண்டாக அறிமுகப்படுத்தியுள்ளோம்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்தவரை மக்கள் தரமான நம்பகமான ஸ்கூட்டரை தான் விரும்புகின்றனர். அதை நாங்கள் தருகிறோம். இந்த 450 எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரைடருக்கு சுகமான பாதுகாப்பான அனுபவத்தையும் அதே நேரம் சிறப்பான பெர்பார்மன்ஸையும் வழங்கும்.இது ரைடர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்" எனக் கூறினார்

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏத்தர் ஸ்கூட்டரை விரும்பும் பலர் குறைந்த விலை ஸ்கூட்டருக்காக நீண்ட நாட்களாகக் காத்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த ஸ்கூட்டர் வெளியாகியுள்ளது ஏத்தர் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வருவது சாலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கையை நிச்சயம் அதிகப்படுத்தும்.

More from DriveSpark

Article Published On: Friday, June 2, 2023, 9:55 [IST]
English summary
Ather launched 450s electric scooter price range battery details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X