பைக் ஸ்டண்ட் எதுவென்றே நிறைய இளைஞர்களுக்கு தெரியல!! புரோஃபெஷ்னல் ரைடர்ஸ் என்ன இப்படி சொல்லிட்டாங்க!
பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம் சார்பில் மும்பையில் பல்சர் மேனியா 2.0 நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சியில், பஜாஜ் நிறுவனத்தின் அடையாளமான பல்சர் பைக்குகள் ஹைலைட்டாக சுட்டிக்காட்டப் படுகின்றன. முன்னதாக, கடந்த ஜூலை மாதத்தில் கோயம்புத்தூரில் பல்சர் மேனியா 2.0 நடத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து, செப்டம்பரில் வாரணாசியில் நடத்தப்பட்டது. அதற்கடுத்து தற்போது மும்பையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், நமது தமிழகத்தை சேர்ந்த பைக் ஸ்டண்ட் வீரர்களான சரவணா, செந்தில் குமார் மற்றும் அபிஷேக் ஆகியோர் கலந்துக் கொண்டனர். அவர்கள் மூவருடனும் ஓர் சிறிய உரையாடலை நாங்கள் மேற்கொண்டோம்.
பல்சர் மேனியா 2.0 நிகழ்ச்சிக்கு இடையே நடத்தப்பட்ட அந்த பேட்டியை மேலே உள்ள வீடியோவில் காணலாம். இன்றைய காலத்தில், இளைஞர் பொது சாலையில் ஆபத்தான முறையில் பைக் ஸ்டண்ட்களில் ஈடுப்படுவதை அவ்வப்போது பார்க்க முடிகிறது. அவர்களை பற்றி பேசிய இந்த தொழில்முறை ஸ்டண்ட் வீரர்கள், இன்றைய கால இளைஞர்கள் தவறான வழியில் சென்றுக் கொண்டிருப்பதாக ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர்.

எந்தவொரு பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் பொது இடங்களில் ஸ்டண்ட் செய்வது, ஆக்ரோஷமான விதத்தில் பைக் ஓட்டுவது உள்ளிட்டவற்றால் அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படும் என கூறிய இந்த ஸ்டண்ட் வீரர்கள், இதன் காரணமாக பைக் ஸ்டண்ட் ஸ்போர்டின் பெயரும் கெடுவதாக இந்த பேட்டியில் தெரிவித்துள்ளனர். இதனால், எங்களை போன்ற புரோஃபெஷ்னல் ரைடர்கள் பாதிக்கப்படுவதாகவும் தங்களது மனகுமுறல்களை இந்த பேட்டியில் அவர்கள் கொட்டி தீர்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








