இதுக்கு தான் வெயிட் பண்ணோம்!! தீபாவளி வர போகுது... விலை குறைஞ்சிடுச்சு! ஸ்கூட்டரை வாங்க சரியான டைம்
பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak) எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலைகள் பண்டிகை காலத்தை முன்னிட்டு நம் தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளன. இதனால், சேத்தக் ஸ்கூட்டரை வாங்குவதற்கு சரியான நேரம் வந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான சந்தை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புது, புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் புது, புது ஸ்டைல்களில் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளன. இதனாலேயே, எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வாங்க வேண்டும் என்கிற ஆசை நம் அனைவரிடத்திலும் உள்ளது.

நம்மில் பெரும்பாலானோர் வாங்க ஆசைப்படும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பஜாஜ் சேத்தக் ஆகும். ஏனெனில், பெட்ரோல் ஸ்கூட்டருக்கு பதிலாக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம் என்பது மட்டுமின்றி, அதனை பஜாஜ் ஆட்டோ என்ற முன்னணி நிறுவனத்தில் இருந்து வாங்கலாம் என்பது முக்கிய காரணமாகும். அத்தகைய பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்த பண்டிகை காலத்திற்கு குறைந்த விலையில் வாங்கலாம் எனும்போது அது சிறப்பான விஷயம் தானே.
பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பண்டிகை கால சிறப்பு எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.1,15,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் விலை ஆனது நம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலத்தில் மட்டுமே செல்லப்படியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்த இரு மாநிலங்களில் வாங்குவோர் மட்டுமே இந்த சலுகையை பெற முடியும்.

அதேபோல், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் இந்த சலுகை விலை ஆனது ஸ்டாக் இருக்கும் வரையில் மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் விலையில் பஜாஜ் சேத்தக்கை பெற நீங்கள் அமேசான் வாயிலாக ஸ்கூட்டரை வாங்க வேண்டும். இதுகுறித்த கூடுதல் விபரங்களுக்கு பஜாஜ் சேத்தக் இணையத்தள பக்கம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பஜாஜ் டீலர்ஷிப் மையத்தை அணுகவும்.
பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்தவரையில், இந்த ஸ்கூட்டர் அதன் ஐபி67 சான்றளிக்கப்பட்ட பேட்டரியினால் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சேத்தக்கின் பேட்டரி இந்தியாவின் எந்தவொரு வெப்ப சூழலுக்கும் ஏற்றதாக விளங்குவதாக பஜாஜ் தெரிவிக்கிறது. 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்டாண்டர்ட் & பிரீமியம் என 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் கடந்த 2023 ஜூன் மாதத்தில் தான் ரூ.22,000 வரையில் உயர்த்தப்பட்டன. மத்திய அரசு எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு வழங்கிவந்த மானியத்தை குறைத்ததை அடுத்து, இந்த விலை அதிகரிப்பு நடவடிக்கையை பஜாஜ் ஆட்டோ மேற்கொண்டது. இந்த விலை உயர்வினால், சேத்தக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.22 லட்சத்தில் இருந்து ரூ.1.44 லட்சமாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒருபக்கம் ஸ்கூட்டரின் விலையை அதிகரிக்க நேர்ந்தாலும், மறுப்பக்கம் எப்படியாவது சேத்தக்கின் விலையை குறைக்க பஜாஜ் முயன்று இருப்பது மகிழ்ச்சியான விஷயம் ஆகும். ஆதலால், நீண்ட காலமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க திட்டமிட்டு வருபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பஜாஜ் சேத்தக்கை வாங்கலாம். அமேசான் மூலமாக வாங்கலாம் என்பது கூடுதல் சிறப்பான விஷயம் என்றுதான் சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications









