பல்சர் பைக்கை வாங்கும் பிளானில் உள்ளீர்களா? இதுதான் சரியான நேரம்... புதிய நிறத்தில் என்எஸ் பைக்குகள்!!

பஜாஜ் பல்சர் என்.எஸ்200 & பல்சர் என்.எஸ்160 (Bajaj Pulsar NS200 & Pulsar NS160) பைக்குகள் புதிய நிறத்திலான பெயிண்ட் தேர்வுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய நிறங்களில் இந்த பல்சர் என்.எஸ் பைக்குகள் எவ்வாறு உள்ளன? என்பது பற்றிய முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.

பல்சர் பைக்குகள் தான் பஜாஜ் ஆட்டோவின் தற்போதைய கால அடையாளம் என்றால், அதில் மிகையில்லை. அந்த அளவிற்கு ஒவ்வொரு மாதத்திலும் ஆயிரக்கணக்கிலான பல்சர் பைக்குகளை விற்பனை செய்துவரும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர் விற்பனையில் இருக்கும் பைக் மாடல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியிலும் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகிறது. இந்த வகையில் சமீப ஆண்டுகளில் என்.எஸ்160, என்160, பி150 என ஏகப்பட்ட பல்சர் பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

bajaj pulsar ns bikes new colour option

அதேநேரம் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் பல்சர் பைக்குகளின் விற்பனையை தொடர்ந்து அதிகரிக்க, அவ்வப்போது அவற்றை அப்டேட் செய்வதையும் பஜாஜ் மறப்பதில்லை. இந்த வரிசையில், பஜாஜ் பல்சர் என்எஸ்200 மற்றும் என்எஸ்160 பைக்குகள் புதிய பெவ்டர் கிரே நிற பெயிண்ட் தேர்வை பெற்றுள்ளன. இதே நிறத்திலான பெயிண்ட் தேர்வு ஏற்கனவே மேற்கூறப்பட்ட என்எஸ் பைக்குகளில் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால் இந்த முறை பைக்கின் கிராஃபிக்ஸ் திருத்தப்பட்டுள்ளது. அதாவது, அதே நீலம் & கிரே நிறத்திலான பெயிண்ட் தான். ஆனால் இந்த நிறங்கள் பைக்கில் வழங்கப்படும் இடங்கள் மாற்றப்பட்டுள்ளன. முன்பு, என்எஸ்200 மற்றும் என்எஸ்160 பைக்குகளின் பெவ்டர் கிரே பெயிண்ட்டில் முழுக்க முழுக்க கிரே நிறம் மட்டுமே இருந்தது. கருப்பு நிற ஹைலைட்களை ஆங்காங்கே பார்க்க முடிந்தது.

bajaj pulsar ns bikes new colour option

ஆனால் புதிய பெவ்டர் கிரே நிற பெயிண்ட்டில் கிரே மற்றும் கருப்பு நிறங்களுடன் நீல நிறமும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை தவிர்த்து இந்த என்எஸ் பைக்குகளில் வேறெந்த மாற்றமும் இல்லை. இதனால் பைக்குகளின் விலைகளிலும் மாற்றம் இல்லை. பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.49 லட்சமாகவும், பல்சர் என்எஸ்160 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.37 லட்சமாகவும் தற்சமயம் உள்ளன.

பல்சர் என்எஸ்200 மற்றும் என்எஸ்160 பைக்குகளுக்கு வழங்கப்படும் மற்ற நிறத்தேர்வுகளாக எபோனி கருப்பு, பேர்ல் மெட்டாலிக் வெள்ளை மற்றும் காக்டெயில் வைன் சிவப்பு உள்ளிட்டவை உள்ளன. பல்சர் என்எஸ் பைக்குகள் கடைசியாக நடப்பு 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் அப்டேட் செய்யப்பட்டன. அப்போதும் பைக்குகளின் என்ஜின் மட்டுமே பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளின் 2ஆம் கட்டுப்பாடுகளுக்கு ஏற்பவும், ஒபிடி-2 இணக்கமானவைகளாகவும் அப்டேட் செய்யப்பட்டன.

bajaj pulsar ns bikes new colour option

பல்சர் என்எஸ்200 பைக்கில் 199.5சிசி சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 24.1 பிஎச்பி மற்றும் 18.74 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. என்எஸ்160 பைக்கில் 160.3சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. 17.03 பிஎச்பி மற்றும் 14.6 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: உண்மையில், இந்த புதிய பெயிண்ட் தேர்வில் கிரே நிறத்தை விட நீல நிறமே நமது கவனத்தை முதலில் கவர்கிறது. ஒட்டு மொத்தமாக, வேறெந்த அப்டேட்டும் இல்லாவிடினும் இந்த புதிய பெவ்டர் கிரே நிற பெயிண்ட்டில் என்எஸ்200 மற்றும் என்எஸ்160 பைக்குகள் புத்துணர்ச்சியானவைகளாக உள்ளதை கூறியே ஆக வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Saturday, June 10, 2023, 17:01 [IST]
English summary
Bajaj pulsar ns200 pulsar ns160 new pewter grey colour option
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X