ஓலாவுக்கு போட்டியாக ஏத்தரும் எலெக்ட்ரிக் பைக்கை கொண்டு வரப்போறாங்க! பாக்கவே செமயா இருக்குதே!

ஏத்தர் நிறுவனம் அடுத்த நிதியாண்டு முடிவதற்குள் இரண்டு புதிய எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. ஓலாவிற்கு போட்டியாக புதிய எலக்ட்ரிக் பைக்கையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் மார்கெட்டில் மிகப்பெரிய போட்டி வரப்போகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஏத்தர் நிறுவனம் தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனால் இந்நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மார்க்கெட்டில் ஓலா நிறுவனத்திற்கு போட்டியாக ஏத்தர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

ather electric bike

ஓலா நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் தனது புதிய எலெக்ட்ரிக் பைக்குகளை களம் இறக்க முடிவு செய்துள்ளது. அதன்படி நான்கு புதிய எலெக்ட்ரிக் பைக்குளை நிறுவனம் கான்செப்ட் வெர்ஷன் ஆக பொதுவெளியில் காட்சிப்படுத்தியுள்ளது. இது மார்க்கெட்டில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஓலா நிறுவனத்திற்கு கடும் போட்டியை வழங்கும் வகையில் ஏத்தர் நிறுவனமும் தனது புதிய எலெக்ட்ரிக் பைக்கை களம் இறக்க முடிவு செய்துள்ளது. அடுத்த நிதியாண்டு முடிவதற்குள் ஏத்தர் நிறுவனம் இரண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. அதில் ஒன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகவும் மற்றொன்று எலெக்ட்ரிக் பைக்காகவும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ather electric bike

இதற்காக இந்நிறுவனம் ஹீரோ மோட்டோ கார்ப மற்றும் சிங்கப்பூர் சவோரியன் ஃபண்ட் ஆகிய இரு நிறுவனங்களிடமிருந்து 108 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான முதலீட்டை பெற்றுள்ளது. நிறுவனத்தின் தலைமை தொழில் அதிகாரி ரன்வீத் சிங் பூகேலா கூறும் போது: " ஏத்தர் நிறுவனமும் இந்திய மார்க்கெட்டில் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கான போட்டியில் இடம் பெறும். அதற்கு இன்றிலிருந்து 3 முதல் 3.5 ஆண்டுகள் வரை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது" என கூறினார்.

இதற்காக நிறுவனம் புதிதாக ஒரு பிளாட்பார்மை உருவாக்க முடிவு செய்துள்ளது. அது அடுத்த எட்டு மாதங்களுக்குள் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது . இந்நிறுவனத்தின் அடுத்த புதிய தயாரிப்புகள் எல்லாம் அந்த பிளாட்பார்மில் தான் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது ஓலாவிற்கு கடும் போட்டியை இந்த ஏத்தர் நிறுவனம் வழங்கி வருகிறது.

தற்போது இந்தியாவில் உள்ள எலெக்ட்ரிக் டூவீலர் விற்பனையில் 15 சதவீத மார்க்கெட் பங்கை வகித்துள்ளது. சமீபத்தில் மத்திய அரசு ஃபேம் மானியத்தை குறைத்ததன் காரணமாக இந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை எல்லாம் சற்று உயர்ந்துள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் தனது 450s என்ற குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது.

இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் ஒட்டுமொத்த எலெக்ட்ரிக் விற்பனையில் 15 சதவீதத்தில் இருந்து 30 முதல் 40 சதவீதம் வரை மார்க்கெட் பங்கு விரிவடையும் என ஏத்தர் நிறுவனம் எதிர்பார்க்கிறது. இந்நிறுவனம் அடுத்த நிதியாண்டு முடிவதற்குள் இரண்டு புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை களம் இறக்க முடிவு செய்துள்ளது.

ஏத்தர் நிறுவனம் தற்போது மார்க்கெட்டில் ரூபாய் 1.35 லட்சம் முதல் 1.65 லட்சம் என்ற விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. ஓலா நிறுவனத்துடன் ஒப்பிடும்போது ஓலா நிறுவனம் இதைவிட குறைந்த விலையில் எத்தர் ஸ்கூட்டர்களை எல்லாம் விற்பனை செய்து வருகிறது. ஓலா நிறுவனத்திலும் தற்போது எஸ்1 ரேஞ்சில் எஸ்1 எக்ஸ் என்ற குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகப்பெரிய மார்க்கெட் வளர்ந்து விட்டது. பெட்ரோல் ஸ்கூட்டருக்கு பதிலாக பலர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விரும்பி தேர்வு செய்ய தொடங்கி விட்டனர். இதனால் இதன் விற்பனை பெட்ரோல் ஸ்கூட்டருக்கு நிகராக இருந்து வருகிறது. இந்நிலையில் ஏத்தர் நிறுவனம் இப்படியான ஒரு முடிவை எடுத்துள்ளது. நிச்சயம் வரவேற்கத்தக்கது தான்.

More from DriveSpark

Article Published On: Monday, September 25, 2023, 16:45 [IST]
English summary
Ather likely to introduce new e scooters and e motorcycles in india
மேலும்... #ஏத்தர் #ather #ather energy
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+