மீண்டும் விற்பனைக்கு அறிமுகமாகிறது பஜாஜின் பிரபல டூ-வீலர் மாடல்... இதுபோனத நெனச்சு ரொம்ப நாளா கஷ்டப்பட்டாங்க..

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விற்பனையில் இருந்து அகற்றப்பட்ட பஜாஜ் நிறுவனத்தின் பிரபல இருசக்கர வாகன மாடல் ஒன்று மீண்டும் இந்திய சந்தையில் விற்பனைக்கு களமிறக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பஜாஜ் நிறுவனம் அதன் புகழ்பெற்ற இருசக்கர வாகன மாடலான பல்சர் 220 -ஐ மீண்டும் இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக சில பஜாஜ் இருசக்கர வாகன விற்பனையாளர்கள் பல்சர் 220-க்கான புக்கிங்குகளை ஏற்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றனர்.

பல்சர் 220எஃப்

புக்கிங்கை ஏற்க தொடங்கிட்டாங்க

ஒரு சில டீலர்கள் தாங்கள் பஜாஜ் பல்சர் 220எஃப் மாடலுக்கு புக்கிங்கை ஏற்க தொடங்கி இருக்கின்றோம் என சமூக வலைதளங்களில் பதிவிட்ட வண்ணம் இருக்கின்றனர். ஆகையால், வெகு விரைவில் பஜாஜ் நிறுவனத்திடம் இருந்து பல்சர் 220 பைக்கின் அறிமுகம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பஜாஜ் நிறுவனம் இந்த பைக் மாடலை முதன் முதலில் 2007 ஆம் ஆண்டிலேயே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

15 வருஷமா விற்பனையில் இருந்துச்சு

இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற டூ-வீலர் மாடல்களில் இதுவும் ஒன்று. புதுமுக மாடல்களின் வருகைக்கு இடமளிக்கும் விதமாக இந்த பைக்கை விற்பனையில் இருந்து அகற்றி பஜாஜ் நடவடிக்கை எடுத்தது. 15 ஆண்டுகளாக விற்பனையில் இருந்த நிலையில் திடீரென பல்சர் 220-ஐ பஜாஜ் வெளியேற்றியது. இந்த தகவல் ஒட்டுமொத்த இந்தியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குறிப்பாக, பல்சர் லவ்வர்களை இந்த தகவல் பெருத்த சோகத்தில் ஆழ்த்தியது என்றே கூறலாம்.

பல்சர் 220எஃப்

போன ஏப்ரல்லதான் திடீர்னு உற்பத்தியை நிறுத்தினாங்க

அட்டகாசமான ஸ்போர்ட்டி தோற்றம், சீறிய பாயும் திறன் கொண்ட இருசக்கர வாகனமாக இது சந்தையில் விற்பனைக்குக் கிடைத்து வந்தது. இதனாலேயே இதன் வெளியேற்றம் பலரை சோகத்தில் மூழ்க செய்தது. இந்த மாதிரியான சூழலிலேயே பல்சர் 220எஃப்-க்கான புக்கிங் மீண்டும் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2022 ஏப்ரலில் இதன் உற்பத்தி அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டது.

விற்பனை கம்மியா இருந்துச்சு

இந்நிலையில், மீண்டும் இந்த பைக்கின் உற்பத்தி பணிகள் தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பல்சர் 220எஃப் பைக்கின் வெளியேற்றத்திற்கு அதன் குறைவான விற்பனை சதவீதமும் ஓர் முக்கிய காரணமாக இருக்கின்றது. கடந்த ஆண்டின் சில மாதங்களில் 1,000 யூனிட்டுகளைகூட எட்டாத நிலையில் அதன் விற்பனை இருந்தது குறிப்பிடத்தகுந்தது. விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் பல்சர் 220எஃப் மாடலில் லேசான மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

பல்சர் 220எஃப்

கணிசமான மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுது

உருவம் மற்றும் ஸ்டைலில் கணிசமான மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இதுதவிர, எஞ்ஜினிலும் புதிய பிஎஸ் 6 ஃபேஸ் 2 விதிகளுக்கு ஏற்ற மாற்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய மாற்றங்களுடனேயே மீண்டும் பல்சர் 220 எஃப் சந்தையை வந்தடைய இருக்கின்றது. அதேநேரத்தில், இதன் லுக்கில் எந்த மாற்றமும் இருக்காது என கூறப்படுகின்றது. பழைய பல்சர் 220 எஃபை பிரதிபலிக்கக் கூடிய தோற்றம் அப்படியே பயன்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

முன்பு விற்பனையில் இருந்த 220 எஃப் பைக் அதிக ஸ்போர்ட்டியான தோற்றம் கொண்டதாக இருந்தது. இந்த லுக்கிற்காக ஸ்பிளிட் ரக இருக்கை, ஸ்பிளிட் கிராஃப் ரெயில் பார்கள், லேசர் எட்ஜ் கிராஃபிக்குகள் மற்றும் டீப் பிளாக் கார்பன் சைலென்சர் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருந்தன. மேலும், தனித்துவமான கிராஃபிக்குகள் கொண்ட அண்டர்பெல்லி பேன் அமைப்பம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

பல்சர் 220எஃப்

அதே அம்சங்கள் இதிலும் எதிர்பார்க்கப்படுது

இதுதவிர சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக பைக்கின் முன் பக்க வீலிற்கு 260 மிமீ டிஸ்க்கும், பின் பக்க வீலில் 230 மிமீ டிஸ்க்கும் பொருத்தப்பட்டது. இத்துடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் அம்சமும் பல்சர் 220எஃப்-இல் வழங்கப்பட்டது. இதே அம்சங்கள் விரைவில் வரவிருக்கும் பல்சர் 220எஃபிலும் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 16, 2023, 20:09 [IST]
English summary
Bajaj planning re introduce pulsar 220f in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X