பல்சரில் இன்னொரு 150 சிசி மாடலா!.. இதோட விலையை கேட்டீங்கனா இப்பவே ஒன்ன புக் பண்ணிடுவீங்க!

பஜாஜ் ஆட்டோ, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதன் பல்சர் என்150 (Bajaj Pulsar N150) மாடல் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கின்றது. மிகுந்த ஸ்போர்ட்டியான தோற்றத்தைக் கொண்ட தினசரி பயன்பாட்டிற்கு உகந்த டூ-வீலர் மாடலே இந்த புதிய பல்சர் என்150 ஆகும்.

இதற்கு அறிமுக விலையாக ரூ. 1.17 லட்சம் விலையை பஜாஜ் நிர்ணயம் செய்திருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. எஞ்ஜின் திறன் வெளியேற்றும் மற்றும் மைலேஜ் வழங்குதல் உள்ளிட்ட விஷயங்களில் இந்த புதிய பல்சர் என்150 ஆனது, அதன் முந்தைய வெர்ஷனான பல்சர் 150யைப் போலவே இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

Bajaj pulsar n150 bike

ஆனால், இதன் ஸ்டைல் மற்றும் அம்சங்கள் புதியவை ஆகும். அதேவேளையில், பிற பல்சர் மாடல்களில் இருந்தும் குறிப்பிட்ட சில சிறப்பம்சங்களை இந்த புதிய மாடல் பைக் பெற்றிருக்கின்றது. அந்தவகையில், பல்சர் என்160 மாடலின் டிசைனிங் யுக்தியை இந்த பைக் பெற்றிருக்கின்றது. முன் பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் ஷார்ப்பான எல்இடி புரஜெக்டர் வகை ஹெட்லேம்ப் இதற்கு சான்றாக இருக்கின்றது.

இதுதவிர, கட்டுமஸ்தான ஃப்யூவல் டேங்க், உடல் நிறத்தினாலான எஞ்ஜின் குவார்ட், முன் பக்க மட்குவார்டு உள்ளிட்டவை இந்த பைக்கின் தனித்துவமான தோற்றத்திற்காக வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, கான்ட்ராஸ்டான நிறம் கொண்ட கூறுகளையும் இந்த பைக்கின் குறிப்பிட்ட சில பகுதிகளில் காண முடிகின்றது.

நிற தேர்வை பொருத்த வரை ரேசிங் ரெட், மெட்டாலிக் பேர்ல் ஒயிட் மற்றும் இபோனி பிளாக் ஆகிய நிற தேர்வுகளிலேயே புதிய பல்சர் என்150 விற்பனைக்குக் கிடைக்கப் போகின்றது. இந்த நிறங்களும் பல்சர் என்150 மிகுந்த ஸ்போர்ட்டியான தோற்றத்தை வழங்கும் வகையில் இருக்கின்றது.

இதுமட்டுமில்லைங்க, படிக்கட்டு போல அடுக்கான தோற்றம் கொண்ட இருக்கை, மெல்லிய எக்சாஸ்ட் மற்றும் ஃப்ளோட்டிங் வகை பாடி பேனல்கள் போன்ற அம்சங்களும் இந்த பைக்கின் புதிய ஸ்போர்ட்டி தோற்றத்திற்காக வழங்கப்பட்டு இருக்கின்றன. எஞ்ஜினைப் பொருத்த வரை இந்த பைக்கில் 149.68 சிசி, 4 ஸ்ட்ரோக் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இது ஓர் சிங்கிள் சிலிண்டராகும். இந்த எஞ்ஜின் 14.5 பிஎஸ் பவரையும், 13.5 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடனே இந்த எஞ்ஜின் இயங்கும். சஸ்பென்ஷனைப் பொருத்தவரை முன் பக்க வீலில் டெலிஸ்கோபிக்கும், பின் பக்கத்தில் மோனோஷாக்கும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இரண்டும் இந்தியாவின் கரடு-முரடான சாலைகளுக்கு ஏற்றவை ஆகும். இதேபோல் மிக சிறந்த பிரேக்கிங் செட்-அப்பையே இந்த பைக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் கூடிய 240 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 130 மிமீ டிரம் பிரேக் அம்சமே இந்த பைக்கில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

பஜாஜ் பல்சர் வரிசையில் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் 2ஆவது 150சிசி மோட்டார் சைக்கிள் இது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஏற்கனவே நிறுவனம் பி150 மாடலை 150சிசி பைக்கை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அதேவேளையில், இதனைகு ரீபிளேஸ் செய்யும் விதமாகவே புதிய பல்சர் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.

சிறப்பம்சங்களைப் பொருத்த வரையில் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், நடுத்தர டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் உள்ளிட்ட அம்சங்கள் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், ப்ளூடூத் இணைப்பு வசதி கொடுக்கப்படவில்லை. இதுபோன்று குறிப்பிட்ட சில அம்சங்களை மட்டுமே இந்த பைக் இழந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நீண்ட காலமாக விற்பனையில் இருக்கும் இருசக்கர வாகன மாடல்களில் பல்சர் பைக்கும் ஒன்றாகும். இந்த பைக் மாடலிலேயே புதிய தேர்வை பஜாஜ் தற்போது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கும் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் மற்ற பல்சர் மாடல்களைப் போலவே நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 26, 2023, 18:36 [IST]
English summary
Bajaj pulsar n150 launched in india here is price and features details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+