விலை இவ்ளோதானா! ராயல் என்பீல்டு இருந்த தடம் தெரியாம போக போகுது! 2 புதிய டிரையம்ப் பைக்குகள் களமிறங்கின!
பஜாஜ் - டிரையம்ப் கூட்டணியில் உருவான முதல் பைக்குகளாக ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிரம்பிளர் 400 எக்ஸ் என்ற பைக்குகளை சர்வதேச அரங்கில் அறிமுகமாகியுள்ளது.லண்டனில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த பைக்கின் இந்திய அறிமுகம் வரும் ஜூலை மாதம் 5ம் தேதி நடக்கும் என தெரிகிறது. இந்த பைக் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
பஜாஜ் நிறுவனமும் டிரையம்ப் நிறுவனமும் சர்வதேச அளவில் இணைந்து செயல்பட ஒப்பந்தம் போட்டுள்ளனர். அதன்படி அந்த இரு நிறுவனங்களும் சேர்த்து பைக்குகளை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரப்போகின்றனர். இந்தியாவின் தயாரிப்பு மற்றும் விற்பனையை பஜாஜ் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது. சர்தேச அளவில் டிசைன் உள்ளிட்ட அம்சங்களை டிரையம்ப் நிறுவனம் செய்யப்போகிறது.

இந்நிலையில் நிறுவனம் சேர்ந்து தயாரிக்கும் முதல் பைக்கிற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்தாண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இந்த டிரையம்ப் பைக்குகள்தான் இருக்கிறது. இந்நிலையில் தான் சர்வதேச அளவில் இந்த டிரையம்ப் பைக்குகள் தற்போது லண்டனில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பைக்குகள் குறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து காணலாம்.
இந்த டிரையம் பைக் மொத்தம் 2 வெர்ஷன்களாக அறிமுகமாகியுள்ளது. ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிரம்பிளர் 400எக்ஸ் என இரண்டு விதமான பைக்குகள் அறிமுகமாகியுள்ளன.இதில் ஸ்பீடு 400 பைக் டிரையம்ப் ஸ்பீடு 900 மற்றும் 1200ஐ அடிப்படையாக கொண்டும் ஸ்கிரம்பிளர் 400எக்ஸ் பைக் டிரையம்ப் ஸ்கிரம்பிளர் 900 மற்றும் 1200ஐ அடிப்படையாக கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் டிசைனை பொருத்தவரை லண்டனிலேயே செய்யப்பட்டுள்ளது. வழக்கைமான டிரையம்ப் பைக்கின் சில்லவுட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சிலிண்டர், எக்ஸாஸ்ட், மற்றும் உயர்தர குவாலிட்டி ஃபினிஷ், தங்க நிற ஃபோர்க், என மொத்தத்தில் பிரிமியம் லுக்கில் இருக்கும்படியாக இந்த பைக்குகள் தற்போது அறிமுகமாகியுள்ளது.
டிரையம்ப் ஸ்பீடு 400 பைக்கை பொருத்தவரை மொத்தம் 2 விதமான கலர் டோன்களில் விற்பனைக்கு வரவுள்ளது. கார்னிவெல் ரெட், கேஸ்பியன் ப்ளூ மற்றும் பாந்தோம் பிளாக் ஆகிய நிறங்களில் இந்த பைக் மார்கெட்டிற்கு வரவுள்ளது. இந்த நிறங்கள் தான் அதிகமாக விரும்பபடும் நிறங்களாக உள்ளன.

ஸ்கிரம்பிளர் 400 எக்ஸ் பைக் ஆஃப்ரோடிங் பைக் என்பதால் இதில் பல பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறது. ஹெட்லைட், ரேடியேட்டர் மற்றும் சம்ப், ஆகிய பகுதிகளுக்கு பாதுகாப்பும், ஹேண்ட் கார்டுகளும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக் மேட் காக்கி கிரீன் மற்றும் ஃப்யூஷன் ஒயிட், கார்னிவெல் ரெட் மற்றும் பாந்தோம் பிளாக், மற்றும் பாந்தோம் பிளாக் மற்றும் சில்வர் ஐஸ் ஆகிய கலர் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வருகிறது.
இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 398 சிசி சிங்கிள் சிலிண்டர் ப்யூயல் இன்ஜெக்டெட் லிக்யூட் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 40 பிஎஸ் பவரையும் 37.5 என்எம் டார்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. ஒரே இன்ஜின் தான் இரண்டு வேரியன்ட் பைக்குகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இரண்டு பைக்கிற்கும் வெளிப்புறத்தோற்றம் மற்றும் அம்சங்கள் மாறுபடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் குறைவான வேகத்திலும் சிறப்பான பெர்ஃபாமென்ஸை தரும் வகையில் இதன் கிராங்க் சாஃப்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிக டார்க்கை வெளிப்படுத்தும் இன்ஜினாக வடிவமைக்கப்பட்டுள்ளது.டிரையம்ப் நிறுவனம் இதை முற்றிலும் புதிய இன்ஜினாக வடிவமைத்துள்ளது.
ஸ்பீடு 400 பைக் 790 மிமீ உயரத்தில் சீட் இருக்கும்படியும் ஸ்கிரம்பிளர் 400 எக்ஸ் பைக் 835 மிமீ உயரத்தில் சீட் இருக்கும்படியும் வடிவமைத்துள்ளனர்.ஸ்பீடு 400 பைக் மொத்தம் 170 கிலோ எடை கொண்டது. ஸ்கிரம்பிளர் 400 எக்ஸ் பைக் 179 கிலோ எடை கொண்டது.

