எல்லாரும் பஜாஜ் சேத்தக்-தான் வேணும்னு அடம் பிடிக்க போறாங்க... எக்ஸ்ட்ராவா ரேஞ்ஜ் தரும் புதிய வெர்ஷன் தயார்!
பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ், இந்தியாவில் ஒரே ஒரு எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. சேத்தக் -தான் அந்த மின்சார இருசக்கர வாகனம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
நிறுவனத்தின்கீழ் விற்பனைக்குக் கிடைக்கும் ஒரே ஸ்கூட்டர் ரக வாகனமும் இதுமட்டுமே ஆகும். இந்த வாகனத்திற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனை இரட்டிப்பாக்கும் முயற்சியில் தற்போது பஜாஜ் நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது. அதிகப்படியான ரேஞ்ஜ் திறன் வாயிலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பக்கம் வாடிக்கையாளர்களை இழுத்துப்போடும் முயற்சியிலேயே பஜாஜ் ஈடுபட்டு வருகின்றது.

இப்போ இருக்குறது 90 கிமீ ரேஞ்ஜ்-தான் தரும்
தற்போது விற்பனையில் இருக்கும் பஜாஜ் சேத்தக் ஓர் முழு சார்ஜில் 90 கிமீ தூரம் வரை மட்டுமே பயணிக்கும். இதையே அப்டேட் வாயிலாக கூடுதலாக்கி இருக்கின்றது, பஜாஜ் நிறுவனம். இந்த அதிகம் ரேஞ்ஜ் தரும் புதிய வெர்ஷன் சேத்தக் இன்னும் சில தினங்களில் இந்திய மின்வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
இந்த நிலையிலேயே புதிய வெர்ஷன் சேத்தக் பற்றிய முக்கிய ஆவணங்கள் சில இணையத்தின் வாயிலாக வெளியாகி உள்ளன. அந்த ஆவணங்கள் வாயிலாகவே புதிய பஜாஜ் சேத்தக் அதிக ரேஞ்ஜ் தரக் கூடியதாக அப்கிரேட் செய்யப்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கின்றது. இப்போது விற்பனையில் இருக்கும் பஜாஜ் சேத்தக்கில் பயன்படுத்தப்படும் அதே பேட்டரி பேக்கே புதிய வெர்ஷன் சேத்தக்கிலும் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

18 கிமீ அதிகம் ரேஞ்ஜ் தரும்
அதேவேளையில், சாஃப்ட்வேர் அப்டேட் நாம் எதிர்பார்த்திராத அளவிற்கு செய்யப்பட்டு உள்ளது. இதன் விளைவாகவே சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ஜ் திறன் உயர்ந்து இருக்கின்றது. 18 கிமீ வரையில் ரேஞ்ஜ் திறன் உயர்ந்து இருக்கின்றது. ஆகையால், புதிய பஜாஜ் சேத்தக் ஓர் முழு சார்ஜில் 108 கிமீ வரையில் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது வெளியாகி இருக்கும் ஆவணத்தில் சேத்தக் பிரீமியம் வேரியண்டின் விபரங்கள் மட்டுமே வெளியாகி உள்ளன.
ஆகையால், இந்த வேரியண்ட் மட்டும் இனி விற்பனைக்கு வழங்கப்படுமா என்கிற கேள்வி மக்கள் மனதில் எழும்பி இருக்கின்றது. பஜாஜ் நிறுவனம் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு வழங்கி வந்தது குறிப்பிடத்தகுந்தது. அர்பேன் மற்றும் பிரீமியம் இவையே அந்த இரு தேர்வுகள் ஆகும். புதிய சேத்தக் பிரீமியம் வேரியண்டில் 50.4 V 57.24 Ah பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு உள்ளது.

பேட்டரி பேக்கோட எடை இவ்வளவு அதிகமா?
இந்த பேட்டரியின் எடை மட்டுமே 24.5 கிலோ ஆகும். இதனுடன் சேர்த்து ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த எடை 283 கிலோ ஆகும். 4.2 kW பவரை வெளியேற்றக் கூடிய மின்சார மோட்டாரே இந்த பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதே திறன் கொண்ட மின் மோட்டாரே இப்போது விற்பனையில் இருக்கும் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் பயன்படுத்தப்படுகின்றது.
இதேபோல் இப்போது இருப்பதைப் போலவே பிரீமியம் தர ஸ்கூட்டராகவே புதிய வெர்ஷன் சேத்தக்கும் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. மெட்டாலிக் பாடி, 12 அங்குல அலாய் வீல் -ட்யூப் லெஸ் டயருடன், சாஃப்ட் டச் ஸ்விட்ச் கியர் - பேக் லைட் வசதியுடன், 18 லிட்டர் பூட் ஸ்பேஸ், 4 லிட்டர் ஸ்பேஸ் கொண்ட குளோவ் பாக்ஸ், எல்இடி லைட்டுகள் மற்றும் சாவி இல்லாமல் ஸ்கூட்டரை பயன்படுத்திக் கொள்ளும் வசதி என எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
பெரிய திரை
இத்துடன், ஏத்தர், ஓலா, டிவிஎஸ் மற்றும் ஹீரோ விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருப்பதைப் போல பெரிய டிஎஃப்டி தொடுதிரையும் புதிய பிரீமியம் சேத்தக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. பஜாஜ் நிறுவனம் இளம் தலைமுறையினரை குறி வைத்தே இந்த வாகனத்தை உருவாக்கி இருக்கின்றது. இதன் விளைவாகவே பன்முக தொழில்நுட்ப வசதிகளை இதில் வாரி வழங்கி இருக்கின்றது. அப்டேட் காரணமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை சற்று உயர்த்தப்படாலம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கிடைக்கவில்லை. விரைவிலேயே அது வெளியாக என கருதப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








