மைலேஜ் சும்மா தாறுமாறா கிடைக்குமே! பெட்ரோலுக்கு பதிலா பஜாஜ் கொண்டு வரப்போற புதிய பைக் பத்தி தெரியுமா?

பஜாஜ் நிறுவனம் தனது 100 சிசி பைக்கில் சிஎன்ஜி வெர்ஷனை அறிமுகப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது. இது போக பஜாஜ் பல்சர் பைக்கின் அதிக சிசி இன்ஜின் கொண்ட வெர்ஷனையும் அறிமுகப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் விற்பனையாகும் தனது பைக்குகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில் பஜாஜ் நிறுவனம் டிரையம் மற்றும் கேடிஎம் ஆகிய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து தனது ஆலையில் அந்நிறுவனத்தின் பைக்குகளை தயாரித்து விற்பனைக்கு அனுப்பி வருகிறது.

bajaj cng bike

தற்போது பஜாஜ் நிறுவனத்திடம் அல்சர் பைக்கில் பி150, என்160,என்250, எஃப்250 ஆகிய மாடல்கள் விற்பனையாகி வருகிறது. இது போக பஜாஜ் ஆலையில் டிரையம் ஸ்பீட் 400, கேடிஎம் புதிய தலைமுறை 250 டியூக் மற்றும் 390 டியூக் ஆகிய பைக்குகளும் தயாராகி விற்பனைக்கு விற்பனைக்கு அனுப்பபட்டு வருகிறது.

இந்நிலையில் பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் சமீபத்தில் ஊடகத்தினருக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் பல முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி பஜாஜ் நிறுவனம் இந்த நிதியாண்டிலேயே மிக அதிக திறன் கொண்ட பல்சர் பைக்கை அறிமுகப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.

bajaj cng bike

அதன்படி அதிக திறன் கொண்ட பல்சர் பைக் ஒரு ஸ்போர்ட்ஸ் ரக பைக்காகவோ அல்லது நேக்கட் ஸ்ட்ரீட் பைட்டர் பைக்காகவோ அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 400 சிசி திறன் கொண்ட இன்ஜின் இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது இளைஞர்கள் மத்தியில் 400 சிசி செக்மென்ட் கொண்ட பைக் மீது ஆர்வம் அதிகமாக இருப்பதால் இந்த ரக பைக்கை தயாரிக்க பஜாஜ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இது மட்டுமல்ல பஜாஜ் நிறுவனம் மற்றொரு முக்கியமான முடிவையும் எடுத்துள்ளது. அதன்படி 100சிசி செக்மெண்டில் உள்ள பைக்கில் சிஎன்ஜி ஃப்யூயல் ஆப்ஷனை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. மேலும் பஜாஜ் நிறுவனம் தரப்பிலிருந்து மத்திய அரசுக்கு சிஎன்ஜி ரக பைக்கில் அறிமுகமானால் அதன் ஜிஎஸ்டி வரி 18% ஆக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

சமீபத்தில் பஜாஜ் நிறுவனத்தில் 100 முதல் 200 சிசி திறன் கொண்ட பைக்குகளின் விற்பனை 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் நிறுவனத்தின் தயாரிப்புகள் மக்கள் விரும்பும் தயாரிப்பதாக மாறி உள்ளது. இந்நிலையில் பஜாஜ் நிறுவனம் சிஎன்ஜி பைக குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த பைக் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

தற்போது சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரித்து வருகிறது. இதில் தான் தற்போது பஜாஜ் நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அடுத்து வரவுள்ள பண்டிகை காலங்களில் பஜாஜ் நிறுவனம் ஒரு மாதத்திற்கு 10,000 சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் மாதம் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வாகனங்களை தயாரிக்கும் வகையில் பஜாஜ் ஸ்கூட்டரின் தயாரிப்பை அதிகப்படுத்த முடிவு செய்துள்ளது.

பஜாஜ் நிறுவனம் சிஎன்ஜி பைக் குறித்த அப்டேட்டை அடுத்தடுத்து வெளியிடும்போது இந்த ரக பைக் குறித்து மக்கள் மத்தியில் மோகம் அதிகமாகும். சிஎன்ஜி பைக்குகள் பெட்ரோல் பைக்குகளை விட அதிக மைலேஜ் கொடுக்கும் திறன் கொண்டதாக இருக்கும். அதே நேரம் சுற்றுச்சூழலுக்கு குறைவான மாசுவை ஏற்படுத்தும் இதனால் இந்த பைக்கில் சிறப்பான விற்பனையை பெறும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிஎன்ஜி பைக் என்ற புதிய கான்செப்ட் அறிமுகமானால் இந்திய டூவீலர் மார்க்கெட்டிலேயே மிகப்பெரிய புரட்சி ஏற்படும். மற்ற டூவீலர் தயாரிப்பார்களும் இந்த ரக பைக்குகளை அறிமுகப்படுத்த களம் இறங்கிவிடுவார்கள். இதனால் பெட்ரோல் டூவீலர்களின் விற்பனை வெகுவாக சரிய கூட வாய்ப்புகள் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 19, 2023, 13:05 [IST]
English summary
Bajaj reportedly set to introduce a 100 cc cng motorcycle in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+