அளவுகளை பொருத்தவரை ஸ்பீடு 400 பைக் 2056 மிமீ நீளமும், 795 மிமீ அலகமும், 1075 மிமீ உயரமும் 1377 மிமீ வீல் பேஸூம் கொண்டது. ஸ்கிரம்பிளர் 400 எக்ஸ் பைக்கை பொருத்தவரை 2117 மிமீ நீளமும், 825 மிமீ அகலமும், 1190 மிமீ உயரமும், 1418 மிமீ வீல் பேஸூம் கொண்டது. இந்த இரு பைக்குகளும் 13 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொள்ளவை கொண்டது.
ஸ்பீடு 400 பைக்கை பொருத்தவரை முன்பக்கம் 17 இன்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இதன் சஸ்பென்சன் செட்டப் தங்க நிறத்தில் 43 மிமீ பெரிய இன்வெர்டட் ஃபோர்க் பொருத்தப்பட்டுள்ளது. இது பார்க் அம்சமாக இருக்கிறது. பின்பக்கம் எக்ஸ்டர்னல் ரிசர்வர் உடன் கூடிய மோனோஷாக் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது.
ஸ்கிரம்பிளர் 400 எக்ஸ் பைக்கை பொருத்தவரை நீளமான வீல்பேல் கொண்டது. நீண்ட தூரம் பயணிக்கும் வகையில் 19 இன்ச் அலாய் வீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெரிய ஹேண்டில் பார் வழங்கப்பட்டுள்ளது. இது ஆஃப்ரோடிங்கில் ஹேண்டில் செய்ய வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 320 மிமீ டிஸ்க் பிரேக் சிறப்பாக பெர்ஃபார்ம் செய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
இது போக இந்த பைக்குகளில் ரைடு பை வயர் டெக்னாலஜி, டிராக்ஷன் கண்ட்ரோல் உடன் கூடிய ஏபிஎஸ், டூயல் ஃபார்மெட் இன்ஸ்ட்ரூமென்ட் ஆகிய அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளது. இதில் ஸ்பீடோமீட்டர், மீதம் உள்ள ஃப்யூயலில் எவ்வளவு தூரம் செல்லாம் என்ற தகவல், கியர் போசிஷன் என பல தகவல்கள் வழங்கப்படுகிறது.எல்லா விதமான லைட்டிங் கண்டிஷனிலும் தெரியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்குகளில் டார்க் அசிஸ்ட் கிளட்ச், ஆல்-எல்இடி லைட்டிங், ஃபேக்டரி ஃபிட்டெட் பாதுகாப்பு அம்சங்களாக ஹேண்டில் பார் லாக், ஆண்டி- தெஃப்ட் இம்மொபிலைஸர், ஓனர் மட்டுமே பயன்படுத்தும் வகையில் மற்றவர்கள் பயன்படுத்த முடியாதபடி இக்னீஷியன் சாவியில் டிரான்ஸ்பான்டர் சிப் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது.
இந்த பைக்கிற்கு மொத்தம் லக்கேஜ் கொண்டு செல்வது மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவைகளுக்காக 25 விதமான ஆக்ஸசரீஸ் வழங்கப்படுகிறது. இதை ரைடர்கள் பயன்படுத்திக்கொள்ளனர். மிக முக்கியமாக இந்த பைக்கை 16 ஆயிரம் கி.மீ இடைவெளியில் சர்வீஸ் செய்தால் போதும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த பைக்குகள் இந்தியாவில் ஸ்பீடு 400 பைக் ரூ2.5 லட்சம் என்ற விலையிலும், ஸ்கிரம்பிளர் ரூ2.8 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இந்த இரண்டு பைக்குகளும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் பஜாஜ் ஆலையில் முழுவதுமாக தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வரவுள்ளது. வரும் ஜூலை மாதம் முதல் இதன் விற்பனை துவங்கும் என கூறப்படுகிறது.
இதில் ஸ்பீடு பைக் மார்கெட்டில் ஏற்கனவே விற்பனையாகி வரும் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 ,கிளாசிக் 350, ஹோண்டா சிபி350ஆர்எஸ் ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக களம் இறங்குகிறது. ஸ்கிரம்பிளர் பைக்கை பொருத்தவரை ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 411 மற்றும் யெஸ்டி ஸ்கிரம்பிளர் ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக களம் இறங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ்-டிரையம்ப் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த பைக்கிற்கு மார்கெட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்த பைக்கின் வருகைக்காக பலர் காத்திருக்கின்றனர். தற்போது சர்வேதச மாடல் வெளியாகியுள்ள நிலையில் இந்த மாடல் வெளியாகும் போது புக்கிங் துவங்கினால் பெரிய அளவில் இந்த பைக் புக் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









