உலகத்தரம் வாய்ந்த புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! இனி பெட்ரோல் வண்டிகளை சீண்ட கூட ஆள் இருக்காது!
இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் நிறுவனங்களில் ஒன்று ஏத்தர் (Ather). இந்த நிறுவனம் உலகத்தரம் வாய்ந்த பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து இந்திய சந்தையில் விற்பனை செய்து கொண்டுள்ளது. இதுவே அதன் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம்.
தற்போதைய நிலையில் ஏத்தர் 450 ப்ளஸ் (Ather 450 Plus) மற்றும் ஏத்தர் 450எக்ஸ் (Ather 450X) ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஏத்தர் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. ஆனால் இவற்றின் விலை (Price) மிகவும் அதிகம். தற்போதைய நிலையில் ஏத்தர் 450 ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1.35 லட்ச ரூபாய் ஆகவும், ஏத்தர் 450 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1.58 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது.

இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த விலைக்கு ஏற்ற தயாரிப்பாக இவை இருந்தாலும் கூட, அனைவராலும் இவ்வளவு அதிகமான பணத்தை கொடுத்து வாங்க முடியாது. எனவே ஏத்தர் நிறுவனத்திடம் இருந்து ஓரளவிற்கு விலை குறைவான புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். அந்த எதிர்பார்ப்பு கூடிய விரைவில் நிறைவேறலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் நகரில் ஏத்தர் நிறுவனம் தற்போது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை சாலை சோதனை செய்து வருகிறது. இது ஏத்தர் நிறுவனத்தின் விலை குறைவான புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என கூறப்படுகிறது. அத்துடன் கூடிய விரைவிலேயே இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது விற்பனை செய்யப்படும் ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், 3.7 kWh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் ஏத்தர் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகவும் விலை குறைவானது என்பதால், இதைக்காட்டிலும் சிறிய பேட்டரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 146 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அளவில் சிறிய பேட்டரி என்பதால், ஏத்தர் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் (Range) இதைக்காட்டிலும் குறைவாக இருக்கலாம்.
எனினும் 7 இன்ச் டச்ஸ்க்ரீன் உள்பட பல்வேறு அதிநவீன வசதிகளை எல்லாம் ஏத்தர் நிறுவனத்தின் புதிய விலை குறைவான ஸ்கூட்டர் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், 1 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு களமிறக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே நாங்கள் மேலே கூறியுள்ள ஏத்தர் நிறுவனத்தின் மற்ற 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை காட்டிலும் இதன் விலை மிக மிக குறைவானதாக இருக்கலாம் என தெரிகிறது.
ஏத்தர் போன்ற உலகத்தரம் வாய்ந்த ஒரு நிறுவனத்திடம் இருந்து 1 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தால், உண்மையிலேயே அது மிகப்பெரிய விஷயமாக இருக்கும். எனவே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏத்தர் நிறுவனத்தின் புதிய விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஏத்தர் நிறுவனத்தின் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையிலும் சாதிக்கும் என கருதப்படுகிறது.
இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் டிவிஎஸ் (TVS), பஜாஜ் (Bajaj) மற்றும் ஓலா (Ola) போன்ற முக்கியமான நிறுவனங்களுக்கு ஏத்தர் நிறுவனத்தின் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் விற்பனைக்கு வரவுள்ள ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருடனும் (Honda Activa Electric Scooter), இது மோதலாம். ஏத்தர் நிறுவனத்தின் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை குறைவானது என்பதால், பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கும் (Petrol Scooters) கூட விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








