ஆக 1 முதல் ஏத்தர் ஸ்கூட்டரை சார்ஜ் ஏற்ற கட்டணம் வசூல்! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

ஏத்தர் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் எத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஏத்தர் கிரிட் பொது சார்ஜிங் ஸ்டேஷனில் சார்ஜ் செய்ய கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது. இதுவரை இலவசமாக இருந்த இந்த வசதிக்கு தற்போது கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏத்தர் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களும் எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறது ?எங்கெல்லாம் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்ற விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஏத்தர் நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் மக்களுக்கு பிடித்ததால் ஏகப்பட்ட பேர் இந்த ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்து வாங்கி வருகின்றனர்.ஓலாவிற்கு போட்டியாக ஏத்தர் நிறுவனமும் வளர்ந்து வருகிறது.

ather grid charging price

ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு டிமாண்ட் பெரிய அளவில் இருக்கிறது. எவ்வளவு ஸ்கூட்டர் தயாரித்தாலும் அவ்வளவு ஸ்கூட்டரும் விற்பனையாகும் அளவிற்கு டிமாண்ட் இருக்கிறது. இந்தியாவில் ஒலாவுக்கு போட்டியாக ஏத்தர் நிறுவனம் தான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் ஏத்தர் நிறுவனம் ஏத்தர் கிரிட் என்ற பெயரில் பல முக்கியமான நகரங்களில் பொது இடங்களில் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைந்துள்ளது. தற்போது 1400 சார்ஜிங் ஸ்டேஷன்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சார்ஜிங் ஸ்டேஷனுக்கு இதுவரை ஏத்தர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கியவர்கள் இலவசமாக பயன்படுத்தி வந்தனர்.

ather grid charging price

இந்நிலையில் ஏத்தர் நிறுவனம் மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள ஏத்தர் கிரிட் சார்ஜிங் ஸ்டேஷனில் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சார்ஜ் செய்ய கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி இனிமேல் யாரும் இலவசமாக சார்ஜிங் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சார்ஜிங் ஸ்டேஷனில் சார்ஜ் செய்ய ஒரு நிமிடத்திற்கு ரூபாய் ஒன்று என கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஜிஎஸ்டி தனியாக வசூலிக்கப்படும். ஏக்கர் நிறுவனம் இந்த தகவலை அதன் கிரேட் நெட்வொர்க்களுக்கு தெரிவித்துள்ளது. அதன்படி அங்கு கட்டணம் வசூலிக்கும் ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

ather grid charging price

ஏத்தர் கிரிட் நெட்வொர்க்கில் 15 ஆம் எலெக்ட்ரிக்கல் சாக்கெட் மூலம் ஏத்தர் அல்லாத இவி வாகனங்களுக்கும் சார்ஜ் ஏற்றப்பட்டு வந்தது. தற்போது ஏத்தர் நிறுவனம் அந்த சார்ஜர்களை நீக்கி உள்ளது. இனிமேல் ஏத்தர் வாகனங்களை மட்டுமே அதன் கிரேட் சார்ஜிங் ஸ்டேஷனில் சார்ஜிங் செய்ய முடியும்.

ஏத்தர் கிரேட் மூலம் சார்ஜிங் செய்ய ஏத்தர் வாடிக்கையாளர் ஒருவர் சென்று விட்டால் அவர் ஏத்தர் ஆப் மூலமே அதை கண்காணித்துக் கொள்ள முடியும் அதற்கான பணத்தையும் ஆப் மூலமே செலுத்திக் கொள்ள முடியும். நேரடியாக செலுத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

ஏத்தர் நிறுவனம் இந்த ஏத்தர் கிரிட் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளாக இலவசமாக சார்ஜிங் வசதிகளை வழங்கி வந்தது. சமீபத்தில் தான் ஏத்தர் கிரிட்டில் கட் ஆப் லிமிட் என்ற புதிய ஆப்ஷன் அறிமுகப்படுத்தியது. அதன்படி ஏத்தர் கிரிட் மூலம் சார்ஜிங் செய்யும் வாடிக்கையாளர் யாரும் 80 சதவீதத்திற்கு மேல் பேட்டரியை சார்ஜ் செய்ய முடியாது என்ற விதிமுறையை கொண்டு வந்தது.

இதன் மூலம் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கூடுதலாக வருமானத்தை ஈட்ட உள்ளது. கடந்த ஜூன் மாதம் ஃபேம் டு மானியத்தை மத்திய அரசு குறைந்த நிலையில் ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின விலை அதிகரித்தது. இதனால் ஏத்தர் நிறுவனத்தின் விற்பனை சற்று பாதித்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏத்தர் நிறுவனம் 4 ஆண்டுகளாக இலவசமாக தனது ஏத்தர் கிரிட் வசதியை வழங்கி வந்த நிலையில் தற்போது அதற்கு கட்டணம் வசூலிக்கிறது. ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய் என்பது குறைவான கட்டணமாக தான் இருக்கிறது. பயனாளர்கள் இதனால் பெரிய பாதிப்பை சந்திக்க மாட்டார்கள் என கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, July 28, 2023, 20:37 [IST]
English summary
Ather to charge re 1 per minute for grid fast charger usage starting august 1
மேலும்... #ஏத்தர் #ather energy
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X