விற்பனையில் சாதனை படைத்த பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! இத்தன பேர் வாங்கீட்டாங்களா! நம்பவே முடியலயேப்பா!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் (Electric Scooter) ஒன்று பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak). கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம்தான், பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 4 வருடங்கள் கடந்துள்ள சூழலில், பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரம்மாண்டமான மைல்கல் (Milestone) ஒன்றை தற்போது கடந்துள்ளது. இந்திய சந்தையில் 1 லட்சம் யூனிட்கள் விற்பனை என்பதுதான் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்துள்ள புதிய மைல்கல் ஆகும்.

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (Society of India Automobile Manufacturers - SIAM), வெளியிட்டுள்ள தரவுகளின் மூலம் இந்த தகவல் நமக்கு தெரியவந்துள்ளது. நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் இறுதி நிலவரப்படி பஜாஜ் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 1,04,200 சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.
இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், நடப்பு 2023ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையேயான காலகட்டத்தில் மட்டும் பஜாஜ் நிறுவனம் 62,991 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையேயான காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது 172 சதவீத வளர்ச்சி ஆகும்.

இந்தியாவில் அதிக எலெக்ட்ரிக் டூவீலர்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலை பார்த்தால், ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) முதல் இடத்தில் உள்ளது. டிவிஎஸ் (TVS) மற்றும் ஏத்தர் எனர்ஜி (Ather Energy) ஆகிய நிறுவனங்கள், முறையே 2வது மற்றும் 3வது இடங்களில் இருக்கின்றன. ஆனால் பஜாஜ் நிறுவனம் 4வது இடத்தில்தான் உள்ளது.
பஜாஜ் நிறுவனம் சமீபத்தில் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய வேரியண்ட் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அர்பேன் (Urbane) என்ற பெயரில் இந்த புதிய வேரியண்ட் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 1.15 லட்ச ரூபாய் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் (Ex-showroom Price) பஜாஜ் சேத்தக் அர்பேன் வேரியண்ட் களமிறக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வேரியண்ட்டில், 2.9 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 113 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மேலும் ஒரு புதிய வேரியண்ட்டை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது பிரீமியம் வேரியண்ட்டாக இருக்கும் எனவும், இதன் ரேஞ்ச் 127 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வேரியண்ட்டின் வருகைக்கு பின்னர், பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருவதையே இது காட்டுகிறது. வரும் காலங்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை போல், எலெக்ட்ரிக் பைக்குகளின் விற்பனையும் சிறப்பாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








