பஜாஜ் நிறுவனத்துக்கு இந்த நிலைமை வந்திருக்கக் கூடாது!! பிளாட்டினா பைக்கை விற்க முடியாமல் போராடுது!
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் பஜாஜ் ஆட்டோ கடந்த 2023 செப்டம்பரில் விற்பனை செய்த 2-வீலர்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
புனேவில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டு வரும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இருப்பினும், பஜாஜ் ஆட்டோவின் உள்நாட்டு விற்பனை சற்று குறைந்துள்ளது. கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 1,90,902 இருசக்கர வாகனங்கள் பஜாஜ் பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளன

ஆனால், 2022 செப்டம்பர் மாதத்தில் இதனை காட்டிலும் கிட்டத்தட்ட 23,442 வாகனங்கள் அதிகமாக 2,14,344 இரு சக்கர வாகனங்களை பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்து இருந்தது. பஜாஜின் அடையாளமே அதன் பல்சர் பைக்குகள் தான் என்றால் அதில் மிகையில்லை. ஏனெனில், கடந்த 20 வருடங்களாக பஜாஜ் ஆட்டோவின் நம்பிக்கைக்குரிய தயாரிப்பாக பல்சர் பைக்குகள் விளங்குகின்றன.
கடந்த 2023 செப்டம்பர் மாதத்திலும் சுமார் 1.20 லட்ச பல்சர் பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சரியாக சொல்ல வேண்டுமென்றால், 1,20,126 பல்சர் பைக்குகள் கடந்த செப்டம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 1,05,003 பல்சர் பைக்குகளை மட்டுமே பஜாஜ் விற்பனை செய்திருந்தது.

இந்த வகையில், 2022 செப்டம்பரை காட்டிலும் கடந்த செப்டம்பரில் 15,123 பல்சர் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் பஜாஜ் பல்சர் பைக்குகள் 125சிசி-இல் இருந்து 250சிசி வரையில் விற்பனை செய்யப்படுகின்றன. பஜாஜின் கடந்த செப்டம்பர் மாத விற்பனையில் பல்சர் பைக்குகளுக்கு அடுத்து 2வது இடத்தில் பிளாட்டினா மோட்டார்சைக்கிள் உள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 48,615 பிளாட்டினா பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஆனால் உண்மையில், பிளாட்டினா பைக்குகளின் விற்பனை 3இல் 1 பங்கு குறைந்துள்ளது. ஏனெனில், 2022 செப்டம்பர் மாதத்தில் 73,354 பிளாட்டினா பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில், கடந்த மாதத்தில் சுமார் 24,739 பிளாட்டினா பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. தற்போதைக்கு இவை இரண்டும் தான் விற்பனையில் பஜாஜின் பிரதானமான தயாரிப்புகளாக விளங்குகின்றன.

ஆனால், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சிடி பைக்குகளின் விற்பனையும் பஜாஜுக்கு பெரும் உதவியாக இருந்தது. ஏனெனில் அந்த மாதத்தில் 26,951 சிடி கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால், கடந்த 2023 செப்டம்பரில் வெறும் 9,398 சிடி பைக்குகளை மட்டுமே பஜாஜ் நிறுவனத்தால் விற்பனை செய்ய முடிந்தது. இதற்கு அடுத்து 4வது இடத்தில் பஜாஜின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரான சேத்தக் 8,988 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது.
டிரைவ்ஸ்பார் கருத்து: பல்சர் பைக்குகளின் விற்பனை அதிகரித்த போதிலும், பஜாஜின் மற்ற முக்கியமான இரு சக்கர வாகனங்களான பிளாட்டினா மற்றும் சிடி பைக்குகளின் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாகவே பஜாஜ் நிறுவனத்தின் மொத்த 2-வீலர்களின் விற்பனை எண்ணிக்கை கடந்த மாதத்தில் குறைந்துள்ளது. இருப்பினும், சேத்தக்கின் விற்பனை அதிகரிப்பதை எண்ணி பஜாஜ் சற்று ஆறுதல் அடைந்திருக்கும்.


Click it and Unblock the Notifications









