வர 11 தேதி எல்லாரும் ரெடியா இருங்க! ஏத்தர் செம சர்ப்பிரைஸ் வச்சிருக்காங்க!
ஏத்தர் நிறுவனம் வரும் 11ஆம் தேதி 3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தப் போவதாக டீசர் வெளியிட்டுள்ளது. இதில் குறைந்த விலை ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போக புதிய தலைமுறை 450எக்ஸ் ஸ்கூட்டரும் இடம் பெறலாம். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஏத்தர் நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்யும் ஒரு முன்னணி நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் மார்க்கெட்டில் ஓலா நிறுவனத்திற்கு போட்டியாக எலெக்ட்ரிக் கூட்டுறவு தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் எல்லாம் தரமாக இருப்பதால் மக்கள் பலரின் நிறுவனத்தின் தயாரிப்பாளர் விரும்பி வாங்கி வருகின்றனர்.

தற்போது ஏத்தர்ர் நிறுவனம் மார்க்கெட்டில் 450 சீரியஸில் தான் என்று ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது. அதில் 450 எக்ஸ் மற்றும் 450s என இரண்டு விதமான ஸ்கூட்டர்கள் ஏற்ற நிறுவனத்திடம் இருக்கிறது. இதில் 450 எஸ் இதுவரை விற்பனைக்கு வரவில்லை.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஏத்தர் நிறுவனம் ஒரு புதிய டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏத்தர் நிறுவனம் புதிதாக மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. அதில் ஒன்று ஏத்தர் 450எஸ் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் தான் தற்போது அறிமுகத்திற்கு தயாராக உள்ளது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதாவது ஓலாவின் எஸ் 1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை போல ஏத்தர் நிறுவனம் குறைந்த விலையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரித்து அறிமுகப்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் குறித்த தகவல்கள் எல்லாம் ஏற்கனவே வெளியாகிவிட்டது.
இரண்டாவதாக ஏத்தர் 450 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் 4வது தலைமுறை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஓலா எஸ் 1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக தளத்தில் விற்பனையாகி வருகிறது. அதன் அதை அப்டேட் செய்து ஏத்தர் நிறுவனம் வெளியிட வாய்ப்புள்ளது.
மூன்றாவதாக உள்ள ஸ்கூட்டர் குறித்து தான் தகவல் இதுவரை எதுவும் வெளியாகவில்லை. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் மார்க்கெட்டில் மிகப்பெரிய சஸ்பென்ஸாக ஏற்படுத்தியுள்ளது. என்ன ஸ்கூட்டர் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அல்லது பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முற்றிலும் வித்தியாசமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 11ம் தேதி ஓலா நிறுவனம் வெளியிடும்போது தான் இது குறித்த தகவல்கள் எல்லாம் வெளியாகும்.
நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த டீசரில் முக்கியமான சில வார்த்தைகள் கவனிக்க வைக்கிறது. More Talk and Greater Range என்ற வாசகம் அதிக திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஏற்ற நிறுவனம் வெளியிடப் போவதை மூலம் ஏத்தர் நிறுவனம் தனது 450 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய தலைமுறை அறிமுகப்படுத்தப் போவதை அறிவிப்பதாக இருக்கிறது.
ஏத்தர் நிறுவனம் தற்போது கொண்டு வரப் போகும் புதிய அப்டேட்டில் ஏத்தர் பாட் (Ather BOT) என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். இது ஸ்கூட்டருடன் இன்டிராக்ட் செய்யும் விதத்தையே மொத்தமாக மாற்றி அமைக்கும் வல்லமை வாய்ந்ததாக கூறப்படுகிறது. இது ஓலா 450 எக்ஸ் புதிய தலைமுறை ஸ்கூட்டரில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏத்தர் நிறுவனத்தின் 450எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சுமார் 115 கிலோ மீட்டர் ரேஞ்சு தரக்கூடிய 90 கிலோ மீட்டர் வரை வேகம் செல்லக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கிறது. இது ரூ 1.3 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. இதற்கான புக்கிங் விண்டோ ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது.மக்கள் பலர் இந்த பைக்கை புக்கிங் செய்து வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பண்டிகை காலம் நெருங்குவதை முன்னிட்டு வரிசையாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பை அறிமுகப்படுத்த துவங்கி விட்டனர். அதன் ஒருபடியாக தான் ஏத்தர் நிறுவனம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஒரே நாளில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. என்னென்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








