Triumph Bike உற்பத்தியை கையில் எடுக்கும் பஜாஜ்.. பலே ஆளு நம்ம.. கேடிஎம், ஹஸ்க்வர்னாவையும் இதுதான் தயாரிக்குது!

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் பஜாஜ் ஆட்டோவும் ஒன்று. இந்த நிறுவனம் டூ-வீலர்களை மட்டுமின்றி மூன்று சக்கர வாகனம் (ஆட்டோரிக்ஷா) மற்றும் நான்கு சக்கர வாகனமான குவாட்ரிசைக்கிள் ரக வாகன (க்யூட் எனும் குட்டி கார்) உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகின்றது.

அதேவேளையில், தன்னுடைய நிறுவனத்தின் சொந்த தயாரிப்புகள் மட்டுமின்றி, சில வெளிநாட்டு நிறுவனங்களின் மோட்டார்சைக்கிளின் உற்பத்தியிலும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. கூட்டணியின் அடிப்படையிலேயே இந்த பணியை அது மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், ஏற்கனவே பஜாஜ் ஆட்டோவானது கேடிஎம், ஹஸ்க்வர்னா ஆகிய பிராண்டுகளின் இந்திய வர்த்தக பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

Triumph drg t120 full view

இந்த நிலையில், இந்தியாவிற்கான டிரையம்ப் இருசக்கர வாகன உற்பத்தியையும் பஜாஜ் ஆட்டோவே செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்னும் இதற்கான அனுமதியை பஜாஜ் அதிகாரப்பூர்வமாக கையகம் செய்யவில்லை என கூறப்படுகின்றது. அதேவேளையில், இதற்கான பணிகளே தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், அது விரைவில் நிறைவுறும் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

மோட்டார்சைக்கிள் உற்பத்தி, சந்தைப்படுத்துதல் மற்றும் வணிகப் பிரிவு என இந்தியாவில் ட்ரையம்ப் நிறுவனம் மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளையும் பஜாஜ் தன்னுடைய பொறுப்பின்கீழ் மேற்கொள்ள இருக்கின்றது. மூன்று ஆண்டுகளுக்கே முன்னரே இதுபற்றிய அறிவிப்புகள் வெளியாகிவிட்டன. ஆனால், இப்போதே அந்த பணிகள் செயல்பாட்டிற்கு வர தொடங்கி இருக்கின்றது.

Triumph rocket 3 gt

அதாவது, டிரையம்ப் நிறுவனத்தின் அனைத்து இந்திய நடவடிக்கைகளையும் பஜாஜ் தன்னுடைய கைகளுக்கு மாற்றிக் கொள்ள இருக்கின்றது. பஜாஜ் நிறுவனம் டிரையம்ப் நிறுவனத்தின் மிடில்-வெயிட் (middleweight) ரக மோட்டார்சைக்கிள்களையே உற்பத்தி செய்ய இருக்கின்றது. இதுதவிர, டிரையம்ப் நிறுவனத்தின் வாகன விற்பனையகங்களும் பஜாஜின் கன்ட்ரோலின் கீழே இயங்க இருக்கின்றன.

ஏற்கனவே, 15 டீலர்ஷிப்புகள் பஜாஜ் நிறுவனத்தின்கீழ் இயங்கத் தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பஜாஜ் நிறுவனம் மிகப் பெரிய நெட்வொர்க்கைக் கொண்டது பிராண்ட் ஆகும். நிறுவனத்தின்கீழ் 6 ஆயிரத்திற்கும் அதிகமான டீலர்கள் மற்றும் சப் டீலர்கள் தற்போது நாடு முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

பஜாஜுடன் இணைந்திருப்பதால் டிரையம்ப் பைக்குகள் இந்த மிகப் பெரிய நெட்வொர்க்கின் வாயிலாக விற்பனைக்குக் கிடைக்கும் சூழல் உருவாகி இருக்கின்றது. ஆகையால், எதிர்காலத்தில் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்களின் விற்பனை இன்னும் பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், பஜாஜின் கைகளுக்கு டிரையம்ப் வந்திருப்பதால் அந்த பிராண்ட் பைக்குகளின் விலை சற்று குறைவதற்கான வாய்ப்புகளும் உருவாகி இருக்கின்றது.

ஆகையால், நிச்சயம் டிரையம்ப் மோட்டார்சைக்கிள் விற்பனை எதிர்காலத்தில் லேசாக அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. 350 சிசி முதல் 400 சிசி மோட்டார்சைக்கிள்களே பஜாஜ் பிராண்டின்கீழ் விற்பனைக்குக் களமிறங்க இருக்கின்றன. இவை நிறுவனத்தின் பஜாஜ் சக்கன் உற்பத்தி ஆலையில் தயார் செய்யப்பட இருக்கின்றன.

ஆனால், டிரையம்ப்பின் எந்தெந்த மாடல்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன என்கிற விபரம் வெளியாகவில்லை. விரைவில் இது பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்த ஒரு சில தினங்கள் அல்லது வாரங்களுக்கு உள்ளாகவே இதுகுறித்த தகவல்கள் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா பிராண்டுகளின் மோட்டார்சைக்கிள்கள் பஜாஜ் பிராண்டின் கைகளுக்கு வந்த பின்னரே அவை மிக ஆழமாக வேறூன்றி இருக்கின்றன. குறிப்பாக, கேடிஎம் நல்ல வளர்ச்சியை சந்தையில் பெற்றிருக்கின்றது. இதேபோல், டிரையம்ப் நிறுவனம் இந்தியாவில் நல்ல வளர்ச்சியைக் காணும் என நாங்கள் யூகிக்கின்றோம். ஆனால், இதை பொருத்திருந்தான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, April 10, 2023, 20:42 [IST]
English summary
Bajaj takes over triumph motorcycles india business unit
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+