பதினஞ்சே நிமிஷத்துல முழுசா சார்ஜாகும் ஆட்டோ.. காருகூட இந்த அளவு வேகமா சார்ஜாகுமா தெரியல!
உலகின் அதிக வேகத்தில் சார்ஜாகும் எலெக்ட்ரிக் ஆட்டோவை பிரபல மின் வாகன உற்பத்தி நிறுவனம் அல்டிகிரீன் உருவாக்கி இருக்கின்றது. கூட்டணியின் அடிப்படையில் இந்த ஆட்டோவை அதிகரித்து இருக்கின்றது. இந்த மின்சார ஆட்டோ பற்றிய கூடுதல் முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் அல்டி கிரீனும் ஒன்று. இது வர்த்தக பயன்பாட்டு வசதிக் கொண்டு எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பையே முக்கிய உற்பத்தியாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிறுவனமே அதிக வேகத்தில் சார்ஜாக கூடிய மின்சார மூன்று சக்கர வாகனத்தை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. எக்ஸ்போனன்ட் எனர்ஜி எனும் நிறுவனத்துடன் இணைந்தே இந்த வாகனத்தை நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

என்இ இவி டெஸ் (NeEV Tez) பெயரில் வந்திருக்கு
என்இ இவி டெஸ் எனும் எலெக்ட்ரிக் ஆட்டோவையே நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக 3 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், எக்ஸ்போனென்ட் கை வண்ணத்தில் உருவாக்கப்பட்ட லித்தியம் ஃபெர்ரோஸ் பாஸ்பேட் செல் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக் 8.2 kWh திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதை ஒரே ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 98 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
இதுவே நீங்கள் வசிப்பது வாகன நெரிசல் மிகுந்த நகர்புறமாக இருந்தால் அதன் ரேஞ்ஜ் 85 ஆக மட்டுமே இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுமட்டும் இல்லைங்க நிறுவனத்தின் இந்த புதுமுக எலெக்ட்ரிக் ஆட்டோ வெறும் பதினைந்தே நிமிடத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் வரை சார்ஜாகும் திறன் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிக வேகத்தில் சார்ஜ் செய்ய வேண்டுமானால் எக்ஸ்போனென்டின் இ-பம்புகளை பயன்படுத்த வேண்டுமாம்.

அதிக வேகத்தில் சார்ஜாகும் மையம்
இது எக்ஸ்போனென்ட் நிறுவனத்தின் பிரத்யேக மின் வாகன சார்ஜிங் மையம் ஆகும். இதில் வைத்து சார்ஜ் செய்யும் பட்சத்தில் மட்டுமே அதி விரைவாக எலெக்ட்ரிக் ஆட்டோவை சார்ஜ் செய்ய முடியும். பெரும்பாலானோர் மின்சார வாகனங்களை தவிர்க்க அவற்றை சார்ஜ் செய்ய மிக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதே காரணமாக இருக்கின்றது. ஆகையால் மின்சார வாகங்கள் வணிக பயன்பாட்டிற்கு உகந்தது அல்ல என பலர் கருதுகின்றனர்.
ஈர்க்கக் கூடிய உத்தரவாதம்
பல மணி நேரங்கள் சார்ஜ் செய்ய செலவிட்டால், எப்படி சம்பாதிப்பது என்பதே பலரின் கேள்வியாகவும் இருக்கின்றது. இந்த எண்ணத்தைக் காணாமல் அடிக்கும் ஓர் வாகனமாகவே அல்டிகிரீனின் என்இ ஈவி டெஸ் எலெக்ட்ரிக் ஆட்டோவின் வருகை அமைந்துள்ளது. உலக அளவில் அதிக வேகத்தில் சார்ஜாகும் எலெக்ட்ரிக் ஆட்டோ இதுவே ஆகும். இந்த ஆட்டோவின் பக்கம் வாடிக்கைாயளர்களை ஈர்க்கும் பொருட்டு நிறுவனம் ஐந்தாண்டுகள் அல்லது 1 லட்சம் கிமீ உத்தரவாதத்தை வாகனத்திற்கு அறிவித்துள்ளது.

இதேபோல், ஐந்து ஆண்டுகள் அல்லது 1 லட்சத்து 56 ஆயிரம் கிமீ வாரண்டி பேட்டரி பேக்கிற்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுமட்டுமின்றி, அதிக வேகத்தில் சார்ஜ் செய்யக் கூடிய சார்ஜிங் மையங்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சியிலும் எக்ஸ்போனென்ட் களமிறங்கி இருக்கின்றது. இந்த புதுமுக எலெக்ட்ரிக் லோடு ஆட்டோவின் வருகை பார்சல் சர்வீஸ் செய்யும் நிறுவனங்களுக்கு பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
தற்போது நாட்டில் பெரும்பாலான ஆட்டோக்கள் கேஸ் (ஆட்டோ எல்பிஜி மற்றும் சிஎன்ஜி) வாகனங்களாக மாறிவிட்டன. இவை சற்று அதிகம் லாபம் வழங்கக் கூடியவை என்பதனாலேயே பயணிகள் ஆட்டோ தொடங்கி லோடு ஆட்டோ வரை எல்பிஜிக்கு மாறி இருக்கின்றன. இவை பெட்ரோல், டீசல் ஆட்டோக்களைப் போல் சுற்றுச்சூழலை மிக அதிகளவில் மாசுப்படுத்தாது. இதைக் காட்டிலும் பல மடங்கு அதிக சிறப்பு வசதிகளைக் கொண்டதாக அல்டிகிரீனின் என்இ இவி டெஸ் எலெக்ட்ரிக் ஆட்டோ உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவிற்கு ஏற்றது
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திலேயே அல்டிகிரீன் மற்றும் எக்ஸ்போனென்ட் நிறுவனங்கள் தங்களின் கூட்டணியை அறிவித்தன. இது அறிவிக்கப்பட்டு சில மாதங்களே ஆகின்றநிலையில் தற்போது அதிக வேகத்தில் சார்ஜாகும் எலெக்ட்ரிக் ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த வாகனத்தை அல்டிகிரீன் நிறுவனம் இந்தியாவின் பன்முக காலநிலைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, இந்தியாவின் பன்முக நிலபரப்பிற்கு ஏற்பவும் இது உருவாக்கப்பட்டு இருக்கின்றது.
எனவே இந்த ஆட்டோவைக் கொண்டு எந்த சாலையையும் வேண்டுமானாலும், எந்த மாதிரியான கால நிலையில் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் இந்த எலெக்ட்ரிக் வாகனம் விற்பனைக்குக் கிடைக்கும். ஹை டெக், லோ டெக் மற்றும் டெஸ் ஆகிய மூன்று விதமான தேர்வுகளிலேயே இது விற்பனைக்குக் கிடைக்கும். இந்த வேரியண்டுகள் வெவ்வேறு உருவ அமைப்பைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








