Ather 450X எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இவ்ளோ குறைவான ஆரம்ப விலையிலா!.. இந்த தமிழ் புத்தாண்டுல ஒன்ன வாங்கி போட்றலாம்!

பிரபல மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஏத்தர் அதன் தயாரிப்புகளை புதுப்பித்து இருக்கின்றது. இதன் அடிப்படையில், இரு புதிய கான்ஃபிகரேசன்களை 450எக்ஸ் மாடலில் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது. நிறுவனத்தின் இந்த செயலால் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை மிகக் கடுமையாகக் குறைந்திருக்கின்றது.

ரூ. 98,183க்கே ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளது. இது ஏத்தர் 450எக்ஸ் தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இதே தேர்வை கூடுதல் சிறப்பு வசதிக் கொண்டதாகவும் விற்பனைக்கு வழங்க இருப்பதாக ஏத்தர் தெரிவித்து இருக்கின்றது.

Ather 450x

இதன் அடிப்படையில் ப்ரோ-பேக் எனும் பேக்கேஜை அது அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த பேக்கேஜைக் கொண்ட ஏத்தர் 450எக்ஸ் தேர்வின் விலை 1 லட்சத்து 28 ஆயிரத்து 443 ரூபாய் ஆகும். இதுவும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த விலையில் வீட்டிலேயே வைத்து சார்ஜ் செய்துக் கொள்ளும் சார்ஜர் வழங்கப்பட இருக்கின்றது.

இதுதவிர இன்னும் பல புதிய தொழில்நுட்ப வசதிகள் மற்றும் கூடுதல் சிறப்பு வசதிகள் ஆகியவற்றையும் 450 எக்ஸ் ப்ரோ-பேக் தேர்வில் ஏத்தர் வழங்க இருக்கின்றது. இதன் விளைவாகவே வழக்கமான 450எக்ஸ் தேர்வைக் காட்டிலும் ப்ரோ-பேக் வசதிக் கொண்ட 450 எக்ஸ்-க்கு அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த மாற்றத்துடன் சேர்த்து இருசக்கர வாகனத்தின் தரத்திலும் குறிப்பிடத்தக்க சில மாற்றங்களை ஏத்தர் செய்திருக்கின்றது. இதனால், இருசக்கர வாகனத்தின் ரைடு டைனமிக்ஸ், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் பல விஷயங்கள் மேம்பட்டு காணப்படுகின்றன. ஏத்தரின் இந்த மேம்படுத்தல் செயல்கள் வாங்குபவர்களை வரும் காலத்தில் கட்டாயம் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நிறுனவனத்தின் மேம்படுத்தல்கள் மேலே பார்த்தவையோடு முடிந்துவிடவில்லை. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் திறன் வெளிப்பாடு மற்றும் ரேஞ்ஜ் விஷயத்திலும் லேசாக மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. 6.4 kW திறன் கொண்ட மின் மோட்டாரே இந்த வாகனத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 26 என்எம் டார்க் வரை வெளியேற்றும்.

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிமீ ஆகும். அதேவேளையில், வெறும் 3.3 செகண்டுகளில் இந்த வாகனம் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டிவிடும். இத்தகைய சூப்பரான எலெக்ட்ரிக் மோட்டாருடன் சேர்த்து ஓர் ஃபுல் சார்ஜில் 146 கிமீ ரேஞ்ஜை தரும் பேட்டரி பேக்கையும் ஏத்தர் அதன் 450 எக்ஸ் மாடலில் வழங்கி இருக்கின்றது.

இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக 450 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.7 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஸ்டாண்டர்டு ஏத்தர் 450 எக்ஸ் மற்றும் 450 எக்ஸ் ப்ரோ-பேக் ஆகிய இரண்டிலும் இதே பேட்டரி பேக் மற்றும் பவர் கொண்ட மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

ஆனால், 450 எக்ஸ் ப்ரோ-பேக்கில் ஐந்து சூப்பரான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டு இருப்பதால் அதன் ரேஞ்ஜ் திறன் லேசாக மாறுபட்டுக் காணப்படும். வார்ப் (Warp), ஸ்போர்ட் (Sport), ரைடு (Ride), ஈகோ (Eco) மற்றும் ஸ்மார்ட் (SmartEco). இதில் ஸ்மார்ட் ஈகோவே அதிக ரேஞ்ஜ் தரக் கூடியதாக இருக்கின்றது.

இதுமட்டுமில்லைங்க ப்ரோ-பேக் வசதிக் கொண்ட 450எக்ஸை அதிக வேகத்தில் சார்ஜ் செய்துக் கொள்ளவும் முடியும். இதுதவிர, ப்ரோ பேக் உடன் கூகுள் மேப், ப்ளூடூத் இணைப்பு, ஏத்தர் கன்னெக்ட் ப்ரோ, ஆட்டோ ஹோல்ட் மற்றும் ரிவர்ஸ் அசிஸ்ட் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏத்தர் நிறுவனம் இந்த புதிய 450 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒட்டுமொத்தமாக ஆறு விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. ஸ்பேஸ் கிரே (Space Grey), ஸ்டில் ஒயிட் (Still White), சால்ட் கிரீன் (Salt Green), ட்ரூ ரெட் (True Red), காஸ்மிக் பிளாக் (Cosmic Black) மற்றும் லூானார் கிரே (Lunar Grey) ஆகியவையே அந்த நிற தேர்வுகள் ஆகும்.

சென்னை விலை விபரம், மேலே நாம் டெல்லி விலை விபரத்தையே பார்த்தோம். சென்னையில் வழக்கமான ஏத்தர் 450 எக்ஸ் 1,16,483 ரூபாய்க்கும், ஏத்தர் 450எக்ஸ் ப்ரோ-பேக் தேர்வு 1,46,743 ரூபாய்க்கும் விற்கப்பட இருக்கின்றது. இந்த விலைகள் அனைத்தும் சென்னை எக்ஸ்-ஷோரூம் மதிப்பு என்பது குறிப்பிடத்தகுந்தது.

புதிய கான்ஃபிகரேஷனை அறிமுகம் செய்த கையோடு ஏத்தர் நிறுவனம் 450 பிளஸ் தேர்வை விற்பனையில் இருந்து வெளியேற்றி இருக்கின்றது. நிறுவனத்தின் இந்த செயல் வாடிக்கையாளர்களை கஷ்டப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இருப்பினும், மிகக் குறைவான விலையில் தன்னுடைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்குக் கிடைக்கும் சூழலை அதே நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதால் மின்வாகன பிரியர்கள் மனநிலை மகிழ்ச்சியான சூழலுக்கு மாறி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நாளுக்கு நாள் டிமாண்ட் அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலில் ஏத்தர் நிறுவனம் தன்னுடைய தயாரிப்புகளின் விலையைக் குறைக்கும் வகையில் நடவடிக்கையை எடுத்திருக்கின்றது. இந்த நடவடிக்கை வரும் காலங்களில் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, April 14, 2023, 15:09 [IST]
English summary
Ather revamps e scooter portfolio here is full details
மேலும்... #ஏத்தர் #ather energy
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+