இந்திய மார்க்கெட்டுக்கு இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சரிப்பட்டு வருமா? பஜாஜ் செய்யப்போகும் அடுத்த அதிரடி சம்பவம்!

பஜாஜ் ஆட்டோ (bajaj Auto) நிறுவனம் அதன் புதிய ஸ்கூட்டருக்கு சூட்டுவதற்காக 'வெக்டர்' (Vector) என்ற பெயரை பதிவு செய்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்தும், பஜாஜ் நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய ஸ்கூட்டரை பற்றியும் இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

பல்சர் பைக்கை போல், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அடையாள சின்னமாக சேத்தக் ஸ்கூட்டரை சொல்லலாம். ஆனால், 2010இல் இருந்து 2020 வரையில் 10 வருடங்களாக பஜாஜ் பிராண்டில் இருந்து எந்தவொரு ஸ்கூட்டரும் விற்பனை செய்யப்படவில்லை என்றால் நம்ப முடிகிறதா. 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில், ஜனவரி மாதத்தில் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

bajaj auto trademarked vector name

இதனால், ஸ்கூட்டர் என்றால் இனி எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மட்டும் தான் பஜாஜ் ஆட்டோ விற்பனைக்கு கொண்டுவரும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், 'வெக்டர்' என்ற பெயரை தனது தயாரிப்பு வாகனத்திற்காக பயன்படுத்த பஜாஜ் நிறுவனம் ரெடியாகி வருகிறது. வெக்டர் பெயருக்கான காப்புரிமை பஜாஜ் நிறுவனம் சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

'வெக்டர்' பெயரை வைத்துப் பார்க்கும்போது இந்த பெயர் புதிய பஜாஜ் ஸ்கூட்டருக்கு சூட்டப்படலாம். பஜாஜ் நிறுவனத்தின் அடுத்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்சமயம் சோதனைகளில் உள்ளது. இந்த புதிய பஜாஜ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 'சன்னி' என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என முன்னதாக கூறியிருந்தோம்.

bajaj auto trademarked vector name

ஆனால், சன்னி பெயருக்கு பதிலாக, வெக்டர் பெயரில் பஜாஜின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்படுவதற்கும் கொஞ்சம் வாய்ப்புள்ளது போல் தோன்றுகிறது. அதேநேரம், தற்போதைய பஜாஜ் சேத்தக்கை காட்டிலும் விலையுயர்ந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு வெக்டர் பெயரை பஜாஜ் சூட்டுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

அதாவது, சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டதாக இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கலாம். அதேநேரம், வெக்டர் பெயரை தனது நிறுவனத்தின் எதிர்கால தயாரிப்புக்கு சூட்டாமல், தனது நிறுவனத்தின் கீழ் செயல்படும் வேறொரு பிராண்டின் தயாரிப்புக்கு பஜாஜ் ஆட்டோ இந்த பெயரை வழங்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

bajaj auto trademarked vector name

குறிப்பாக, ஸ்வீடன் நாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனமான ஹஸ்க்வர்னாவின் புது ஸ்கூட்டருக்கு வெக்டர் பெயர் வழங்கப்படுவதற்கு நிறைய வாய்ப்புள்ளது. ஏனெனில், ஹஸ்க்வர்னா நிறுவனம் ஏற்கனவே வெக்டர் என்ற பெயரில் ஓர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட்டை காட்சிப்படுத்தி இருந்தது. ஆனால், அந்த வெக்டருக்கு ஸ்பெல்லிங் வேறயாக இருந்தது.

ஹஸ்க்வர்னாவின் வெக்டர் இ-ஸ்கூட்டர் கான்செப்ட் நியோ-ரெட்ரோ தோற்றத்தில் இருந்தது. ஹஸ்க்வர்னா பிராண்டில் இருந்து வெளிவந்தாலும், அந்த ஸ்கூட்டரை பஜாஜ் ஆட்டோ நிறுவனம்தான் தனது புனே தொழிற்சாலையில் உருவாக்கும் என்பதால், பஜாஜ் இந்த பெயருக்கான காப்புரிமையை பெற்றுள்ளது என கூறப்படுகிறது. இருப்பினும், ஹஸ்க்வர்னா வெக்டர் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு அதிகளவில் வெளிநாடுகளுக்கே அனுப்பி வைக்கப்படும் என தெரிகிறது.

bajaj auto trademarked vector name

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு டிரேட்மார்க்டு செய்யப்படும் பெயர்கள் அனைத்துமே புதிய வாகனங்களாக சந்தையில் விற்பனைக்கு வரும் என கூறிவிட முடியாது. ஏனெனில், இதற்குமுன் பஜாஜ் நிறுவனம் காப்புரிமையை பெற்ற பெயர்களில் பலவற்றில் இன்னும் எந்த வாகனமும் வெளிவரவில்லை. இருப்பினும், வெக்டர் பெயர் அழைப்பதற்கும் அருமையாக உள்ளதால், இந்த பெயரில் பஜாஜ் நிறுவனத்தில் இருந்து ஏதேனும் வாகனம் அறிமுகமாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 21, 2023, 22:01 [IST]
English summary
Bajaj auto trademarked vector name possibility for husqvarna check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X