இதுக்குதான் எல்லாரும் பஜாஜ் பைக்க தேடி போய் வாங்குறாங்க! விலை குறைவான பைக்கில் யுஎஸ்டி ஃபோர்க்கை வழங்கிய பஜாஜ்
பஜாஜ் நிறுவனம் அதன் 2023 பல்சர் என்எஸ் 160 மற்றும் என்எஸ் 200 ஆகிய இரு மோட்டார்சைக்கிள்களையும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. புதிதாக யுஎஸ்டி ஃபோர்க்குகள் மற்றும் ஓபிடி 2 ரெடி வாகனமாக இது தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
பஜாஜ் ஆட்டோ 2023 பல்சர் என்எஸ் 160 மற்றும் என்எஸ் 200 நேக்கட் ஸ்ட்ரீட் ஃபைட்டர் ஆகிய இரண்டு பைக் மாடல்களையும் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இரண்டிலும் அப்டேட்டின்கீழ் சில சிறப்புகளை பஜாஜ் நிறுவனம் சேர்த்திருக்கின்றது. குறிப்பாக யுஎஸ்டி ஃபோர்க் இந்த பைக்குகளில் சேர்க்கப்பட்டு இருக்கின்றது.

யுஎஸ்டி ஃபோர்க் என்பது மேல் பக்கம் கீழ் நோக்கி இருக்கும் ஃபோர்க் (Upside Down Fork) ஆகும். இதையே பஜாஜ் நிறுவனம் இந்த பைக்குகளில் வழங்கி இருக்கின்றது. முன் பக்கத்திலேயே இந்த அம்சம் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர டிஸ்க் பிரேக்குகள், கிரைமேகா காலிபர்கள் ஆகியவை இந்த 2023 என்எஸ் 160 மற்றும் என்எஸ் 200 நேக்கட் ஸ்ட்ரீட் ஃபைட்டர் பல்சர் பைக்குகளில் சேர்க்கப்பட்டு இருக்கின்றது.
முன்னதாக பெடல் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் பைப்ரே காலிபர்கள் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கு பதிலாகவே புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. இதேபோல் டிஸ்க்குகளுன் அளவுகளும் இந்த இரு பைக் மாடல்களிலும் அதிகரிக்கப்பட்டு உள்ளன. 260 மிமீட்டரில் இருந்து 300 மிமீட்டராக அது உயர்த்தப்பட்டு இருக்கின்றது.

இவற்றுடன் சேர்த்து இன்னும் சிறந்த பிரேக்கிங் திறனை வழங்க வேண்டும் என்பதற்காக ஏபிஎஸ் ஸ்டாண்டர்டு அம்சமாக இந்த மாடல்களில் வழங்கப்பட்டு உள்ளன. இத்தகைய அம்சங்களை சேர்த்திருக்கின்ற காரணத்தினால் இவற்றின் விலையும் சற்று உயர்த்தப்பட்டு இருக்கின்றது. பல்சர் என்எஸ் 160 மாடலுக்கு ரூ. 1,34,675 விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இது 2022 வெர்சனைக் காட்டிலும் 9,651 ரூபாய் அதிகம் ஆகும். இதேபோல், என்எஸ் 200 இன் விலையும் ரூ. 6,681 வரை உயர்ந்திருக்கின்றது. 1,47,347 ரூபாயே என்எஸ் 200க்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதுமட்டுமின்றி, புதிய பிஎஸ் 6 ஃபேஸ் 2 மற்றும் ஓபிடி ஆகிய விதிகளுக்கு உட்பட்ட வாகனமாகவும் இது அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கின்றது.

ஆமாங்க இ20 ஃப்யூவலிலும் இயங்கும். என்எஸ் 160 பைக்கில் 160.3 சிசி சிங்கிள் சிலிண்டர் மோட்டாரும், என்எஸ் 200 மோட்டாரில் 199 சிசி மோட்டாரும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார்களே புதிய விதிகளுக்கு இணங்கியதாக தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த அப்கிரேட்களை மட்டுமே இந்த இருசக்கர வாகனங்கள் பெறவில்லை.
அவற்றில் நடுத்தர டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலும் அப்கிரேடின்கீழ் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த கன்சோல் கியர் எந்த பொசிஷனில் இருக்கின்றது என்பது போன்ற அனைத்து முக்கிய தகவல்களையும் வழங்கும். ஆனால், மற்ற பைக்குகளில் இருப்பதை போல ஸ்மார்ட்ஃபோன் இணைப்பு மற்றும் நேவிகேஷன் வசதி இதில் வழங்கப்படவில்லை.

இந்த அம்சங்கள் 2023 வெர்சனிலும் வழங்கப்படாதது பல்சர் இருசக்கர வாகன பிரியர்களை சோகத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இருப்பினும், இந்த அப்டேட் செய்யப்பட்ட பஜாஜ் பல்சர் பைக்குகள் இளைஞர்களின் மனம் கவரும் டூ-வீலராக காட்சியளிக்கின்றது. குறிப்பாக, அதன் கவர்ச்சியான தோற்றம் ஆண்-பெண் என இரு பாலரையும் கவரும் வகையில் உள்ளது.


Click it and Unblock the Notifications









