பாதுகாப்பு இல்ல! பிரபலமான பல்சர் பைக்கின் விற்பனை திடீர் நிறுத்தம்! சத்தமே இல்லாம ஓரங்கட்டிய பஜாஜ்!
பஜாஜ் பல்சர் என்160 சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வேரியண்ட் (Bajaj Pulsar N160 Single Channel ABS Variant) விற்பனை சத்தமே இல்லாமல் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. பஜாஜ் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்களிடம் விசாரித்ததன் மூலமாக இந்த தகவல் நமக்கு தெரியவந்துள்ளது.
வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு இல்லாத காரணத்தால், பஜாஜ் நிறுவனம் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பஜாஜ் பல்சர் N160 பைக் இனி ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வேரியண்ட்டில் (Bajaj Pulsar N160 Dual Channel ABS) மட்டுமே கிடைக்கும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) 1.31 லட்ச ரூபாய் ஆகும்.

வாடிக்கையாளர்கள் பலரும் தற்போது ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வேரியண்ட்டிற்குதான் அதிக முன்னுரிமை வழங்குகின்றனர். சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வேரியண்ட் உடன் ஒப்பிடும்போது, ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வேரியண்ட் அதிக பாதுகாப்பானது என்பதுதான் இதற்கு காரணம். இந்த 2 வேரியண்ட்களுக்கான விலை வித்தியாசமும் கூட வெறும் 5,000 ரூபாய் மட்டுமே.
எனவே சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வேரியண்ட்டை காட்டிலும், 5,000 ரூபாய் அதிகமாக கொடுத்து, ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வேரியண்ட்டை வாங்குவதுதான் பாதுகாப்பானது மற்றும் புத்திசாலித்தனமானது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் பலரும் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வேரியண்ட்டை விரும்புவதால், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வேரியண்ட்டின் விற்பனை சத்தமே இல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளது.

செயல்திறனை பொறுத்தவரையில், பஜாஜ் பல்சர் என்160 பைக்கில், 164.82 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 8,750 ஆர்பிஎம்மில் 15.6 பிஹெச்பி பவரையும், 6,750 ஆர்பிஎம்மில் 14.65 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் முன் பகுதியில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 17 இன்ச் அலாய் வீல்கள் மூலம் இந்த பைக் இயங்குகிறது. ப்ரூக்ளின் பிளாக், ரேசிங் ரெட் மற்றும் கரீபியன் ப்ளூ என 3 கலர் ஆப்ஷன்களில் இந்த பைக் கிடைக்கிறது.
சுஸுகி ஜிக்ஸர் 155 (Suzuki Gixxer 155), யமஹா எஃப்இஸட்-எஸ் எஃப்ஐ வி3.0 (Yamaha FZ-S Fi V3.0), டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி (TVS Apache RTR 160 4V) மற்றும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி (Hero Xtreme 160R 4V) ஆகிய பைக்குகள் உடன், பஜாஜ் பல்சர் என்160 போட்டியிட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ட்யூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம், பைக்கை நிறுத்தும் திறனை மேம்படுத்துகிறது. குறிப்பாக சடன் பிரேக் பிடிக்கும் சமயங்களில், இது நல்ல பாதுகாப்பை வழங்கும். எனவே வாடிக்கையாளர்கள் சற்று அதிக விலை கொடுத்து, ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வேரியண்ட்டை வாங்க தயாராக உள்ளனர்.
இதன் காரணமாகவே பஜாஜ் நிறுவனம் பல்சர் என்160 பைக்கின் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வேரியண்ட்டை விற்பனையில் இருந்து விலக்கியுள்ளது. இது உண்மையிலேயே, வேகமாக மாறி வரும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப, பஜாஜ் நிறுவனம் மேற்கொண்ட புத்திசாலித்தனமான நடவடிக்கை என்பதே எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications








