ஏத்தர் உரிமையாளர்களுக்கு 1 இல்ல 4 அப்டேட்! செல்போன் ஆப்பை இப்பவே ஓப்பன் பண்ணுங்க!

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஏத்தர் ஆப்பில் புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது. இந்த அப்டேட்டை முதற்கட்டமாக பீட்டா பயன்பாட்டாளர்களுக்கு மட்டும் வழங்கியுள்ளது. இதில் என்னென்ன புதிய அம்சங்கள் இருக்கிறது என விரிவாகக் காணலாம் வாருங்கள்.

ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மார்கெட்டில் மவுசு இருக்கிறது. ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் ஏத்தர் நிறுவனம் தனது பைக்கை பயன்படுத்தும் பயனர்களுக்கு உதவியாக இருக் செல்போன் ஆப்பை வழங்கியுள்ளது.

ather app update

இதை ஏத்தர் வாகன உரிமையாளர்கள் தங்கள் செல்போனில் வைத்துக்கொண்டு அதன் மூலம் தங்கள் வாகனம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள முடியும். இந்நிலையில் ஏத்தர் நிறுவனம் இந்த ஆப்பில் தற்போது புதிய அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளது. இதன்படி 4 புதிய அம்சங்கள் இந்த ஆப்பில் வரப்போவதாக அறிவித்துள்ளது.

அதில் முதல் அப்டேட்டாக உங்கள் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சர்வீஸ் செய்ய விட்டிருந்தால் அதை சர்வீஸ் ஸ்டேட்ட்களை லைவ்வாக ஆப் மூலம் பார்த்துக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் அருகில் உள்ள சர்வீஸ் சென்டரை பார்ப்பதில் அதில் உங்கள் வாகனத்திற்கான சர்வீஸை புக்கிங் செய்வது, வாகனத்தின் பிக்கப், இன்வாய்ஸ், சர்வீஸ் நிலை உள்ளிட்ட தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். மேலும் வாகனம் சர்வீஸ் செய்ய வேண்டிய காலம் வந்தால் ஆப் ரிமைண்டர் செய்யும் ஆப்ஷனும் வந்துவிட்டது.

ather app update

அடுத்த அப்டேட்டாக ரைடு குறித்த தகவல்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதில் கடந்த ஒரு வாரம் உங்கள் ஏத்தர் வாகனம் எவ்வளவு தூரம் பயணித்துள்ளது, எவ்வளவு எரிபொருளைச் சேமித்துள்ளது. அதிகப்பட்ட வேகம் எவ்வளவு உள்ளிட்ட தகவல்கள் இதில் இடம் பெறும். இது வாகன உரிமையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்களாக இருக்கும்.

3வது அப்டேட்டாக ஃபேவரேட்களை மார்க் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் அடிக்கடி பயணிக்கும் இடத்தை மேப்பில் ஃபேவரேட் இடங்களாக மார்க் செய்து வைத்துக்கொள்ளலாம். இப்படிச் செய்தால் இதன் மூலம் நீங்கள் ஒவ்வொரு முறையும் அட்ரஸை டைப் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. நேரடியாக உங்களுக்கு விரும்பிய இடம் தேர்வில் பட்டியல் செய்யப்பட்டிருக்கும் அதை கிளிக் செய்தால் போதுமானது.

ather app update

கடைசி அப்டேட்டாக ஏத்தர் பப்ளிக் சார்ஜிங் பகுதியில் ஏத்தர் நெய்பர்ஹூட் சார்ஜர் குறித்த தகவல்கள் இருக்கும். அதாவது நீங்கள் பயணிக்கும் இடத்தில் ஏத்தர் பப்ளிக் சார்ஜிங் இடம் இல்லை என்றால் அருகில் உள்ள ஏத்தர் வைத்திருக்கும் மற்றொரு ஏத்தர் வாடிக்கையாளரின் சார்ஜ் இருக்கும் பகுதி இதில் இருக்கும். நீங்கள் அவரை தொடர்பு கொண்டு உங்கள் வாகனத்தை சார்ஜ் செய்ய உதவி கேட்கலாம்.

இந்த 4 அப்டேட்டை ஏத்தர் ஆப்பில் கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளது. ஆனால் இது பீட்டா பயனர்களுக்கு மட்டுமே இன்னும் ஒரு சில வாரங்களில் வழங்கப்படும் என் தெரிகிறது. இதன் செயல்பாட்டைப் பொறுத்து இது மெல்ல மெல்ல மற்ற அனைத்து பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தான்
இந்நிறுவனம் ஆட்டோ ரிப்ளை அம்சத்தை அறிமுகப்படுத்தியது.

அதாவது ஸ்கூட்டரில் போய்க்கொண்டிருக்கும் போது செல்போனிற்கு கால் வந்தால் அந்தகார் தானாகக் கட் செய்யப்பட்டு கால் செய்தவருக்கும் நீங்கள் பயணத்தில் இருக்கிறீர்கள் என்ற மெசேஜ் போகும்படியான அப்டேட் செய்யப்பட்டிருந்தது. தற்போது ஆப்பில் இந்த 4 புதிய அப்டேட்களை அறிவித்துள்ளது.

ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொருத்தவரை தற்போது 450எக்ஸ் நார்மல் வெர்ஷனவ் ரூ98,079 என்ற விலையிலும், ப்ரோ வெர்ஷன் ரூ1.28 லட்ம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது. ஏத்தர் 450எஸ் என்ற பெயருக்கு தற்போது டிரேட் மார்க் வாங்கியுள்ளது. இந்த ஸ்கூட்டர் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏத்தர் நிறுவனத்தின் இந்த அப்டேட்ட நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது தான். குறிப்பாக வாகன உரிமையாளர்களுக்குப் பயனுள்ள வகையில் இந்த அப்டேட் வழங்கியுள்ளதை வாகன உரிமையாளர்கள் வரவேற்றுள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 13, 2023, 15:09 [IST]
English summary
Ather updated new features to customers via ather app
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X