ஷங்கர் படத்தில் வரும் கண்ணாடி பஸ் மாதிரி கண்ணாடி ஸ்கூட்டர் வரப்போகுது! இது வேற லெவல் ஐடியா!
ஏத்தர் நிறுவனம் கண்ணாடி போல ஸ்கூட்டருக்கு உள்ளே இருக்கும் விஷயங்கள் எல்லாம் வெளியே தெரியும் வகையில் டிரான்ஸ்பரென்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயார் செய்ய முடிவு செய்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அது என்ன டிரான்ஸ்பரென்ட் ஸ்கூட்டர்? மற்றும் இதுக்கும் தற்போது உள்ள ஸ்கூட்டர்களுக்கும் என்ன வித்தியாசம்? என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
ஏத்தர் நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருப்பதால் நாளுக்கு நாள் நிறுவனத்தின் விற்பனை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. மார்க்கெட்டில் என்னதான் ஓலா நிறுவனம் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்தாலும் அதற்கு கடும் போட்டியை கொடுக்கும் நிறுவனமாக ஏத்தர் நிறுவனம் தான் இருக்கிறது.

இந்நிலையில் ஏத்தர் நிறுவனம் தனது இரண்டாவது சிரீஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கும் முடிவை கையில் எடுத்துள்ளது. இந்நிறுவனத்தின் முதல் சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது சிரீஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்நிறுவனம் டிரான்ஸ்பரென்ட் பாடி பேனல் கொண்டு உருவாக்க முடிவு செய்துள்ளது. அதாவது கண்ணாடி போல உள்ள இருக்கும் விஷயங்களை வெளியில் காட்டும் பாடி பேனல்களை பொருத்தவுள்ளது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் சிஇஓ தருண் மேத்தா இது குறித்து சமூகவலைதள பக்கங்களில் டீஸ் செய்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதன்படி இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டிரான்ஸ்பரென்ட் பாடி பேனல்களை கொண்டுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிரான்ஸ்குலண்ட் பாடி பேனல்கள் உள்ளன. அப்படி என்றால் ஸ்கூட்டருக்கு உள்ளேயே ஒளியை கடத்தும் ஆனால் அங்கிருக்கும் ஒரு விஷயத்தை வெளியில் இருந்து பார்க்க முடியாது.

ஆனால் புதிய ஸ்கூட்டரில் இது மொத்தமாக மாற்றப்பட்டு முற்றிலும் டிரான்ஸ்பரண்டாக பாடி பேனல்கள் வழங்கப்பட உள்ளன. இதுபோக இந்த இரண்டாவது சிரீஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மோட்டார் பைக் ஸ்கூட்டரில் உள்ள மற்ற பாகங்கள் அதன் டிசைன் பேட்டரி உள்ளிட்டவை மாற்றப்படுகிறதா? என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
ஏத்தர் நிறுவனத்திடம் தற்போது 450எஸ் 450 எக்ஸ் 2.9 கிலோ வாட் ஹவர், ஏத்தர் 450எக்ஸ் 3.7 கிலோ வாட் ஹவர் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உள்ளன. இதில் 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் குறைந்த விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கிறது. மேலும் 450எக்ஸ் 3.7 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தின் ஃபிளாஷிப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக விற்பனையாகி வருகிறது.

ஏத்தர் நிறுவனம் தனது இரண்டாவது சீரிஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தினாலும் முதல் தலைமுறை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்ந்து விற்பனையில் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இதில் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிச்சயம் நீண்ட காலம் விற்பனையில் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சமீபத்தில் தான் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
அது மட்டுமல்லாமல் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறைந்த விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இருப்பதால் இவை தொடர்ந்து விற்பனையில் வைத்திருப்பதன் மூலம் ஏத்தர் நிறுவனம் தனது விற்பனையை அதிகமாக வைத்திருக்க முடியும் என கருதி இதை செய்துள்ளது. ஆனால் 450 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்ந்து விற்பனையில் இருக்குமா என தெரியவில்லை.
ஏத்தர் நிறுவனம் தனது இரண்டாவது சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்து தற்போது தான் தகவல் வெளியிட்டு இருந்தாலும், இதை விரைவில் தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்திவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 2024 ஆண்டு ஆரம்பத்திலேயே இரண்டாவது சிரீஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வர வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதற்கான பணிகள் தற்போது ஏத்தர் ஆலையில் தீவிரமாக நடந்து வருகிறது.
ஏத்தர் நிறுவனம் தனது டிரான்ஸ்பரென்ட் ஸ்கூட்டர்களை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தினால் அது நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கலாம். மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வித்தியாசமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விரும்பும் மனநிலை அதிகமாக இருந்து வருகிறது. இதனால் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டிற்கு வரும்போது அதன் விற்பனை நிச்சயம் ஏத்த முதல் சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனையை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான மவுசு அதிகமாகி வருகிறது. ஏத்தர் நிறுவனம் தனது இரண்டாவது சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டாலும் இது குறித்த தொழில்நுட்ப தகவல்களை வெளியிடும் போது தான் இந்த ஸ்கூட்டர் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகும். விரைவில் இந்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









